நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் - கவிஞர் சூரியதாஸ்


அகரமுதல்வனின் "அறம்வெல்லும்அஞ்சற்ககவிதைநூல் உணர்வுத்தளத்தில் வாசிக்கமுனைந்தால் ஒரேமூச்சில் வாசிக்க இயலாதது.
சில இடங்களில் கண்ணீர் கசிவதையும் கைகள் நடுங்குவதையும் தவிர்க்க இயலாது. என்றாலும் இவை நம்பிக்கையின் கவிதைகள்.

ஒரு மாபெரும் எரிமலையின் நடுவே தன்  ஈரம் காயாது உலா வரும் பனித் துளியைப் போலவும் பனிமூடிய மாமலையின் நடுவே வெப்பம் குன்றாது சுடரும் அக்கினிக் குஞ்செனவும் இவரது கவிதைகள் நம்பிக்கையோடும் விடுதலை வேட்கையோடும் வலம்வருகின்றன.

வாழ்க்கை பரபரப்பாகவும் பதட்டமாகவும் மாற்றம்பட்டிருக்கிறது.
சுற்றிச் சுற்றிச்சுழன்றடிக்கும் ஆறைக்காற்றில் தன்னையும் தன்படகையும் பத்திரமாய்க் கரை சேர்ப்பதே கடமையாய் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.

எதற்கும் சட்டென அணிதிரளும் இளைஞர்களின் துடிப்பும் துள்ளலும் சுயநலமாகவும்  நுகர்வு மோகமாகவும் மடைமாற்றம்செய்யப்பட்டிருக்கிறது.
தன் காயங்களையோ கண்ணீரையோ வெளிக்காட்டிக்கொள்ளாமல்
உள்ளுக்குள்ளே மரத்துப் போகச் செய்யப் போதியஅளவுக்கான
வலி நிவாரணிகளாய் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப்பெட்டடிகளும்
வீதிக்கு வீதி மதுக்கடைகளும்இருக்கின்றன.

வேட்டையாடுதலும் வேட்டைக்குத் தப்புதலுமான விலங்கின விளையாட்டுக்குள் பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவரையும் சிக்கவைத்தசாதனை
கல்வி, அரசியல், பொருளாதாரம் எனும் வலியகரங்களுக்குச் சொந்தமானவை.


சுயம் இழந்து போன மனிதனைச் சுயநினைவுக்குத் திருப்புதலும்
தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் துடிப்பையும் துயரத்தையும் கண்டு துளிக் கண்ணீர்விடவும், நேசக்கரம்நீட்டவும், கரங்கள் கோர்த்துக் கயமையைக் கண்டிக்கவுமான தூண்டுதலைத் தந்து மனிதனை மனிதனாக மீட்டெடுக்கும்அளப்பரிய சக்தியாக கலையும் இலக்கியமுமே இன்றளவும் இயங்கிவருகின்றன. அதுவே இலக்கியத்தின் கடமையுமாகிறது.

இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமும் இனஅழிப்பும் தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தமிழின அழிப்புத்தான். நாம் போன பாதை முட்டுச்சந்தாயிருந்தது. அல்லது நமது பாதையில்சூழ்ச்சிச்சுவர்எழுப்பப்பட்டது. அல்லது சுவர்களைத் தகர்க்கும் நண்பர்களை இனம்கண்டு ஒருங்கிணைக்கத் தவறிவிட்டோம் என்றெல்லாம் ஆக்கப்பூர்வமாய்ச் சிந்தித்து அடுத்ததலை முறைக்குச் சொல்லஆயிரம்இருக்கிறது. அவற்றை இத்தொகுப்பும் ஆய்கிறது.

ஆனால் அந்தத் தோல்வியை எள்ளி நகையாடி வயிறார எண்ணுவது
அவனின் நெற்றிப்பொட்டில் ஊடுருவிய ஒற்றைத்தோட்டாவின்
பின்னிருந்த சூழ்ச்சியை விடஅருவருக்கத்தக்கதாய் இருக்கிறது.
அதுவும் தகப்பனை இழந்த பிள்ளையிடமே கேலிபேசி
அதற்கு அவர்களிடமே ஆதரவும் கேட்பது பயித்தியத்காரத்தனமும் மரணவேதனையும் தரவல்லது என்பதைத் தமிழ்நதியின்வார்த்தையில்
"இன்னும்எத்தனைமுறைதான்எங்களைக்கீழ்மைப்படுத்துவீர்கள்"
என்பதில்உணரலாம்இழவு வீட்டுக்குக் கூடக் கறிச்சோறுக்கும் சாராயத்திற்கும்
மட்டுமே வருபவர்களை என்னசெய்யபுறங்கையால் தள்ளிவிடலாம் போகட்டும்.

