Posts

Showing posts from July, 2014

வழமை போல கண்களை மூடுங்கள்

Image
குழந்தைகளைத் தேடித் திரியும்  பயங்கர ஆயுதத்தின் காலமிது  வான் பிளக்கும் சத்தத்தோடு  பெரும் வெடிகுண்டை சந்திக்கும்  காசாவின் பள்ளத்தாக்கில்  இரத்தங் கசிகிறது  வெட்ட வெளியில் இரையும்  போர் விமானத்தின் கீழ்  பதற்றத்தோடு ஓடும்  சிறுமியின் காலடிச் சத்தத்தில்  ஒரு கனவு சாம்பலாகிறது  மாபெரும் கவிதைகள் காலமாகின்றன  பிணச் சகதியாய் பாலைமாறுகிறது குரூரமான விதி கலவரத்தோடு வழிகிறது  துயரத்தின் மூக்கு ருசித்த களைப்பில்  சுவரில் நிலைத்து நிற்கிறது  இனி சாவின்றி ஏதுமில்லை  ஷெல் துண்டுகளை குளம்புகளாக்கி  ஒப்பாரிகளில் நடக்கத் தொடங்குவோம்  அதற்கு மேல் ஒன்றும் இல்லை -அகரமுதல்வன்  01.08.2014

புலிப்பார்வையும் புலிப்போர்வையும்

Image
புலிப்பார்வை  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்விற்கு பின்னர் அதனை மூலமாக்கி தமிழ்நாட்டில் எழுந்த பல்வேறு தமிழியக்கங்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள்  எவ்வாறு பலவீனமானதாக இருக்கிறதோ அதைவிடப் பலவீனமானதாக இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகம். தமிழ்நாட்டில் தமிழீழ மக்களின் கண்ணீரும் அவர்களின் பெருந்துயரும் மிகப் பெரும் சந்தையாக விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கும் அவலச் சூழலில் உணர்வு கொந்தளித்து மனிதாபிமானம் பெருக்கெடுத்து கலைப் படைப்பின் ஊடாக பணத்தைப் பார்த்து விடத் துடிக்கும் மனித அழுகுரல் தின்னும் இவர்களை எதிர்த்து தான் ஆகவேண்டும். தமிழ்த் திரையுலகத்தில் தமிழீழ மக்களை முன்வைத்து வெளியான திரைப்படங்கள் ஒன்று திரைமொழிக்கு அப்பாற்பட்டு உணர்வு சார்ந்து ஒரு நாடகத்தன்மையில் எடுக்கப்பட்டிருக்கும் இல்லாது போனால் தமிழீழ விடுதலையை,அதற்காக போராடிய விடுதலை அமைப்பை கொச்சைப்படுத்தி,தவறாக சித்தரித்து எடுக்கப்படும். எனக்குத் தெரிந்து புன்னகை மன்னன் திரைப்படத்தில் சிங்களப் பெண்ணாக வரும் ரேவதியை கொலை செய்வதற்காக தமிழீழத் தமிழ் பேசுகின்ற இளைஞர்களை கூலிப்படையாக சித்தரித்து இ

காயங்கள் ஏந்திய துவக்குகள்

Image
எப்போதும் போல் தீவொன்றின் விடியல்  மரண நுரை தள்ளும் கரைகளில்  காயத்தின் குரலோடு மோதிக்கொள்கிறது  வீதி நெடுக நிர்வாணங்களாய் ஆக்கி  எமை எரித்த துயரம்  இரத்த ஓட்டத்தில் இன்னும் வெளிறாமல்  என்னிடம் நெருங்கி வருகிறது  துன்பத்தின் மேலிருக்கும் எனக்கான சொல்  தோட்டாக்கள் வெடித்த சத்தங்களிலிருந்து கட்டப்பட்டது வீதியோரங்கள் வெட்டப்பட்ட முத்தப்பனின் இறுதி மூச்சில் எழுதப்பட்டது றபான் இசைத்து வைலா ஆட்டத்தோடு குறிகள் துண்டித்த காமினிகளின் எக்காளச் சிரிப்பில் ஜூலை கறுப்பானது ஜூலை வெறுப்பானது ஜூலை கருவானது ஜூலை களமானது பிரகாசமான ஒரு காலத்தை கையேந்திய கைகள் நிலம் பிடுங்கும் சாத்தானை குறி பார்க்கத் தொடங்கியது. - அகரமுதல்வன் 23.07.2014

