Posts

Showing posts from 2017

அகரமுதல்வனின் பான் கி மூனின் றுவாண்டா - கார்த்திக் புகழேந்தி

Image
“எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். உரையாடல்கள் அரசியலுக்கு அவசியமானது. அதன் அடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். நான் உரையாடலை அரசியலின் அவசியமாய் அணுகுகிறேன். அதன் பரந்த வெளியும், ஜனநாயகமும் நாகரீகமான பரிணமிப்பின் சாட்சிகள். மூச்சு முட்டவைக்கும் பதில்களும், மறுத்து நிற்கும் பதில் கேள்விகளும் காலத்தின் உட்பொருள் கொண்டவை. அவைகள் நன்றென்றாலும், தீயவை என்றாலும் ஆழமாக நம்பவைக்கப் பட்டிருக்கும் அல்லது பழக்கப்படுத்தப் பட்டிருக்கும் எதிர்மறையான கருத்துக்களும், உருவாக்கங்களும் கேள்விக்கு உட்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்” குறிப்பிட்டுச் சொன்ன இவ்வார்த்தைகள்; ‘பான் கி மூனின் றுவாண்டா’ எனும் தன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அகரமுதல்வனுடையது. தனது இந்த சிறுகதை நூலின் வெளியீட்டுக்காக எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனை தலைமையேற்கச் செய்தமைக்காக அகரமுதல்வன் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதுபற்றி அகரமுதல்வன் அளித்த விளக்கமானது, இன்றைக்கு ஒரு தமிழீழத்தவனாக நான் நிர்க்கதிய

அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன்

Image
"கண்ணீர்வலியைஇழிவுபடுத்திவிடும்என்றொருகடவுள்நம்பிக்கைஎனக்குண்டு ."    - அகரமுதல்வன் ஈழத்தின் தற்கால சூழலையும் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ள இலக்கியம் மட்டுமே நம்பத்தகுந்த ஒரே வழியாக இருக்கின்றது . கொடூர சம்பவங்கள் , வன்கொடுமைகள் , குண்டுகளின் சப்தங்கள் , சிதைந்த உடல்கள் , இயலாதோரின் ஓலம் , வலி என துயர் நிரம்பிய பக்கங்கள் தான் அடங்கியிருக்கும் என்பதை முன்னமே வாசகர்கள் அறிந்திருப்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில் பெரும் தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது . இயலாமையினால் வரும் குற்றவுணர்வு மட்டுமல்லாமல் தற்போதைய ' ஃபேஸ்புக்மனநிலை ' யினால் ஏற்படும் அதிருப்தியும் ஒரு வகையில் காரணம்எனலாம் . எல்லாவற்றையும் மேம்போக்காக போலியாக அணுகும் மனநிலை . ஃபேஸ்புக்கில்கோர சம்பவம் ஒன்றினைக் காணும் மனம் வருந்துகிறது , சிறிது கீழிறங்கினால் காண நேரும் அரசியல் பகடியைக் கண்டு நகைக்கிறது , இன்னும் சற்று இறங்கி சினிமா நாயகன் நாயகியின் படங்களைக் கண்டு உருகுகிறது . இப்படி நொடிக்கு நொடி மாறும் போலியான