Posts

Showing posts from July, 2015

தீயெனப் பெய்யும் இரத்தக் குறிப்புகளில் கருகும் வாசக இமைகள் - கணேசகுமாரன்

Image
இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் படுகொலைகள் குறித்துக் கவலைப்படுவோம். வலி உணர்த்தியாய் செயல்படும் அகரமுதல்வனின் கவிதைகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளப்போகிறோம். வெறும் பார்வையாளராய் இருந்து நாம் உணர்ந்த வலி பங்கு கொண்டவனின் வலியில் அணுவளவு கூட இருக்காது என்னும்போது நாம் கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு படுகொலைகள் குறித்து கவலைப்படுவோம். நம்மால் முடிந்தது அது மட்டுமே. இன்னொன்றும் செய்யலாம் . பரவலாக விதைக்கப்பட்ட அகரமுதல்வனின் துக்கத்தின் அடியாழத்திலிருந்து அவன் கையைப் பற்றிக்கொள்ளுதல் மட்டுமே. கண்களற்றவனுக்கு நல்ல பிரம்பும் நாடற்றவனுக்கு நல்ல துவக்கும் முக்கியம். இல்லையென்றானபின் இவன் கொலை செய்யப்பட்டான். முதலில் நிர்வாணப்படுத்துதலில்...பின் ஆசன வாயிலில் கம்பிகள் நுழைத்து...பின் வாயில் சிறுநீர் கழித்து...இறுதியில் அவன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் பிழைக்கவில்லை. சமூகத்தில் பலரும் பலவிதத்தில் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலும் கவிஞர்கள் கொலை செய்யப்பட காரணமே தேவையில்லை. தொகுப்பு முழுவதும் அகரமுதல்வன் கொலை செய்யப்படும் விதங்கள் எவ்விதத்திலும் கற்ப

கோமா சக்தி - சிறுகதை

அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி  இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக  திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வேலைக்காரனைப் பார்த்து வாங்கி வந்தனியா அந்தப் புத்தகத்தை என்று கேட்டதும் வேலைக்காரன் என்னவோ முடுலிங்கத்திற்கு விருது கொடுப்பவன் போல புத்தகத்தை இரண்டு கைகளும் நிமிர்த்திப் பிடித்து கொடுத்தான். முடுலிங்கத்திற்கே விருதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது என்றாலும் வேலைக்காரன் தோட்டத்தில் தானே வேலை செய்கிறா

திருச்சொற்களால் எழுதப்படமுடியாத நிஜம் - தீபச்செல்வன், அகரமுதல்வன் ஆகியோரின் கவிதைகளை முன் வைத்து இனப் படுகொலை கால இலக்கியப் பதிவு-ஆழி செந்தில்நாதன்:-

Image
கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல். இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது: எதிர்ப்பு, ஆச்சரியம், தவிப்பு, தத்தளிப்பு, கொதிப்பு, ஆற்றாமை முடிவற்ற ஒரு பெருங்கனவு. கவிஞர் சேரனின் இந்த கவிதையோடு தொடங்குவதற்குக் காரணம் உண்டு. அவர் பட்டியிடும் உணர்கவுகள்தான் உலகு தழுவியதோர் ஒற்றை மேகமாக 2009 மே மாதத்தில் உலகத் தமிழர்களின்மீது கவிந்திருந்தது. சென்னையில் ஒரு தேநீர்க்கடையில் தினசரி காலையில் ஒரு கார் டிரைவரைச் சந்திப்பேன். மே 18 இல் அல்லது 19 இல் என நினைக்கிறேன். கடையில் நாங்கள் இருந்த சமயம், அந்தச் செய்தித்தாளை எடுத்து அவர் தலைப்புச்செய்தியைப் படிக்கிறார்: பிரபாகரன் கொல்லப்பட்டார். அவர் நம்ப மறுத்து தலையை அசைத்தார். “இதெல்லாம் சும்மா சார். அவர் நேதாஜி மாதிரி. அவரயெல்லாம் இவனுங்க ஒன்னும் பண்ணமுடியாது. அவர் எப்பவோ அங்கேயிருந்து பறந்திருப்பாரு” என்றார். அவருக்கு நக்கீரன் துணையிருந்தான். ஆனால் கடையில் ஒரு மெளனம் நிலவியது. இழவு வீட்டின் சோகமொன்று அங்கே குடிகொண்டிருந்தது. யாராவது ஒருவர் அங்கே விசும்பத்தொடங்கினால், அநேகமாக எல்லோரும் அழுதிருப்பார்கள். ஏதாவது நடந