போரிலக்கியமும் பேரிலக்கியமும் நமதே

Image
அகநாழிகை நூல் நிலையத்தில் நேற்று நடந்த என்னுடைய அறம் வெல்லும் அஞ்சற்க கவிதை நூலிற்கான அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் தி.பரமேசுவரி ,விமர்சகர் கடங்கநேரியான் ,கவிஞர் மனுசி பாரதி, கவிஞர் வேல்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியமை குறிப்பிடத்தக்கது. முதலாவதாக கவிஞர் வேல்கண்ணன் பேசியமர்ந்ததற்கு பின்னர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய யாவரும்.காம் சகோதரர் ஜீவகரிகாலன் நிகழ்ச்சியில் நடந்த காரசார விவாதத்தின் முத ல் புள்ளியை தொட்டு தொடக்கி வைத்த விதம் மிகச் சிறந்தவிதமாக இருந்தது. தமிழீழ மண்ணைச் சேர்ந்த எனது கவிதைகளின் கீழேயே வந்து இலங்கைக் கவிதைகள் ரொம்ப பின்னோக்கி இருக்கிறது என கூறும் தமிழ் இலக்கியக் கவிதைப் பரப்பின் சமகால மன்னர்களுக்கும்,பவுத்தம் என்பது ஒரு மார்க்கம் என கூறுகிற ஆவணப்பட இயக்குனர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்தே தங்கள் காலத்தை ஒட்டி விடலாம் என நினைக்கும் அறமற்ற மாந்தர்களுக்கும் நேற்றைய நிகழ்வு நெற்றிப் பொட்டில் குறிபார்த்து சுட்டிருக்கிறது. கவிஞர் மனுசிபாரதி அவர்கள் என்னுடைய கவிதைகள் குறித்து ஆற்றிய உரையில் இருந்து கவிதைகள் பிறரிடம் ஆற்றிய எதிர்வினையை தெரிந்துக

எங்கே எனது வீடு

Image
எங்கிருந்தோ உருண்டோடி வந்த பாறை உள்ளங்கை மீறி ஓடும்  நதியின் நடுவில்  வீழ்ந்து தாழ்வதாய் கீழிறங்குகிறது தனிமையின் அடர்த்தி குருட்டு மொழியில் உயிர் சுமக்கும் கவிதைகளின் சொற்கள் தூரம் சென்று திரும்பி வர மறுப்பதாய் நினைவுகள் நீண்ட சுவர்களுக்கு பூச்சிட மறுக்கின்றன வண்ணங்கள் வெளுத்த வானவில்கள். அந்தியொழுகும் வானத்தின் மீது விரக்திகள் கல்லெறிய துரிதமாய் சுருங்கியது சூரிய பலூன். தினமும் எரிவதாய் காத்திருப்பை பிரவகிக்கும் வனாந்தரக் குரல் காயமுற்ற ஒரு நிழலாய் சாளரம் நோக்கி எழுந்து வருகிறது எங்கே எனது வீடு. -அகரமுதல்வன் 05.04.2014 நன்றி -கல்கி 

வெஞ்சமரின் பிரசவம்

Image
தலை சுற்றி  அயர்ந்து விழும் பூமியின்  மறுபக்கத்தில்  இருள் வளர்க்கும் சுழல்  பரிகாசம் செய்கிறது  கருவாகி திரளும் நாவற்ற துயரத்தை முற்றிலும் என்னில் அளாவி நேராகி நிற்கும் நிசப்தத்தின் பிழம்பு திமிறும் முகாந்திரம் அருகாமையில் ஆழமிடுகிறது கணத்தின் விரல்கள் எரியும் தனியறையில் வனாந்தர எச்சரிப்பு உட்புகுந்து சிறகு விரிக்கிறது உயிர் கசியும் பாடலோடு புதைந்து கிடக்கும் என் கனவுகளில் ஊடுருவும் சாத்தானின் நடை எச்சம் அழியும்வரை என்னை தழுவுகிறது இவ் வகை பொழுதுகளில் மண்ணின் நினைவில் அதிர்ந்து குரல் எழுப்பி குரூர இலக்கை முத்தமிடும் உதிரம் வெற்றியின் மிதப்பு . -அகரமுதல்வன் 01.05.2014

