Posts

Showing posts from November, 2015

புலிகளின் தோல்வி அவர்களின் சமரசமற்ற அரசியலில் தான் உலகத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது – அகரமுதல்வன்

இனப்படுகொலைக்கு பின்பான ஈழ இலக்கியத்தில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி வருபவர். யுத்தம் மாபெரும் இனஅழிப்பு என இரண்டையும் வெவ்வேறு தளத்தில் ஊடுருவி அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை தனது இலக்கியத்தின் ஊடே வெளிப்படுத்துபவர். தானொரு தமிழீழ அகதி என்று எங்கும் தன்னை அடையாளப்படுத்தும் கவிஞர் அகரமுதல்வனுடனான உரையாடல். இனப்படுகொலை, போர்குற்றம் பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை மிக லாவகமாக கையாண்ட இலங்கை அரசாங்கம் அதிலிருந்து தப்பிவிட்டது என்று எண்ணுகிறீர்களா? ஓம், அதில் ஒரு சிறிய மாற்றம். இலங்கை அரசாங்கம் அல்ல, இலங்கை அரசு தற்காலிகமாக தப்பி விட்டது என்று சொல்லவேண்டும். அதுவும் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் தான் நிகழ்ந்து முடிந்து இருக்கிறது. இனப்படுகொலை குற்றச்சாட்டை மகிந்த அரசாங்கம் கையாண்ட விதத்திற்கும் மைத்திரி அரசாங்கம் கையாளும் விதத்திற்கும் பெரிய மாற்றங்கள் புறப்பார்வையிலே சுயம்பாகவே தோன்றிவிடும். இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதனை முறியடிப்பதற்கு மகிந்த அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பார்க்கிலும் மைத்திர