Posts

Showing posts from September, 2017

தமிழ் வாசகப்பரப்பு கவனிக்கத்தவறிய தமிழீழப் பெண் படைப்புக்கள் - அகரமுதல்வன்

Image
துயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல்.  அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற             அபாயம் இருக்கிறது. வாழ்வே கனவாகிப்போன சாவின் சகதிக்குள் புதைந்திருந்தும் புதைந்து மீண்ட பின்னரும் அதை எழுதுவதானது ஆழிபோலான மரணத்தின் துர்வாசனையை மீண்டும் சுவாசிப்பது போலானது.  ஈழம் இந்தநூற்றாண்டில் பல்வேறு தளங்களில்  முக்கியத்துவம் பெறப்போகின்ற ஒரு பெயர்ச்சொல். அது பெயர்ச்சொல் மட்டும் தானா?  ஈழம் அவலத்திற்கு எதிரான போராட்ட மந்திரம். அது இனிவரும் எல்லாக்காலங்களிலும் மானுட நீதிக்கான அடையாளம். அதுவொரு நீதியின் இலட்சணை.  தம் கைகள் வெடிகுண்டுகளால் அறுக்கப்பட்டபின்னரும் பறவைகளின் சிறகுகள் குறித்தும் அதன்       சுதந்திரம் குறித்தும் இலக்கியம் படைக்கும் விடுதலையின் வேட்கை மண்ணுக்கு இருக்கிறது.  ஈழம் என்பது இரத்தத்தால் பலியிடப்பட்ட விடுதலையின் கருவறை எனும் சொல்லாடல் மிகவும் சரியானது. அந்தக் கருவறையில் இருந்து அறிஞர்களும், கலைஞர்களும் பிறந்தெழுந்தார்கள், பிறந்தெழுவார்கள் என்பது திண்ணம். அந்தப் பிறப்புக்களின் அதிவேகமான