எதிரிகள் முத்தமிடும் மழைக்காலம்

Image
மழை மிதந்த வீட்டின் கதவில்  புன்னகைத்து நிற்கும் தலைவிக்கு கண்களால் கொஞ்சலிட்டு காதலின் நீரூற்றை கசிய செய்கிறான் தீண்டல் காற்று இலை தடவி அசையும் மணம் காலையின் கருவறையில் மைனாக்களாய் முத்தமிட நிகழும் கணத்தில் பூக்கள் கரைகின்றன இன்றைப் பிரிந்த இரவின் நினைவுகளின் சர்ப்பம் மினு மினுத்து நெளிய கிளையசைத்து சிலிர்க்கிறது உயிர் உருகும் யாசிப்பு யாரோ பிதற்றும் பாடலின் துவக்க வரியில் எதிரியென படிந்திருந்த சொற்கள் தலைவியின் பெருவெளியை கடக்க திணறியது உறை பனி உச்சியில் விறைத்த குழந்தையென அந் நிசப்தத்தில் அவள் கடந்த பாலை எதிரியெனும் சொல்லால் விரிந்தது எனினும் எல்லா தருணத்திலும் உதய மாகிக் கொண்டிருக்கிறாள் ஆன்மத்தின் தலைவனுக்காய் ஒரு கடவுளாகவும் ஆயிரம் குழந்தைகளாகவும் -அகரமுதல்வன் 07.05.2014

மே

Image
என்றுமே துயரங்களை அள்ளிவரும்  உணர்ச்சியின் நீரோட்டங்களை  எந் நிலத்தில் பாய்ச்சுவதற்கு விரும்புவதில்லை கடந்து செல்லும் வேட்கையின் காற்றில் இறக்கைகளுடன் பதியும் காற்சுவடுகளில் அப்பட்டமாய் ஊற்று விடும் தழும்புகளில் பிறிதொரு களம் வெடித்து எழுகிறது காலத்தில் தோன்றும் வானத்தில் கதறுகிற மவுனம் கனவை முடிப்பது போல உஷ்ணமாகிய குருதியில் பிரளயம் சூழ்கிறது. ஒப்பாரி இசைக்கும் பறவையின் வடிவம் புள்ளிகளிடும் சூழலில் பேரழிவின் மிச்சமாய் எல்லா மே மாதமும் என்னுடல் அகல விரிகிறது. - அகரமுதல்வன்  10.06.2014

தோற்றவனின் பள்ளியெழுச்சி

Image
நிராதரவாய் எரிந்தபடியலையும்  மேகத்தின் விரிப்பின் கீழ்  பாவ மூட்டை தூக்கி செல்லும்  எனக்கு எந்த பெயருமில்லை  உள்ளத்தில் பாயும் உஷ்ணக்காற்றின் தாக நதி  சுவாசக் குழியினூடே பாய்கிறது  யுத்த பூமியில் தோற்றுக் களைத்தவனின்  மீது படருகிற பாழ் காலத்தின் துவக்கத்தை நாடா வெட்டுகிறது  கனவுகளை எதிரொலிக்கும் காயங்களின் மீது  மற்றொரு சாகப்தத்தின்  உறுதி மொழியாய்  வேட்கையின் கம்பீரம் அறைகூவுகிறது  ரத்தத்தில் ஓடும்  பாய்ச்சலின் வெண்மை  எங்கும் என் நிழலாய் மிதக்க  சமர்க்கள மொழியில்  காற்று திடீரென வெடிக்கிறது. -அகரமுதல்வன்  10.06.2014

மரணத்திற்கு பின் உள்ள மரணம்

Image
மின் விசிறியில் சுழலும் நினைவுத் தூசிகள் பகலின் வெக்கையில் நடக்கத் தொடங்கியதும்  துளியும் விருப்பற்று ஏதோவொரு பாடலை கேட்டபடி  குப்புறக் கிடக்கும் என்னில் இருள் தின்னும் பூனையென உயிர் பெற்று எழுகிறது இன்மை மாய முகடெங்கும் விரல்களின் கால்கள் பின் தொடர கனவின் தசையில் சூன்யம் பூக்கிறது இடையில் விடுபட்டுப் போன மெல்லிய நாணம் நிலவென வளர்ந்து படுக்கையில் ஊர சுவாலை மூண்ட தனிமையின் முகம் கால்களற்றவனாய் பாயினிலிருந்து கெந்திச் செல்ல இன்னும் சூன்யத்தின் கொலைக் களங்களில் ஞாபகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. -அகரமுதல்வன் 10.06.2014 புகைப்படம் -அய்யப்ப மாதவன் 

