Posts

Showing posts from March, 2018

பூமியின் புன்னகையை பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டேன் - அடுத்து என்ன?

Image
“நான் சமாதானத்தை நாடுகிறேன்,அவர்களோ நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.”  என்றொரு வாக்கியம் பைபிளில் இருக்கிறது.தமிழீழர்கள் விரும்பிய சமாதானத்தையும்                அமைதியையும் இவ்வையகம் இனப்படுகொலை நடத்தி              கொன்றொழித்துக் கொண்டிருந்த காலங்களில்  இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் எங்கும்  ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே என்னுடைய  இலக்கியத்தின் விளைநிலம்.                                        போர்க்களத்தில் உயிர்பிழைத்த  நிகழ்வுகளை கலையாக்குகையில் ஏற்படுகிற  உளச்சிதைவை ஏற்றுக்கொண்டேன்.                                                        என்  எழுத்துவத்தின் நீண்ட நடமாட்டத்தில் என்றைக்கோ எனதுள்ளம்  முழுமையும் சிதைந்துவிடுமோவென்று  அஞ்சத்தோன்றுகிறது.யுத்த நாட்களில் வாழ்வது மட்டுமல்ல, அதனை எழுதுவதும் கொடூரமானதாகவேயிருக்கிறது. எனது இனத்தின் அவலக்குரலை            கேட்கும் ஒரேயொரு  செவியைக் கூட இவ்வுலகம் இன்னும்                         கொண்டிருக்கவில்லை. கவிதைகளை எழுதுகையில் மனம்படுகிற வாதையை                              களத்தில் வீரச்சாவு அடைந்த என

போர்க்களப்படைப்பு -அகரமுதல்வனின் சிறுகதைகளை முன்வைத்து.

Image
தமிழின் தொடக்ககாலச் சிறுகதைகள் வடிவ அமைதி நோக்கியும், உள்ளடக்கத்தேவை நோக்கியும் பயணித்தன. புதுமைப்பித்தனும், கு.அழகிரிசாமியும், மௌனியும், ஜெயகாந்தனும் சிறுகதைப் படைபாளிகளுக்கான முன்மாதிகளாக உருவெடுத்தனர்.  நூற்றுக்கணக்கான சிறுகதைப் படைப்பாளர்கள் தமிழில் வேர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர். அவரவருக்கான களங்கள் தமிழ்நிலத்தில் புதிய பாய்ச்சலை, தளங்களை விரிவுபடுத்தின. அவ்வகையில் புலம்பெயர் மற்றும் போர்க்களப் படைப்பாளிகள் தமிழர்தம் துயரங்களின் இரத்த சாட்சியங்களை உலகு தழுவிய பொதுமைநிலையில் படைத்துவருகின்றனர். அவர்களுள் ஒருவரான அகரமுதல்வன், படைப்பிலக்கியத்துறையில் வீறுகொண்டெழுகிற இளையதலைமுறை எழுத்தாளராவார். ஈழப்போரின் வடுக்களை, துயரங்களை, வதைகளை எடுத்தியம்புகிற அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ என்னும் சிறுகதைத் தொகுதியின் முதல் ஐந்து கதைகள் மட்டுமே ஆய்வுப் பொருளாக அமைகின்றன. போர்க்களமும் வதைபடும் வாழ்வும்  ஈழத்தமிழர்களை அழித்தொழித்து சிங்களப் பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்கு பலமுனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதிவழி, ஆயுதவழி என பலகட்டப் போராட்டங்கள

கண்டி கலவரம் : ஜெப்னா பேக்கரி மற்றும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன

Image
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா? ஆம், இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும். -Bertolt Brecht இலங்கையின் பவுத்த ராட்சத தேசியவாதம் இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய மக்களையும்கா வுகொள்ளத்தொடங்கிற்று. இதனை சிங்கள இனவாதிகளும், அவர்களின் அதிகார அலகுகளும் எந்தக் காருண்யமுமற்று செய்வார்கள். கடந்த வாரத்தில் இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாட்டவத்திலும் நடந்த இருவேறு சம்பவங்கள் அப்பாவி இஸ்லாமிய மக்களை அச்சத்துக்கு உட்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய தலைமைகளும்,அமைப்பு உறுப்பினர்களும் அரசின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு அறிக்கை வெளியிடுபவர்களாக இருக்கிறார்கள். இலங்கை சட்டத்தின் படி இன்னொரு தேசிய இனமாகவும் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை இனமாகவும் இருக்கிற முஸ்லிம் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள இனம் நடத்திய கொடூர வன்முறைக் காட்சிகளை இணையவழியாகவும் களத்தில் இருப்பவர்கள் சொன்ன தகவலின்        மூலமும் அறிய முடிந்தது.இலங்கை என்பது பவுத்த நாடு.இந்தத் தீவே சிங்களர்களுக்கானது என்ற தம்மதீப கோட்பாட்டின் மூலம் தமிழர்களை அழித்தொழித்து பலவீனப்பட