Posts

Showing posts from February, 2018

எப்போது தோற்றார் மஹிந்த ?

Image
ஒட்டுமொத்த இலங்கைத்தீவிற்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி  பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும்  தென்னிலங்கையின் அரசியல் காட்சிகள் களேபர கைகுலுக்கல்களோடு தோன்றத்தொடக்கிவிட்டன.                          “நல்லிணக்க அரசு” என்றழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க            மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினரின் ஆட்சி                கவிழ்க்கப்படலாம் எனவும் எதிர்வுகூறல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.போததற்கு அரசியல் அவதானிகள் சிலர்                    மஹிந்தவின் மீள் எழுச்சி அரசியல் காலமாக இதனைக்              கருதினர்.ஆனால் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து            அரங்கேறும் காட்சிகள் யாவும் ஓராயிரம் மணித்துளிகள்                  ஒத்திகை பார்க்கப்பட்டவை.சிங்கள ஆட்சியாளர்கள் எல்லா            நொடிகளிலும் ஜனநாயகவாதிகளாக உலகிற்கு பாவனை            செய்கிறார்கள்.தென் இலங்கை ஓர் நாடகமேடை,                    இனியெப்போதும் இங்கு கதாநாயகப் பாத்திரம் மஹிந்த       

இன்குலாப் இனியும் பாடுவார் – அகரமுதல்வன்

Image
இப்போது அவரின் கவிதைகளை தேடித் தேடிப்படிக்கின்றனர்.அவரை ஆணவப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.அவரின் கவிதைகளில்  இருக்கும் கனமான சுழற்சிமிக்க கலகத்தை எண்ணி சிலர் வியக்கின்றனர்.          இந்தத் தலைமுறையினருக்கு தனது கவிதைகளில் உக்கிரத்தை   வழங்கிய இன்குலாப் என்கிற மானுடக் கவிஞனின்    தடங்கள் இலக்கியக் கலகமாய் நீண்டு கொண்டே இருக்கும். “எழுதமாட்டேன் ஒருவரி கூட நீ ஒப்பும்படி” என்கிற அவரின் கவிதையே இலக்கிய வெளியில் உருவாகிக் கிடந்த ஆதிக்கத்துவ அழகியலை தகர்த்து அகற்றியது.   மோசமான தமிழ் இலக்கியப் பரப்பில் அரசியல் படைப்புக்கள் மீது தொடுக்கப்படும் பல்வேறு மதிப்பீட்டு போரை இன்குலாப் எதிர்கொண்ட அளவுக்கு வேறுயாரும் எதிர்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனாலும் தனித்துவமான ஒரு படைப்பாளியாக அவர் எங்குமே சோரம் போனவரில்லை. அடக்கப்படும் மக்கள் அடக்குமுறைக்கு எதிராக செய்யும் வன்முறைக்கு ஆதரவாக தனது படைப்புக்களை சிருஸ்டித்தார். அந்த வகையில் இன்குலாப் படைப்புக்கள் ஒரு அரசியல் இயக்கமாகவும் தன்னைப் பரிணமித்துக்கொண்டது என்றால் மிகையில்லை. நான் சொல்லும் இந்தக்கருத்துக்கு பெரும் வெளிச்சம

பான் கி மூனின் றுவாண்டா – மகுடி வாசிக்கும் சொற்சித்திரம் - பி.கு

Image
தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் வெகுஜன கதைகள் எழுதுவது, இலக்கிய தரம் வாய்ந்த கதைகள் எழுதுவது போன்ற பல விதமான போக்குகள் இருக்கிறது. புதிய வகையான எழுத்துகளும், கதைகளும் களங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. எத்தனை விதமான படைப்புகள் வந்தாலும் ஈழ இலக்கியம் என்பது எப்போதுமே தனித்துவமானது. ஒரு விதமான சார்பு நிலையோடு எழுதப்பட்டாலும் உண்மைக்கு வெகு நெருக்கமாக நின்று உரையாட கூடியது இந்த ஈழ இலக்கியம். இங்கு, நாம் சந்தித்த மனிதர்களின் கதைகள், வாழ்ந்த வாழ்கின்ற மண் சார்ந்த கதைகளே அதிகம் எழுதப்படுகிறது. வெகு அரிதாக நம்முடைய கதைகள் புனைவுகளின் ஊடாக தொக்கி நிற்குமாறு எழுதப்படும். இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் களம், ஈழ இலக்கியம். அது எழுதுபவரின் வாழ்க்கையை, அவர் அடைந்த இன்னல்களை, அவரது வலிகளை, அவரை சார்ந்தவர்களின் வலிகளை, அவர்களது உரிமையை, எவ்வித சமரசமுமின்றி, தண்ணீர் கலக்காத மதுபானத்தைப் போல் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. அகரமுதல்வனின் இந்த பான் கீ மூனின் றுவாண்டா-வும் பங்கருக்குள்ளும், குண்டுகளுடனும் ரத்தமும் சதையுமாக வழிந்து ஓடும் வாழ்க்கையையும், துரோகமும், குரோதமும் ந