Posts

Showing posts from 2016

அவலம்

Image
ஒரு நல்ல மனிதன் வசதியிருக்கும்   பாதையைத் தேடமாட்டான். மாறாக கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான் – பிடல் காஸ்ரோ “தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று கம்பீரமாய் அமர்ந்திருப்பதை காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும்   சிவந்த தீவு அறியும்” (டாங்கிகளில் சரியும் முல்லை நிலா கவிதைத்தொகுதியிலிருந்து ) இரத்தம் சொரியும் தமிழ் மக்களின் பக்கமிருந்து உருவாகியிருப்பவன் நான். எல்லாவிதமான தத்துவங்களை விடவும் நடைமுறை மேலானது. எப்போதும் தத்துவங்கள் நடைமுறையால் சரிபார்க்கப்படவேண்டும். தத்துவம் நடைமுறையால் தான் உயிர்பெற முடியும். ரத்தம் சொரியும் பரிசோதனை எலிகளாக்கப்பட்டிருக்கும் அனுபவத்தைக் கொண்ட       தமிழீழ மகன் நான். இந்தத் துயரிலிருந்து விடுபடுவதற்கு துயரத்தின் அடிச்சுவடுகளை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. ஒவ்வொரு தமிழீழ குடிமகனுக்குமுண்டு. அதுமட்டுல்லாமல் தமிழீழத்துயரத்தை வெறும் உணர்ச்சிபூர்வமான தளங்களில் இருந்து பார்க்காமல் அதற்கான அறிவியல் காரணங்களையும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் யதார்த்தத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தியேயாகவேண்டும். அது அவசிய

கிழவி ( சிறுகதை )

குயிலினிக்கு இன்றைக்குத் தான் 24 வயது தொடங்கியிருக்கிறது.          முள்ளிவாய்க்காலில் தாயும் தகப்பனும் ஒரே இடத்தில் குண்டு வீழ்ந்து செத்துப் போகும் போது எஞ்சிய கண்ணீரைப் போலவே குயிலினியும் அம்மம்மாக் கிழவியும் காயங்களற்று தப்பினார்கள். அந்த நாளும் அவளுக்கு பிறந்த நாளாகத் தான் இருந்தது.  ஏப்ரல் மாதம் 27 ம் திகதி பதுங்குகுழியில் தாயையும் தகப்பனையும் புதைக்கிற பொழுது பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது. தகப்பனின் சிதைந்து போன தலையை மண் போட்டு மூடிய குயிலினியின் கைகளுக்குள் இருந்து வீழ்ந்த மண் துகள்களில் துன்பத்தின் மலை எழுந்தது. இனிமேல் குண்டு வீழ்ந்தால் எம்மில் இருவரும் மிச்சமில்லாமல் இறந்து போகவேண்டுமென்று கிழவி அழுது சொன்ன வார்த்தைகள் போர்க்க்களத்தின் காற்றில் இழைந்தது. ஆனால் இருவரும் சாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாய் எல்லாவற்றையும் கடக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்காலில் இராணுவம் மக்களை பேருந்துகளில் ஏற்றிய பொழுது கிழவி குயிலினியைப் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் இப்பொழுதும் அவளின் கைகளில் தெரியும். முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காலங்களில் குயிலினிக்கு அம

மிஞ்சியிருப்பவர்களையும் பலியிடும் சம்பந்தனின் சமஸ்டி.

“பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதை”யாக எம் மக்களின் அவலத்துக்கு நீதி கிடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் ஒத்த மனம் கொண்ட ஒத்த தமிழின    எதிர்ப்புக் கொண்டவர்களாக வரலாறு எங்கும் இருந்ததைப் போல           இன்றைய அரசும் இருந்து வருகிறது. கடந்த காலத்தில்  “சமாதானத்துக்கான வெள்ளைப் புறா“ என்று சந்திரிக்கா ஏற்படுத்திய பிம்பத்தைப் போல “நல்லிணக்க அரசு” என மைத்திரி –ரணில் அரசும் பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கள அரசு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதியைத் தந்துவிடுமென நம்புகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லிணக்க அரசென அழைக்கப்படும் மைத்திரி –ரணில் அரசை சர்வதேச சமூகத்திடம் இருந்து காப்பாற்றி வருகிறது. இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒப்ப அவர்களுக்கான நீதிக்காய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலத்திலும் இயங்கியது கிடையாது. அப்பாவி மக்களாய் கொல்லப்பட்டும் சித்ரவதைக்கு உள்ளாகியும் வாழ்வின் படு துன்பமான கணங்களோடு வாழ்ந்துவரும் மக்களிடம் கலந்தாலோசித்து எந்தவொரு அரசியல் முடிவுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எட்டப்படுவத

இரத்தம் கலவாத துப்புரவான கடல் நிரந்தமாகிறது - யமுனா ராஜேந்திரன்

Image
நினைவுகள் இல்லாமல் ஒருவன் ஒரு இடத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது. எனது தாய் நாட்டை நானே கட்டமைத்துக் கொண்டேன். எனது மொழிக்குள் எனது அரசைக் கூட நான் அமைத்துக் கொண்டேன். எனது சொந்த நாட்டில் அல்லது எனது சொந்த வீட்டில் அல்லது எனது சொந்த ஒரு அறையிலேயே கூட நான் பெயர்ந்தலைபவனாக இருக்கலாம் ;; அந்நியனாக இருக்கலாம். பெயர்ந்தலைதல் என்பது புவியியல் சார்ந்த அர்த்தத்தை விடவும் பரந்துபட்டது. இது பாலஸ்தீனம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. நான் பெயர்ந்தலைதலுக்கு அடிமைப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். வரலாறு முழுக்க இந்தப் பெயர்ந்தலைதல் இலக்கிய சிருஷ்டிக்கான உந்துதலாக இருந்திருக்கிறது இல்லையா ? - மஹ்முத் தர்வீஷ் நாடற்றவனாய் வாழ்கிறேன்   நாடற்றவனாய் எழுதுகிறேன்   நாடற்றவனாய்த் திமிருகிறேன் - அகரமுதல்வன் ஈழ இலக்கியத்தையும் ஈழக் கவிதையையும் தமிழக இலக்கியவாதிகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் ? இவற்றை அணுகுவதற்கான இவர்களது மதிப்பீடுகளின் ஆதாரங்கள் என்ன ? ஈழக் கவிதைகள் அரை நூற்றாண்டு தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள்-முப்பத்தைந்து ஆண்டு கால ஆயுதவிடுதல