Posts

Showing posts from 2014

துவக்குகளும் விடுதலையும் தயாராகவிருக்கிறது

இடம்பெயர்ந்து கொண்டிருப்பதை விட படுகாயங்களில் அமைதியிருப்பதை அம்மாக்கள் கற்றுக்கொண்டார்கள் கிபிர் அடிக்கு மத்தியில் பிறந்த குழந்தையை ரத்தத்தில் துடைக்க கற்றுக்கொண்டோம் வெடித்துச் சிதறிய குண்டுகளின் சுவாலையில் தேத்தண்ணி சூடாக்கினோம் பரா வெளிச்சத்தில் பதுங்குகுழி தோண்டினோம் எங்கள் இரவுகள் யுத்தத்தின் தீபாவளி கைகளில் நடுக்கத்தின் கருப்பை மிக மோசமாகவிருக்கும் நாளத்தின் அதிர்வு அசையும் குருதியிழப்பு வாழ்வின் எளிமை அவலத்தின் முகம் நான் போர் துரத்திய  எனது மரணம் வியப்பானது தசைகள் சிதைத்து வீசியெறியும் சிரிப்பற்ற நிலத்திலிருந்து அது முளைவிடுகிறது பதுங்குகுழிக்குள்ளிருந்து வாளி மூத்திரத்தை வெளியே ஊற்றிய அம்மாவிடம் இப்போது கைகளில்லை மாதவிடாயின் குருதிப் போக்கினை கிடந்தபடி கழித்த அக்காவின் காயம் பல கடல்கள் டாங்கிகளின் வாய்கள் பட்டினியான எம்முடலை பசி கொண்டது ஊரின் தெருக்கள் முழுதும் ரத்த வாடையை முகர்ந்து பார்த்த குழந்தைகளின் முகத்தில் மாமிசத்தின் நதி ஓடிக்கொண்டிருந்தது யுத்தத்தில் பவனி வரும் மரணம் சவக்குழிகளுள் தாயகம் புதைத்து

மகிந்தவின் தேர்தல் வெற்றியும் தமிழீழர்களின் சர்வேதச நகர்வும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு மைத்திரிபாலா சிறிசேனாவிற்கான ஆதரவாக உருப்பெற்றுள்ளது. இந்த நிலைப்பாட்டினை வைத்துக் கொண்டு அவர்கள் தமிழீழ மக்களாகிய எங்களை தொடர் கொலைக்களத்தின் விளிம்பில்  நிறுத்தியிருக்கிறார்கள் என சொல்வதற்கு நான் தயாரில்லை. மைத்திரிக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு என்பது மறுபுறத்தில் இனவாத சிங்களர்களின் வாக்குகளை மகிந்தவிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. கடந்த சனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக நின்ற சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததினாலேயே   சிங்கள வாக்குகள் அவரை நிராகரித்தன. அதே போல மீண்டும் மைத்திரியை தமிழர்களுக்கு ஆதரவானவர் என்கிற ஒரே பிரச்சாரத்தின் மூலம் தோற்கடிக்கும் அனைத்து வழிகளும் மகிந்தவிற்கு திறக்கப்பட்டுவிட்டது.கிட்டத்தட்ட மகிந்தவின் தேர்தல் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. தமிழீழ மக்களைப் பொறுத்தமட்டில் சிங்களத் தலைமைகளிடம் இருந்து  தீர்வு ஏற்பட்டு விடுமென நம்பியது கிடையாதென்றாலும் இந்தத் தேர்தலில் மகிந்த - மைத்திரி எனும் வேட்பாளர்களில் மகிந்த வெற்றியடைவது தமிழர்களின் சர்வதேச போராட்ட சூழலில் அவசியமான மூச்சாக

