Posts

Showing posts from August, 2015

சிங்கள நீதி எமக்கு வேண்டாம்,சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்.

ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்றும் அதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாலும் சிறிசேனாவாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத்தமிழர்களின் வாக்குக்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். இராஜபக்ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிய புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான புரட்சியாகும். பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்ச அரசாங்கம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில  ; தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில் ராஜபக்ச    பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குக்களால்    ராஜபக்சவிற்கு    பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில் அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் இராஜபக்ஷ விலகிச் செல்லவும் ஐ.தே.கவுடன் சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கவும்

சம்பந்தரும் சமஷ்டியும் வாக்குகளும்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருக்கும் பிரதான தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை தமது பிரச்சார நடவடிக்கையாக மற்றக் கட்சியினருக்கு துரோகி பட்டம் வழங்குவதையும் தனது கட்சியினருக்கு போராளி பட்டம் வழங்குவதையும் முன் எடுப்பது அரசியல் கேளிக்கையாகவும் மலினச் செயலாகவும் தான் பார்க்க முடிகிறது. இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக, இளம் தலைமுறையின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் எதையும் பேசியது கிடையாது. தங்களையும் தமது கட்சியையும் கடந்த கால செயற்பாடுகளின் மூலம் புனிதப்படுத்த முயலுவதில் தான் அவர்கள் கவனம் திரும்பியிருக்கிறது.  புலிகள் இயக்கம் உருவாக்கிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு மக்களின் முன்னே நிமிர்ந்து நின்று பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை தீர்வாக முன்வைத்து இருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு தேசம் ஒரு நாடு என்கிற கொள்கையை முன் வைத்து தனது பாரம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழீழர்களின் வாக்குகளும் விமோசனமும்

தமிழீழர்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால வாழ்வும் அரசியலால் தான் விதிக்கப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சனையும் விடுதலைப் போராட்டமும் இனப்படுகொலையும் என்ற மூன்று சக்கரங்களுக்குள் சுழன்றபடியிருக்கும் மக்களின் துயரம் அந்நிய நாடுகளினதும் வல்லரசுகளினதும் நோக்கு நிலையில் இருந்து தமிழ் கட்சிகளால் கையாளப்படுவது தான் அதி சோகம்.   முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பான தற்காலத்தில் தாயகத்தில் உள்ள மக்களிற்கான அரசியல் கட்சியாக தம்மை முதன்மைப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் நோக்கு நிலையில் இருந்து செயற்பட்டிருந்தால் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவான ஒரு முடிவை எடுத்திருந்திருக்க முடியாது. தேர்தலை பகிஸ்கரிப்பு செய்யாவிடினும் ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு போயிருக்கவேண்டிய தேவை மக்களின் நோக்கு நிலையில் இருந்து முடிவு செய்யப்பட்ட ஒன்று அல்ல.   பொதுப்புத்தியில் இவ்வளவு மக்களைக் கொன்றொழித்த மகிந்தவை தோற்கடிக்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தாலும் அது அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக மிகத் தவறானது.   சர்வதேச ரீதியான பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கும் த

பின் நவீனத்துவத்தின் மழை

இந்தப் பொழுதிற்கென பெய்யும் மழையில்  திளைப்பதற்கும் உறைவதற்கும் ஆரத்தழுவிய ஞாபகங்கள் எனக்கில்லை அழுகையும் குருதியும் நீரெனப் பருகிய கோரத்தின் மேற்குவானம் தேய்வதாயுமில்லை கடலுக்கு திரும்பியிரா பகல் காற்று ஓலம் தொற்றி சுழன்று கசிய பெய்யும் மழைக்கு என்னைத் தெரியாது குருதி தோய்ந்த கனவிற்கு மழையில்லை சருகுகளையும் நனைப்பதில்லை சவமென்று என்மீது வீழாத மழை ஆகாசத்தில் அறுபட்டு உருச்சிதையும் துயரமான கரையில் பூத்துப்போயிருக்கும் உள்ளங்காலில் கடல் நிறைய பாழடைந்த வனத்தின் வேர் வெடித்து கீழிருந்து வீசுகிறது இருப்பின் தெறிப்பு மழை. நன்றி  கணையாழி  ஆகஸ்ட் 2015