Posts

Showing posts from January, 2016

கேள்வி

செத்த சிம்மத்தின் வாயில் நெளியும் புழுக்களிடம்  ஏதோ ஓர் கீரிடம் இளவெயிலில் மின்னியது  வேட்டை வாயின் சிதிலத்திலிருந்து ஊனமாய்  சருகுக்குள் துள்ளின மான்களின் புள்ளிகள்  சிங்கத்தின் கடைசி இரையின் வாடை பிடிக்காது  சவ்வரிசி கொட்டுண்டுவதைப் போல சில புழுக்கள் சிம்ம சடலத்திலிருந்து உதிர்ந்தன காற்றின் தறி முழுக்க சிம்மம் புழுத்த மணம் நெடுநதிக் காட்டின் விலங்குகள் நீரருந்திக் கொண்டே விசிலடித்தார்கள் மேகம் கலைந்து வானம் உதறி கீழே விழும் இருள் திடீரென்று பெருத்தது காட்டின் துயில் காலம் ஒரு அக்கிரமத்தின் பிணத்தோடு ஒளி கழுவி நின்றது புழுக்கள் அச்சுறுத்தும் படியாய் சாகாச இருளில் பெருகிக் கொண்டிருந்தது சிங்கத்தை தின்னும் புழுக்கள் சுழன்று சுழன்று நெளியும் களிப்பு காட்டின் பாவங்களில் தணிந்திருந்த ஒரு காட்சியின் அசுரம் ஒரு கணம் ஓயும் புழுக்கள் ஒன்றாய் ஒன்றாய் பாவங்களை அரித்த ஆசுவாசம் ஒரு காட்டின் அமைதியில் எஞ்சுகிறது சிங்கத்தின் சாம்ராஜ்யம் புழுக்களில் முடிகிறது காட்டைத் தாண்டியும்  பாலிக்கும் மவுனத்தில்  இன்னும் சில நாட்களில்  பசியின் கதவில் புழுக்கள் மொய்க்கும்  சிம்மங்களை சாய்க்கும்   நெடுநிலத்த

அறம் வெல்லும் அஞ்சற்க - தீவிரமும் இசைமொழியும் -ஆர்.அபிலாஷ்

Image
23 வயதாகும் ஈழக்கவிஞர் அகரமுதல்வன் மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். அவர் வயதில் நாம் காதலையும் உணர்ச்சி குழப்பத்தையும் கற்பனாவாத கனவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்தே பலர் முப்பதுகளில் தான் தீவிரமான எழுத்து நோக்கி நகரவும் கவிதையில் நிலைப்படவும் முயல்கிறார்கள். ஆனால் அகரமுதல்வன் வாழ்க்கையை தொட்டுத் தடவி அறியத் துவங்க வேண்டிய வயதிலேயே வதைமுகாம் அனுபவங்கள் , சிதைந்த உடல்கள் , கைவிடப்பட்ட குழந்தைகள் , நடுக்கடலில் மரணத்தை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருக்கும் அகதிகள் , வல்லுறவின் கடும் வலியின் மத்தியில் பழிவாங்கும் வெறியுடன் யோசிக்கும் பெண் போராளிகள் பற்றி பேசுகிறார். எந்த இந்தியத் தமிழனும் கற்பனை கூட செய்ய முடியாத அநீதிகள் , கொடூரங்கள் , உடலும் அறமும் முழுக்க அடையாளமற்று சிதைந்து போன சூழல் என பலவற்றை கண்டு கடந்து வந்திருக்கிறார். இது அவரை நாம் எவரையும் விட முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் ஆன்மீக , தத்துவ முதிர்ச்சியை சொல்லவில்லை. நாற்பது வயதில் ஒரு மனிதன் வாழ்க்கை பற்றி கொள்ளும் நம்பிக்கை வறட்சியும் எந்த தோல்வியையும் ஏற்கத் துணியும் மூர்க்கமும் அவரிடம்