Posts

Showing posts from March, 2016

இந்த மண் எங்களின் சொந்த மண்

Image
இந்தமண் எங்களின் சொந்தமண்  இந்தமண் எங்களின் சொந்தமண்   நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை. - புதுவை இரத்தினதுரை  புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மிகவுறுதியான பங்களிப்புக்கள் மரியாதைக்குரியவை. அயராத உழைப்பும் ஓய்வற்ற வாழ்க்கைக்குள்ளும் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவை வழங்கி வந்தவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.  களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வீழ்ச்சியைக் கண்டதோடு களத்தில் வாழ்ந்த மக்கள்  மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிய 2009 க்கு பிறகு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல், அல்லது அவர்களின் விடுதலைக்கான உழைப்பு என்பது என்னவாகி உருமாற்றம் அடைந்துவிட்டது என்பது தான் கவலைக்குரியது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை களத்தில் இருந்து உயிர் தப்பிய மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட அதே நேரம் இறுதி வரை போர்க்களத்தில் எதிரியோடு சமராடிய போராளிகள் தடுப்புமுகாம் என அழைக்கப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு முற்றாக வாழ்வு சிதைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நெருங்கி வரும

அரசியல் சவங்களின் பிதாமகன்கள்

Image
ஹிட்லரே எதிர்பார்த்திராத அசல் மகிந்த ஸ்கோவிச் முட்கம்பிகளை துருவிலிருந்து காப்பாற்றியதற்காய்   ஹிட்லரின் ஆவி சிறிலங்காவை முத்தமிடும் மகிந்தவின் நிஜத்திற்கும் ஹிட்லரின் ஆவிக்கும் விசும்பும் உயிர்களின் மிரட்சி விருப்பம் ஆம் இவர்கள் பூமியை சவமாக்கும் பிதாமகன்கள் நாஜிக்கள் இன்னும் இன்னும் புத்தனின் கீழே பெருகி ஹிட்லரின் மீசைக்கு தாமரைப் பூ வைக்கிறார்கள் மீசையில்லாத மகிந்தவின் முகத்தில் ஹிட்லரின் மீசை அவ்வளவு பொருந்துகிறது நாம் கொன்று புதைக்கப்படும் இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறோம் மரணம் வனப்பு மிக்கதாய் மகிந்தவின் வெள்ளையாடையில் எழுதியிருக்கிறது யூதர்களின் பிண நாற்றம் எங்களது பிண நாற்றத்தில் காணமல் போன போது பூமி இரத்தத்துக்கு பழகிக்கொண்டது ஹிட்லர் மகிந்தவை தன் சாயலில் இருக்க வேண்டாமென சொல்லுவதற்கு முன் மகிந்தவின் சாயலில் ஹிட்லர் இருந்ததற்கு கடவுள் புத்தன் சாட்சி.

தொப்புள்கொடிகளே! உம்மில் அடைக்கலமான எம்மைக் கொல்வீரோ ?

Image
பதாகைகளில் சாகும் புரட்சி துயரங்களை மொழிபெயர்த்து முழங்கிக் கொண்டிருந்தது வானம் அந்த முழக்கத்திலிருந்து முனை மழுங்காமல் மலையொன்றில் வீழ்கிற சபிக்கப்பட்ட வாழ்வின் ஏக்கம் என்னுடையது மட்டுமன்றி எல்லோருடையதும் ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க அகதியெனும் பெயரோடு தொப்ப்புள் கொடி மண்ணில் போலீஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை முகவரிகள் தேடிச் செல்லும் நாடற்றவர்களின் நாட்கள் வீடற்று அலைவதில் அபூர்வமில்லை கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன் இப்படியாக வேறு மொழி பேசுகின்ற அனைவரும் மொழியின் பெயரால் அழைக்கப்பட நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவோம் அவர்கள் எமது தொப்புள் கொடிகளென சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும் புரட்சி இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள் வீழ்கிறது அதிகாரப் பிரிவுகள் எங்களை நோகடித்து பயங்கரவாதிகளென வன்மம் தீர்க்கிறார்கள் பதாகைகளில் தொங்கும் எமக்கான தேசபிதாவை கொள்வனவு அரசியலி