Posts

Showing posts from April, 2018

நான் எனக்காகவேனும் எழுதத்தானே வேண்டும் – குணா கவியழகன்

Image
முள்ளிவாய்க்கால் என்றவுடன் உங்களுக்குத் தோன்றுவது ? பிரளயம் ! பிரளயத்தின் மனித உத்தரிப்பு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகையாகவே அதை   உணர்ந்திருக்கிறேன் . இப்போதும் முள்ளிவாய்க்காலின் பிணக்காடு நித்திரையைத் தின்று தீர்க்கிறது . நிசிகளில் கொதிக்கும் இரத்தம் .   உயிர் நித்திய உறக்கத்தைப் பெற்றாலே தவிர இப்போது உறங்கவிடப்போவதில்லை . முள்ளிவாய்க்காலின் நினைவுகள் சதா எழுந்து தூக்கத்தைத் தொலைத்து துக்கத்தில் சாய்த்து விழுத்திவிடுகிறது . அந்தப் பிணக்காடுகள் ஒரு பிரளய காலத்தையே கற்பனை செய்யவைக்கிறது . சாதாரணமாகப் பறிக்கப்பட்ட உயிர்கள் அல்ல அவை . வதையின் உருசியை அனுபவித்தபின் பறிக்கப்பட்ட உயிர்கள் அவை . பசியின் வதை ,  தாகத்தின் வதை ,  பிரிவின் வதை , இழப்பின் வதை ,  நோயின் வதை என எல்லாவகை வதைகளையும் உருசித்து மரணம்வரை சாகடிக்கப்பட்ட மக்கள் . தன் மரணத்தைத் தானே பார்த்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியம் காயமுற்று இறந்தவர்களுக்கு நிகழ்ந்தது . பசித்திருந்தவர்களுக்கு நிகழ்ந்தது . நோயுற்றிருந்தவர்களுக்கு நிகழ்ந்தது . தாயின்