முதுசம்

Image
நீயுன் சாவை அழைத்தபடி எங்கள் ஒப்பாரிக்கு நீளம் சேர்க்கும்  இந்த விடியலை முதலில் தீயிலடவேண்டும் தூக்க மாத்திரைகளை நினைவில் இருந்து தூர வீசியெறி  மரணத்தை மாத்திரை புள்ளியிடும்  வாழ்வின் முற்றங்களை உழுது தள்ளு நீ அன்பின் முதுசமாய் அலைபாயும் மழலைக் கடல் உந்தன் ஆழம் யாரால் அளவிட முடியும் உன் கவிதைகளை சுவர்களில் தொங்கவிடு அது காற்றை வருடி  அன்பறியா அகிலம் யாவும் படரட்டும் அழுவதிலும் அடம்பிடிப்பிலும் இயலாத குழந்தையாகவிருந்து  தனிமையின் இரவுகளை தாளமிட்டு ரசி உன் படுக்கையறையில் குளிர் பொதிந்த  கனவுகளை முட்டையிட்டு  அடை காத்துக் கொள் இப்பொழுதும் உன்னருகில்  பல்லாண்டு கால உறைதலோடு  தற்கொலையிருக்குமாயின்  வசீகராமான  உன் விரல் நகங்களால்  அதன் குரல் வளையை  கீறிக் கொல் எங்கிருக்கிறது தற்கொலையின் ஆதிமயிர். -அகரமுதல்வன்  11.06.2014

உக்கிரம்

Image
இருளின் உக்கிரத்தில் வளரும் நிசப்தம் புதிய கவிதையென மூச்சுவிடுகிறது மழலையின் உடல் மீது ஊரும் எறும்பைப் போல துன்பத் திரட்சி சிறைகளின் வெளி முழுதும் அலறித் தகிக்கும் அகமருகே ஒரு சாவின் முற்றம் விழிக்கிறது என்னுடல் நோகும் கூக்குரல் சுழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது சிங்கத் துவக்கின் பின்பக்கம் என் மூச்சுக் காற்றிலே என்னையே அழிக்கும் வரம் தேடிய குற்றுயிர் கணம் சிவந்து மறைகிறது இன்னுமே வலியடங்காது அசையுமென் நிழல் ஆங்காங்கே மிதந்து வரும் தசைகளோடு . சிறு மவுனத்தில் நெடுங்காலமாய் குமுறுகிறது. -அகரமுதல்வன்  23.06.2014

மூச்சின் மொழி

Image
இனி எழுதப் போவதில்லை என்றாலும் உனதழகின் துளி முல்லை நிலம் மழைத்தூறல் கானலில் சிதறுமெனில் இனியெனக்கு வாழ்வுமில்லை புழுங்கியழும் மனசு சுடுகாடு போல எரிந்தபடி ஒளிர்கிறது நீயற்ற தனிமை நிழலற்று நெடும் தூரம் வருந்தி காமத்தின் பகையில் கண்மூடிச் சாகிறது ஊதல் காற்று வம்பு செய்யும் இரவின் அரும்புகளை கழிந்த நாட்கள் வருத்துகிறது நெஞ்சில் ஊர்ந்த எறும்பின் மாலையில் நெளிந்தவுன் இனிப்புடல் வானமாய் சிவந்ததில் என் நெஞ்சம் உனக்கே உரிமை நீயற்று வாழ்வது நரகத்தை விட வருத்தம். -அகரமுதல்வன்  23.06.2014

இரத்த ஊற்றில் மிதக்கும் நான்

Image
முடிகளில் முள்ளுறக்கிய அரங்கில் வெந்து சாயும் தீராத் தாகம் கூர் தீட்டி விழுதுகளாய் குத்துகின்றன மண்ணுக்குள் இறங்கும் மழையின் செழுமையாய் ராட்சத காட்சி என்னில் நிகழ்கிறது சமீபத்தில் கருகிய ஒருவனுடலில் ஆழ வேர் பரப்பி தாளமிடும் ஒற்றைச் சொல்லின்றி சுடுகாட்டுப் பாடல் ஆதி நிலமுழுதும் தொங்கும் தசைகள் வலியுடன் காய்கிறது அமரும் வெடிகுண்டின் கைரேகை ஓயாமல் குளறும் புதைகுழியில் படிந்திருக்க இருளின் சிறகுதிர்த்தி காலத்தின் தகிப்பை மயிலின் தோகையென விடுதலை விரிக்கிறது. -அகரமுதல்வன்  23.06.2014