நீங்கள் நேர்கண்டவரே எம்மைக் கொன்றவர்

தமிழீழத் தமிழர்கள் எனும் தனித்துவமிக்க தமிழ் தேசிய இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையை இந்த நூற்றாண்டு அல்ல இனிவரும் நூற்றாண்டு கூட மறந்துவிடாது. அப்படிப்பட்ட இனப்படுகொலையை பெருவிருப்போடு நிகழத்திய சிங்கள இனவாதத்தினதும் சிறிலங்காவினதும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை தமிழருக்கு எதிரானவர் என்று வட்டம் போட்டு சுருக்கிவிட முடியாது. ஏனெனில் மகிந்த எனும் பெயர்ச்சொல் இந்த நூற்றாண்டில் மானுடத்திற்கு எதிரானது. அந்தப் பெயர் நீதிக்கு அப்பாற்பட்டது.கொடூழியத்தனமான யுத்தக்கொலைகளை நிகழ்த்திய வரலாற்றில் இப் பெயர் புதிது. இவ்வாறு எத்தனை அநீதிகளின் வகைகள் இருக்கிறதோ அனைத்திலும் அவருக்கு முடி சூட்டலாம்.ஆக மகிந்த எனும் பெயர்ச் சொல் இருபத்தோராம் நூற்றாண்டில் விதவிதமான மானுடக் கொலைகளின் வடிவமைப்பாளர் என்று கூட சந்தேகமின்றி நிறுவலாம்.                                                                                                                       நேற்றைக்கு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட மகிந்தவின் நேர்காணல் வெறும் சந்திப்பை காட்சிப்படுத்தியது போன்றது. கேட்கப்பட்ட கேள்விகள், பதிலள

இரத்தத்தின் விழித்தெழல்

Image
தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று கம்பீரமாய் அமர்ந்திருப்பதை காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும்  சிவந்த தீவு அறியும் கொடுஞ் சேனைகளின் அஸ்தமனத்தை பிரவேசிக்காத சொந்தக்கூடாரங்களில் அந்திப்பலியாக்கி வேட்டையாட இருதயம் சிறகடிக்கிறது புரளும் வனவெள்ளம்  சேதமாக்கப்பட்ட கல்லறைகளின் தொண்டையில் நீந்த விதைகள் நனைக்கும் வசந்தமறிகிறேன் மல்லாந்து கிடந்த மரணத்தில் சிதைந்த தம்முடலைத் தேடிக்களைத்த முகங்களில் மேல்காற்று மிதக்கிறது ஒடுக்கத்தில் பாம்பைப் போல நெளிந்து பிணங்களின் துர்நாற்றத்தில் கொதிக்கத்தொடங்கும் ஆழ்கடலில் களிப்புண்டாக்கும் விடியற்காலை மெல்ல அசைந்து நெஞ்சினை திறக்கிறது இனிமேலுமென்ன யுத்தத்தில் சூரியனைக் காண்போம். -அகரமுதல்வன் 27.11.2014

பிரிந்து கிடப்பதால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்து விட முடியாது– சு .அகரமுதல்வன்

சு .அகரமுதல்வன் சமகால இளம் ஈழக் கவிஞராக மட்டுமன்றி பெரும் இனப்படுகொலைக்கு பிறகான காலத்தை வடிக்கும் படைப்பாளியாகவே என்னுள் அடையாளப்படுகிறார். கவிதைகளை விட மேலாக இவர் நந்திக்கடல் கடந்து வந்த நினைவுகள் ஆழப் பதிந்துள்ளது. மே 2009 இறுதிக்கட்டத்தின் கொடூர நாட்களை கடந்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.    இவரின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி , அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைத்தொகுப்புகள்,போர் நிலத்தின் இலக்கியம் அடக்குமுறை அரசியலின் வேர்களில் எழுகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த நினைவோடு அவரிடம் சில கேள்விகள். - ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன் மனிதத் தன்மையற்ற ஓர் பெரும் போரை கடந்து வந்தவராய் உள்ளநீங்கள் , வன்னியின் நிலைமையை இன்று எப்படி உணர்கிறீர்கள் ? மனிதத் தன்மையற்ற போர் என்று சொல்வதை விட போர்த் தன்மையற்ற போர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும், போர் நடந்த காலத்தில் சாவினால் வழிநடத்தப்பட்ட வன்னிச் சனங்கள் இன்று பல்வேறு அடக்குமுறைகளையும் இராணுவத்தின் அதிகார பலாத்காரங்களையும் எதிர்நோக்கி வாழவேண்டியவர்களாக திக்கற்று நிற்கிறார்கள். வன்னி என்பதை சிங்கள இனவாத அரசின் அத

