Posts

Showing posts from September, 2014

சந்தனம் மித்தினால் தடவுடா புடுக்கில

Image
தமிழீழ தாயகத்தில் நிகழ்ந்த இனவன்முறையினால்/ அல்லது அதனை கராணம் காட்டி ஐரோப்பிய நாடுகளிற்கும் பிற டாலர் தேசங்களிற்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவு என்பது மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு நிகழ்ந்த காலத்தில் மிகப் பெரும் பொருளாதார பூவுலகை அந்த அரசுக்கு ஆதரவாக கட்டி அமைத்த முன்னுதாரண மக்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந் மக்களுக்கு வரலாற்றில் பெரும் பங்குண்டு என்பது உறுதியானதென்றாலும் சில புலம்பெயர் மக்களிடம் காணப்படும் படோபடங்கள் அருவருக்கச் செய்கிறது என்பது தான் வருத்தமான உண்மை. இனப்படுகொலையின் பின் தமிழீழ தாயகத்தில் மக்கள் படுகின்ற அவலம் என்பது பட்டினிகள் சூழ தொடர்ந்து செல்கிறது மேலும் போரில் வீசப்பட்ட இராசயனக் குண்டுகளால் அந்த நிலம் நச்சுவளி கொண்ட காற்றைத் தான் வீசி வருகிறது ,பச்சை வயல்களென தலை அசைத்த ஊரின் அடையாளம் மழை அற்று வறண்டு போய்க் கிடக்கிறது. இனப்படுகொலை தமிழர்களின் உயிரை மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதல்ல தமிழன் நெல் விதைக்கும் வயலிலிருந்து அவன் சுவாசிக்கும் காற்று வரை நீர் அருந

பதுங்கலின் விவரணை

Image
கொடுங்கோலின் பனியில் உறைந்து வீழ்ந்தவன்  யுகத் தீயின் வாசலில் சாம்பலாகி தகித்தவன்  சிந்திய ரத்தத் துளிகளில் தாகம் தீர்த்தவன்  சிங்கத்தின் கர்ஜனையில் காய்ச்சலாய்க் கிடந்தவன்  துரோக ராஜ்யத்தில் வதையில் அதிர்ந்தவன்  புத்தனின் துவக்கால் மலவாசல் சிதைந்தவன்  சப்பாத்துக் குறிகளின் விந்தில் நனைந்தவன்  மின்பாயும் முட்கம்பிகளில் வீசப்படயிருந்தவன்  நகம் பிடுங்கும் ரணவறைக்கு கொண்டு செல்லப்பட்டவன்  மேலும் மேலும் இது போல நேர்ந்திருப்பதால்  நானொரு நாடற்றவனென அறிந்திருப்பீர்கள்  இதன் பின்னும் பின் தொடரும்  ஈரம் தோய்ந்த ஓலத்தின் வாசனையை  நீங்கள் விரும்பாத போதிலும்  பெரு மூச்சு விட்டு சற்று உங்களிடம் அனுமதியுங்கள் பெரும் காயத்தின் நிழலில் இளைப்பாறும் என்னுடலில்  பழிவாங்கல் துளிர்க்கிறது எல்லாவற்றுக்குமாய். -அகரமுதல்வன்  11.08.2014