அந்தத் தீவில் பிறந்து சதியாலும் சூழ்ச்சியாலும் தமிழீழப்போராட்டம்ஒடுக்கப்பட்டுதாய் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு கவிஞனின் வாழ்வும்
அது பற்றிக் கவிதை எழுதுவதும்எப்படிப்பட்டது?
"துயரங்களுக்குச்சொந்தமான
தீவொன்றில்பிறந்ததுபற்றிக்
கவிதையெழுதுவது
தனதுஇதயத்தைத்தானேசுடுவதேயாகும்
அல்லதுகண்களைப்பிதுக்கித்தின்பதைப்போல... "

தன் மண்ணின் நினைவுகளோடு வாழும் வாழ்வென்பது சிறுகச் சிறுக மடிதலாகிறது.
Slow poison
சாப்பிடுவது போல உயிரை மெல்ல மெல்லக் கரைக்கிறது என்பது சோகமான உண்மை


"கவிதையின் தொடக்கத்தில்
என்னுயிர் இருந்ததைவிட
இன்னும் மரணித்துவிட்டதை
நீங்களும்அறியவாய்ப்பில்லை 
எழுதிக்கொண்டிருக்கும் இக்கவிதையைப்போல "

"இன்னும்எத்தனைதடவைஇவர்களைக்கொல்லமுடியும்" எனும்கவிதையில்"பிரபஞ்ச வெளியெங்கும் புதைத்துக்கொள்ளப்
போதுமானவரைஅவர்களிடம்சவங்கள்
ஏனெனில்அவர்களுக்கான நாடுஅவர்களிடமில்லை"
என்றும் வாசிக்கையில் மனம் கனத்து போகிறது.

"ஊதிப்பெருத்த குழந்தையொன்றின்
பிணத்தையுண்ணும்
எறும்புகளைப் பார்த்திருக்கிறேன் "
என்னும் வரிகளில்எதிர்காலக் குருத்தொன்று
எறும்புகளுக்கு இரையாகிப் போனதின்அவலத்தைஎண்ணி
அதை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வந்து எழுதுவது அகரமுதல்வன் சொல்வதைப் போல
தனதுகண்களைத்தானேபிதுக்கித்தின்பதுபோலத்தான்.


இளம் பிஞ்சுகளும் இரக்கமின்றி அழிக்கப்பட்ட அல்லது தன் தாயக விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்ததை நினைக்கையில் தான் உயிர்வாழ்வது சுயநலமாகச் சுடுகிறது என்று " பிரமையில் பதுங்கும் பூனை" என்னும் கவிதையில் எழுதுகிறார்.

ஜம்மு காஷ்மீரின் குனான் போஷ் போரா கிராமம்.
ஓர் இரவில்இராணுவம்நுழைகிறதுஆண்களை எல்லாம் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்கிறதுஒரு தாயின் பத்து வயதுச் சிறுவன் தன்தாய் இருக்கும் மாடி அறையைப் பார்த்து கண்ணீர் சொரிந்தபடியே அவளின் சகோதரர்கள் தந்தையோடும் பெரியவர்களோடும் அழைத்துச்செல்லப்படுகிறான்.

நள்ளிரவில் மீண்டும் ஊருக்குள் புகுந்து ராணுவம் துப்பாக்கி முனையில்பெண்களை வல்லாங்கு செய்து சிதைக்கிறது.சில ராணுவச் சிப்பாய்கள்அந்தத் தாயின் வீட்டுக்குள் நுழைகிறார்கள்அவர் பயத்தில் மலங்கழித்து விடுகிறார்.  அனிச்சையாய் அந்தப்பீயை அள்ளி எடுத்துதன்முகத்திலும் முடியிலும் முலையிலும் உடலெங்கும் பூசிக்கொள்கிறார்வெறியுடன் வந்த சிப்பாய்கள் அருவருப்புடன் காறிஉமிழ்ந்து
துப்பி விட்டுச் சென்றுவிட்டனர்பல ஆண்டுகள் கழித்து அந்தத் தாய் தன் மகனிடம்
 