சந்தனம் மித்தினால் தடவுடா புடுக்கில

Image
தமிழீழ தாயகத்தில் நிகழ்ந்த இனவன்முறையினால்/ அல்லது அதனை கராணம் காட்டி ஐரோப்பிய நாடுகளிற்கும் பிற டாலர் தேசங்களிற்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவு என்பது மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு நிகழ்ந்த காலத்தில் மிகப் பெரும் பொருளாதார பூவுலகை அந்த அரசுக்கு ஆதரவாக கட்டி அமைத்த முன்னுதாரண மக்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந் மக்களுக்கு வரலாற்றில் பெரும் பங்குண்டு என்பது உறுதியானதென்றாலும் சில புலம்பெயர் மக்களிடம் காணப்படும் படோபடங்கள் அருவருக்கச் செய்கிறது என்பது தான் வருத்தமான உண்மை. இனப்படுகொலையின் பின் தமிழீழ தாயகத்தில் மக்கள் படுகின்ற அவலம் என்பது பட்டினிகள் சூழ தொடர்ந்து செல்கிறது மேலும் போரில் வீசப்பட்ட இராசயனக் குண்டுகளால் அந்த நிலம் நச்சுவளி கொண்ட காற்றைத் தான் வீசி வருகிறது ,பச்சை வயல்களென தலை அசைத்த ஊரின் அடையாளம் மழை அற்று வறண்டு போய்க் கிடக்கிறது. இனப்படுகொலை தமிழர்களின் உயிரை மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதல்ல தமிழன் நெல் விதைக்கும் வயலிலிருந்து அவன் சுவாசிக்கும் காற்று வரை நீர் அருந

பதுங்கலின் விவரணை

Image
கொடுங்கோலின் பனியில் உறைந்து வீழ்ந்தவன்  யுகத் தீயின் வாசலில் சாம்பலாகி தகித்தவன்  சிந்திய ரத்தத் துளிகளில் தாகம் தீர்த்தவன்  சிங்கத்தின் கர்ஜனையில் காய்ச்சலாய்க் கிடந்தவன்  துரோக ராஜ்யத்தில் வதையில் அதிர்ந்தவன்  புத்தனின் துவக்கால் மலவாசல் சிதைந்தவன்  சப்பாத்துக் குறிகளின் விந்தில் நனைந்தவன்  மின்பாயும் முட்கம்பிகளில் வீசப்படயிருந்தவன்  நகம் பிடுங்கும் ரணவறைக்கு கொண்டு செல்லப்பட்டவன்  மேலும் மேலும் இது போல நேர்ந்திருப்பதால்  நானொரு நாடற்றவனென அறிந்திருப்பீர்கள்  இதன் பின்னும் பின் தொடரும்  ஈரம் தோய்ந்த ஓலத்தின் வாசனையை  நீங்கள் விரும்பாத போதிலும்  பெரு மூச்சு விட்டு சற்று உங்களிடம் அனுமதியுங்கள் பெரும் காயத்தின் நிழலில் இளைப்பாறும் என்னுடலில்  பழிவாங்கல் துளிர்க்கிறது எல்லாவற்றுக்குமாய். -அகரமுதல்வன்  11.08.2014

மழையுடன் பேசும் மழை

Image
பகிர்வுத் தானியின் வலது கரையில் நனைந்தபடி  மழையின் முத்தங்களை சேகரிக்கும் எனதருகே விரல் சூப்பித் தூங்கும் ஒரு குழந்தை  தாயின் மடியைத் தடவுகிறது  பூத்துக்கொண்டிருக்கும் அதிசய நறுமணத்தின்  குடா முழுதும் வானிலையாய்  குழந்தையின் கால்கள் அசைய  இன்னுமின்னும் சூல் கொள்கிறது வானம்  ஆடைகள் ஒட்டிய மேனியில்  நீர் வழிந்தோட குளிர்ந்த படி  வண்ணப்பூச்சுகள் கரைந்த கவலையில்  வழியால் நடந்தவர்க்கு  சில்லறைகள் யாசிப்பவனுக்கு  குடை மறந்தவர்க்கு  தொழுநோயாளிக்கு  கோபமூட்டிய  தூக்கம் பறித்த  இந்த மழையே தான்  வஞ்சகமற்ற  அதிசயத்தின் கனவுக்குள்  கைபிடித்துச் செல்கிறது  பார்வையற்ற இக் குழந்தையை இதற்காயினும் வேண்டும் பெரும் மழை. -அகரமுதல்வன்  08.08.2014