Posts

Showing posts from January, 2017

திணிப்பு பற்றிய கேள்வியும் விளக்கமும்

Image
நன்றேது ? தீதேது ? ஆளுமைகளுடனான உரையாடல்" என்கின்ற நூலில் ஆளுமைகளுடன் உரையாடல் மேற்கொள்ளும் அகரமுதல்வன் வலிந்து மூன்று விடயங்களை திணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. 1   ஈழ விவகாரத்தை பிராந்திய பிரச்சினை என்று சொல்வது.   2 இந்தியா ஈழ மக்களுக்கு தீர்வு வழங்க ஒரு வாய்ப்பு வராதா என்று தவம் இருப்பது போன்று பேசுவது. 3 ஜெயமோகன் தான் இலக்கிய கொம்பு என்பது போல மூன்று ஆளுமைகளுடனும் அவரின் உளறல் பற்றியே கேள்வி எழுப்புதல். இவைகளுக்கு அப்பால்அ கரமுதல்வனுக்கும் , மோக்லி பதிப்பகத்துக்கும் தமி ழ்ச் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. உரையாடல் என்கிற சற்று மறந்தே போன ஒன்றை சரியான , அவசியமான காலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது தொடர வேண்டிய ஒரு முக்கியமான அணுகுமுறையாகும். வேறு வேறு கோணத்தில் பயணிக்கும் குணா கவியழகன் , பத்திநாதன் போன்றோரின் உரையாடல்கள் புதிய வெளிகளை உருவாக்கும் தன்மையுடையவை.உணர்ச்சி பூர்வமான அரசியலையே பழகிக்கொண்ட தமிழ் சமூகத்தில் இவ்வுரையாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதுவே எனது விமர்சனமும் கூட நன்றி வாசு முருகவேல்  அன்பின் வாசு முருகவேலுக

தலைகீழ்

Image
வணக்கம்! அகரமுதல்வன். உங்கள் மீது எனக்கு எள்ளளவு இருந்தமரியாதையும் நேற்றோடு காலியாகிவிட்டது. நீங்கள் லக்ஷ்மி சரவணக்குமார் என்பவரோடு எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் பிரதியை தலைகீழாக பிடித்தபடி வெளியிட்ட போட்டோவை லக்ஷ்மி சரவணக்குமாரின் fb யில் பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் மீது உங்களிருவருக்கும் இருந்த அரசியல் ரீதியான காழ்ப்புணர்வை இவ்வாறு வெளிப்படுத்தி உங்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இருவரும் ஜெயமோகனின் ஒரு எழுத்தையும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆன்றோ ராஜ் கன்னியாகுமரி.  மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை –மாவோ ஆன்றோ நீங்கள் என் மீதுகொண்டிருந்த எள்ளளவு மரியாதை காலியாகியது குறித்து எனக்கு எந்தக்கவலையும் இல்லை. எள்ளுக் காலியாகும் காலத்தில் எள்ளளவு மரியாதையும் காலியாகும் என்பது யதார்த்தம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் தலைகீழாய் வெளியிட நான் பெற்றுக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்ததும் இந்தப் பதிவை எனக்கு எழுதி மின்னஞ்சல் செய்திருக்கிறீர்கள். ஜெயமோக

நல்மொழிக்கு அச்சமில்லை – நாஞ்சில் நாடன்

Image
கடந்த ஆறுமாதங்களில், ஈழத் தமிழ்ப்படைப்புக்களில் ஏறத்தாழ 2500 பக்கங்கள் வாசித்தேன். யாவுமே பெரும்பாலும் இனஅழிப்பு நயவஞ்சகத்தின் பிற்பாடு எழுதப்பெற்றவை. நான் வாசித்த ஒழுங்கில் குறிப்பிட வேண்டுமானால் ஷோபாசக்தியின் கண்டிவீரன், முப்பது நிறச் சொல், Box கதைப்புத்தகம். மெலிஞ்சிமுத்தனின் பிரண்டையாறு. கருணாகரனின் வேட்டைத்தோப்பு. தமிழ்க்கவியின் ஊழிக்காலம். சயந்தனின் ஆதிரை. குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு,விடமேறிய கனவு,அப்பால் ஒருநிலம். தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில். தமிழ்நதியின் பார்த்தீனியம். செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீரா பக்கங்கள். அகரமுதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட். இவற்றுள் பெரும்பான்மையான நூல்களை வாசிக்க துயரம் தாங்கும் மனம் வேண்டும். வலிக்காமலும் கண்ணீர் சிந்தாமலும் அவற்றை வாசிக்க இயலாது. புத்தக வாசிப்பு என்பது எப்போதுமே சுகானுபவம் அல்ல. பாதத்தில் கீறிப் புகுந்த உடைந்த குப்பிச் சில்லு போல, நொம்பலமும் இரத்தக்கசிவும் சுருக் சுருக் என்ற குத்துதலும் வேதனையும் வீக்கமும் உணர்த்துவது. மேலே குறிப்பிட்ட நூல்கள் பற்றிய கருத்துரைக்கு நான் ஈண்டு முனையவில்லை. அறிவ