"
என்னுடைய அந்தப் பீ தான் என்னைக் காப்பாற்றியது அலி.
நூற்றுக்கணக்கான பெண்கள் மானமிழந்தபோது
உன் அம்மாதப்பித்தாள் என்பதில் 
பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை
மகனே
பெருமைப்பட்டுக்கொள்ளஒன்றுமில்லை" 
என்றுகூறியதாக. தற்காலக் காஷ்மீரிக் கவிஞர்முஹமத்அலி
"பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை" என்னும்
அவரது சுயசரிதையில் இதைப் பதிந்துவைத்துள்ளதைப் போல அகரமுதல்வனும் தன் ஆன்மாவின் வலியை  இத்தொகுப்புமுழுவதும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் இவை துயரம் பாடும் புலம்பல் கவிதைகள் அல்ல.
நம்பிக்கையின்ஒளிக்கீற்றுகள்.


ஒரு தனிமனிதனுக்கோ ஓர்இனத்துக்கோ இறுதி மரணம்என்பது
நம்பிக்கை இழப்புத்தான். நம்பிக்கை உள்ளவரை ஒரு மனிதனோ ,இனமோ தன் போராட்டத்தைத் தன்விடுதலையை, தன் இலக்கைத் தனக்குப் பின்னரும் தன் சந்ததிக்குக் கடத்திக் கொண்டுதான் இருக்கும்
.
"என்னைக் கொலையிடும் அரசுக்கு "என்னும்கவிதையில் 
" எனது குருதிக்கறைகளும் கவிதைகளும்
ஒரு சுதந்திர சுவர்க்கத்திற்கு
அழைத்துச் செல்லும் அடுத்ததலைமுறையை"என்றும்

"காந்தள் "என்னும்கவிதையில்
"
வாசற்தெளித்து விளக்கு வைத்து
கண்ணீருடையும் அக்கணத்திலும்
கிளை பரப்பும் தாகவிருட்சம்"என்றும்

"
தேசமகனின்அறைகூவல்" என்னும்கவிதையில்
"
எனது நிலம் எப்போதுமே
நம்பிக்கைகள் கருக்கொள்ளும் கருவறை" என்றும் நம்பிக்கையின் ஒளிப்பிழம்பாக இவரது கவிதைகள் கொழுந்துவிட்டுஎரிகின்றன.


இதனால்கவிதைஎனக்குத்துவக்குஎன்றேபாடுகிறார்.
நம்பிக்கை தீபம் ஏந்தியிருக்கும் கைகளுடன் கால்கள் பயணிக்கவும் வேண்டும்.
பயண திசையைத் தீர்மானிக்கவும் வேண்டும்.
அதற்குச் சுயதரிசனமும் வேண்டும்சுய விமர்சனமும் வேண்டும்.                    அவற்றின்நேர்மையானவெளிப்பாடாக"பிரபஞ்ச சதியோடுபோரிடும் ஓரினம்பற்றியது" என்னும்கவிதையில்.

"மாயக் கனவை நிறுத்தும் வரைக்கும்
நீளக் கண் மூடி எம்நிலத்தில்
சித்தார்த்தன்வந்தேறுவான்
………………
மாயக் கனவினிக்க கண்ணுறங்கும் காலத்தைக்
காவலரண் ஒன்றைக் கருத்தரிக்கச்செலவுசெய்"என்று
வீண் கனவு காண்பதின் விளைவையும் இனிவரும்காலத்திற்கான
தெளிந்தபார்வையையும்முன்வைக்கிறார்.

அந்த வகையில் மிகுந்த புரிதலுடனும் துணிவுடனும்
எழுதப்பட்டுள்ள
தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே
பதாகைகளில் சாகும் புரட்சி என்னும் கவிதைகள் கவனத்திற்குரியவை.

இங்கே தமிழனின் பிரச்சினைகள் பொதுவானவை,தோல்வி பொதுவானது,
துக்கம் பொதுவானது, இழப்புகள் பொதுவானவை,காயங்கள் பொதுவானவை. 
வலிகள் பொதுவானவை, கவலைகள் பொதுவானவை, கண்ணீர் பொதுவானது.
ஆனால் போராட்டம் மட்டும் தனித்தனியானது. ஏனெனில்
ஒவ்வொருவரின் கையிலும் ஒருகொடி இருக்கிறது.
 