வெள்ளை வான் (White Van)

Image
கொடிய மரணத்தை  தலையணைகளின் மேல் வைத்து  நிலத்தில் நெளியும் தீயின் புகை கண்ணீரில் உறைந்த முகத்தின் சிதிலத்தில் அழுவது குறித்து கவலையிடாது சிலைகளாய் எழுகிறது யுத்தம் நெரித்த குரல் வளையிலிருந்து மீட்சிக்கான சத்தம் முதுமரமாய் துளிர்த்து நெடுமூச்சுடன் உடல்களாய் நகர கடத்தல்களுடன் சித்ரவதைகளுடன் வன்புணர்வுகளுடன் இரப்பை பசித்திருந்த அம்பாந்தோட்டை அரசனின் வெள்ளை வானிலிருந்து மணி இலையான்கள் கலைகின்றன. இங்கு ஒரு சாட்சி வெள்ளை வானிலிருந்து கலைகின்றது நாறிய உடலிலிருந்து துகள்களைளைத் தூக்கிச் செல்கிறது இரத்தம் சொட்டும் உடலில் அவகாசமில்லாது ஊரத் தொடங்கும் வேட்கையின் பாடல் வழி நெடுக மூச்சு விடத் திணற மரண நெடுவாடை அதீதமாய் சுழலும் கொலைக் களத்தில் நான் அழுவது குறித்து கவலையிடாத நீங்கள் புதையுண்ட எனது எலும்புகளின் சொற்களை கவிதைக்கு சேர்க்க. -அகரமுதல்வன் நன்றி -கலகம் இதழ்

முத்துமாலை சிதறும் உலகம்

Image
இந்த நிமிடம் கரைகிற  காதலின் உறைதல்  சொல்லிட முடியாத ரணத்தின்  கூரைகளில் கொடியெனப் பறக்கிறது  இன்னுமே பார்த்திராத என்னிதயத்தின்  அழுகைச் சத்தம்  சோவென பெய்யும் மாரியின்  சுரத்தை குழப்புகிறது  நீ எனது  ஆதியின் முத்தமழை  உயிர்த் துளையின் மூங்கில் காற்று  விடியலின் குயிலோசை  ஜீவிதத்தின் ஆன்ம நதி  கதறும் துயரத்தின் கன்றைப் போல  நீயில்லாத வெளியெங்கும்  பேசிக்கொண்டிருக்குமென்னை  மண்புழுவென நினைக்கிறது நடுவெய்யில்  சிற்றளவும் குளிர்மையின்றி  அலாதிப் பிரியத்துடன்  இப்பொழுது எழுத தொடங்கியிருக்கிறேன்  சொற்களின் கல்லறையில்  இறந்தகாலத்தில் உனக்குப் பிடித்த  எனது பெயரை. -அகரமுதல்வன்  11.07.2014

பூக்கும் பனிக்காலம்

Image
இலையில் இருந்து சிறகிசைத்து வானம் மிதக்கும் பறவையின் அலகினில் அன்பின் மாலை கனிகிறது. பிறை உதட்டின் ஜீவ கோடுகளில் கசிந்துருகும் முத்தத்தின் எச்சில் அந்தம் கூடலில் ஒளிப்பிழம்பு. சில்லிடும் அனுங்கள் ஒலி கேட்கத்தவறிய தொன்மத்தின் யாழிசை மீளத்துளி விருப்பம் அற்று கொங்கைகள் கட்டி அணைக்கும் மோனத்தின் சித்து பொம்மை விழுந்த நதியின் வேகம். முயங்கிப்பெறும் முக்தியின் மேன்மை உன்னிடத்தே வாய்க்கும் என் சகியே முத்தமிடும் உன் சூட்டில்  நான் கடப்பேன் பாழ் வெளியை  முத்தமிடு. சகியே முத்தமிடு. -அகரமுதல்வன்  11.07.2014