Posts

Showing posts from 2015

எனது இரவும் உமது பகலும்

Image
மீதியின் மீதியிலிருந்து சிதையும் பகலை இரவு ஒழிக்கிறது அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா பொய்யின் கனவுக்கு பாத்திரமானது துடிக்கும் சில நட்சத்திரங்கள் அதற்கே அந்நியமானது நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில் தூங்கி விடுகிறீர்கள் அல்லது புணர்கிறீர்கள் எப்போதும் போல அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள் உங்களுக்கு தெரிந்திராத இரவுகள் என்னிடம் இருக்கிறது அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து மழித்த பகலின் உரோமங்கள் அதன் முகத்திலிருப்பது மலினமான ஒரு இருட்டு நான் மீதியின் மீதியிலிருந்து எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன் என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய் உம் கழல் படுகிறது அது உங்களுக்கு பகலாகவும் எனக்கு இரவாகவும் மீதியற்று அலைபோல அசையும் இந்தக் காலத்தின் நெஞ்சில் துவக்கின் சன்னங்கள் பாய்ந்திருக்கிறது. -அகரமுதல்வன் 28.12.2015

புலிகளின் தோல்வி அவர்களின் சமரசமற்ற அரசியலில் தான் உலகத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது – அகரமுதல்வன்

இனப்படுகொலைக்கு பின்பான ஈழ இலக்கியத்தில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி வருபவர். யுத்தம் மாபெரும் இனஅழிப்பு என இரண்டையும் வெவ்வேறு தளத்தில் ஊடுருவி அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை தனது இலக்கியத்தின் ஊடே வெளிப்படுத்துபவர். தானொரு தமிழீழ அகதி என்று எங்கும் தன்னை அடையாளப்படுத்தும் கவிஞர் அகரமுதல்வனுடனான உரையாடல். இனப்படுகொலை, போர்குற்றம் பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை மிக லாவகமாக கையாண்ட இலங்கை அரசாங்கம் அதிலிருந்து தப்பிவிட்டது என்று எண்ணுகிறீர்களா? ஓம், அதில் ஒரு சிறிய மாற்றம். இலங்கை அரசாங்கம் அல்ல, இலங்கை அரசு தற்காலிகமாக தப்பி விட்டது என்று சொல்லவேண்டும். அதுவும் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் தான் நிகழ்ந்து முடிந்து இருக்கிறது. இனப்படுகொலை குற்றச்சாட்டை மகிந்த அரசாங்கம் கையாண்ட விதத்திற்கும் மைத்திரி அரசாங்கம் கையாளும் விதத்திற்கும் பெரிய மாற்றங்கள் புறப்பார்வையிலே சுயம்பாகவே தோன்றிவிடும். இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதனை முறியடிப்பதற்கு மகிந்த அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பார்க்கிலும் மைத்திர

மகிந்தவின் அதிகாரத் தோல்வி தமிழர்களின் அரசியல் பின்னடைவு – அகரமுதல்வன்

தமிழீழர்கள் மீதான இனப்படுகொலைக்கு பிறகான காலத்தில் கொழும்பில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு அரசியல்,அதிகார மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அனுகூலங்களும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஜனவரி 8 ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த அடைந்த தோல்வியானது நேரடியான பகைவுணர்வில் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தாலும் அது அரசியல் ரீதியான பாதகமான முடிவாக மாறிவிட்டது. அரசியல் என்பது பல்வேறு சுழியோடித்தனங்கள் கொண்ட கூர்மையான நடவடிக்கை என்பதை தமிழர் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நடந்த அதிபர் தேர்தலில் தமது ஆதரவை மைத்திரி அணிக்கு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளால் மைத்திரியை வெற்றியடையச் செய்தது. எந்தவொரு சிங்களரை கொழும்பு அரசியலில் வெற்றியடையச் செய்வதன் மூலமாயும் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை என்பதை தமிழ் தலைவர்கள் கடந்த கால வரலாறுகளின் வழி பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மகிந்த அதிபராக நீடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியில் தமிழர்கள் பக்கம் இருந்த ஆதரவையும் நீதி கோரும் தீர்மானங்களையும் மிக லாவகமாக நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம் எ

புதிய மனம் புதிய எண்ணம் புதிய சிந்தனை - இனப்படுகொலைக்கு பின் களமும், சர்வதேசமும்

இனவாதம் என்பது வெறும் நபர்களிடம் தங்கி   நிற்பதல்ல அரசு எந்திரத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இனமொன்றின் கூட்டு உளவியலில் தினம் தினம் புதிய பரிமாணங்களை தன்னகத்தே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.சிங்கள இனவாதமும் கொழும்பு ஆட்சியாளர்களும் தமிழர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகளானது கட்சி பேதங்களைத் தாண்டிய ஒற்றுமையில் நிகழ்த்தப்பட்டது. கல்ஓயா தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து நடாத்தபட்ட இனப்படுகொலையில் இருபெரும் பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டுமே பங்குவகித்தன  என்பது உலகறிந்த உண்மை.  கொழும்பின் கூட்டு உளவியலில் தமிழர்கள் மீதான வெறுப்பும் அழித்தொழிப்பும் அவர்களின் அரசியலை தக்க வைக்க உதவுகிறது. அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு செவி சாய்க்காத தமது கடந்த கால தலைவர்களின் வழியை பின் தொடரும் இன்றைய சிங்களத் தலைமைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த தத்தமது பங்குகளைப் போட்டி போட்டு அறிவிக்கும் சூழல் இப்போது தான் அதிகரித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் இராணுவத் தோல்வியோடு தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முடிந்து போய்விட்டதாக சிங்களத் தலைவர்கள் எண்ணுவதைப் போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எண்ணுகிறத

சிங்கள நீதி எமக்கு வேண்டாம்,சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்.

ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்றும் அதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாலும் சிறிசேனாவாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத்தமிழர்களின் வாக்குக்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். இராஜபக்ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிய புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான புரட்சியாகும். பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்ச அரசாங்கம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில  ; தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில் ராஜபக்ச    பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குக்களால்    ராஜபக்சவிற்கு    பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில் அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் இராஜபக்ஷ விலகிச் செல்லவும் ஐ.தே.கவுடன் சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கவும்

சம்பந்தரும் சமஷ்டியும் வாக்குகளும்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருக்கும் பிரதான தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை தமது பிரச்சார நடவடிக்கையாக மற்றக் கட்சியினருக்கு துரோகி பட்டம் வழங்குவதையும் தனது கட்சியினருக்கு போராளி பட்டம் வழங்குவதையும் முன் எடுப்பது அரசியல் கேளிக்கையாகவும் மலினச் செயலாகவும் தான் பார்க்க முடிகிறது. இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக, இளம் தலைமுறையின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் எதையும் பேசியது கிடையாது. தங்களையும் தமது கட்சியையும் கடந்த கால செயற்பாடுகளின் மூலம் புனிதப்படுத்த முயலுவதில் தான் அவர்கள் கவனம் திரும்பியிருக்கிறது.  புலிகள் இயக்கம் உருவாக்கிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு மக்களின் முன்னே நிமிர்ந்து நின்று பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை தீர்வாக முன்வைத்து இருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு தேசம் ஒரு நாடு என்கிற கொள்கையை முன் வைத்து தனது பாரம்