Posts

Showing posts from May, 2016

சம்பந்தன் சொல்லும் தீர்வை தமிழீழர்கள் நம்பவில்லை

Image
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இற்றைவரைக்கும் ஈழத் தமிழர்களின் அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று இருந்தாலும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு அதிலிருந்து எந்த ஆறுதலும் கிட்டவில்லை. ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு பின்னான காலத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகள் மிகவும் வேகக்குறைவான அதே நேரத்தில் விவேகமற்ற தன்மை பொருந்தியதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் நிர்வாக வீழ்ச்சிக்கு பின்னர் அரசியல் ரீதியாக பேரம் பேசும் சக்தியை ஈழத் தமிழ் அரசியல் களம் இழந்து விட்டது என்பது பேருண்மை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சந்தித்து களத்தில் வாழும் மக்களின் நிலை குறித்து புலம்பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன் எடுத்திருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புவதிலிருந்து தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னான ஈழத் தமிழர்களின் அரசியல் தொடக்கமாகிறது.  வாழ்க்கையின் மூன்றில் இரண்டு பங்கை போராட்டக் களத்தில் இழந்த ஒவ்வொரு போராளியும் இன்றைய நாட்களில் எதிர்கொள்கிற வாழ்வாதார சிக்கல்களை போக்குவதற்கு களத