எந்தக் கொடியின் கீழ் நின்று கைகளைக் கோர்ப்பது, போராடுவது என்பதே
பெரும் போராகி விடுகிறது"தானே" வெற்றியை ஈட்டித் தருகிறவன் என்னும் வெற்று ஒற்றைத் தலைக்கனத்திலேயே குப்புற வீழ்ந்து கொண்டிருப்பவன் தமிழன். 
தனித் தனியாய் வெற்றி பெற எண்ணி மொத்தமாய்த் தோற்றுப்போகிறான் தமிழன்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களை எந்தக் கொடியின் கீழ் என்று அல்லாமல் தமிழர்கள் என்னும் இன உணர்வோடு ஒரே தமிழ்க் கொடியின் கீழ் வென்றெடுக்க வேண்டும்.

உலகளாவிய பார்வையில் எதிரியின் மீதான அச்சத்தை விடவும்,
எதிரியின் வியூகத்தைக் கணிப்பதை விடவும் சர்வதேச வியாபாரிகளின் மீதான அச்சமே பெரிதாக எண்ணப்பட வேண்டிய காலம் இது.

ஒரு புதிய சந்தையை உருவாக்கவும், தன் சந்தைப் பொருளைச் சேதாரமின்றிக் கொண்டு சேர்க்கவும் வழிநெடுகிலும் எத்தனை உயிர்களைச் சேதப்படுத்தவும், இனப்படுகொலையை அரங்கேற்றவும் தயங்காத அவர்களின் வியூகத்தைக் கண்டுணர்வதுமே இன்றைய வரலாற்றுத் தேவையாகும்

நமது நேரடி எதிரிகள் கூடச் சர்வதேச வியாபாரிகளின் மறை முககைக் கூலிகளே என்பதை நமது நுண்ணறிவு சொல்லும்.
நமது உரிமையையும் நாட்டையும்  மீட்டெடுக்க
சர்வதேச அளவில் இனம், மொழி, மதம் மற்றும் எல்லைக் கோடுகள் கடந்து மனித நேயச் சக்திகளை ஒன்றிணைக்கும் உன்னதம் கற்க வேண்டும்.
இதையே அகரமுதல்வன்ராசதந்திரம் பற்றிய ஒரு தோல்வி
என்னும் கவிதையில்.

கனவுகள் தீராமல்
நடக்கும் இப்பொழுதில்
நான் நோக்கி நாடக்கும் தேசம் எனக்கானதே
முன்பு ஒருபோதும் கேட்காத ஏங்கொலி
எனக்குள் பிறப்பெடுக்க
என்னைச் சுற்றி
எம்மவர்
யாருமில்லாததையுணர்ந்தேன்
தசாப்தங்களின் இருளகற்றிய
பேரொளியின் மூச்சை
அவ்வளவு எளிதாக அழிக்கமுடிந்திருக்கிறது
தோல்வியை ஒப்புக் கொண்டு
வெற்றியின் அருகில் செல்ல
பிரபஞ்சத் தந்திரங்களை
கையாளும் வல்லமை வந்து சேர்
என்னிடத்தில்”  என்று முன் வைக்கிறார்.



அகர முதல்வனின்அறம் வெல்லும் அஞ்சற்க
தன் தொப்புள் கொடி தேசத்து மீனவனுக்காய் கண்ணீர் சிந்தி ஆரம்பிக்கும்முதல்கவிதையிலிருந்து

"அவமானம்நிறைந்தமுகங்களோடு
தமிழ்நாடுஎங்களைவரவேற்கிறது’’என்று

கண்ணீர் விடும் கடைசிக் கவிதை வரை மானுடத்தையே பேசுகிறது அல்லது மானுடத்தைநிலைநாட்டவே யாசிக்கிறது.அதுவும் உலகின் ஆதிக்குடியான தமிழ்க்குடியின் மாண்புக்காகவும் விடுதலைக்காகவுமே பேசுகிறது.


கவிதை குறித்து ஒரே ஒரு விமர்சனம் மட்டுமே.இன்னும் எளிமையான இளகிய நடையில் இனிவரும் கவிதைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

1985ம் ஆண்டு ஈழத்திலிருந்து வெளியான மரணத்துள் வாழ்வோம்என்னும் கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் உ.சேரன் அவர்கள் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது..

இந்தக் கவிதைகள் காலம் காலமாக நின்று எமது துயரங்களையும், சொல்லில் மாளாத இழப்புகளையும், மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டேயிருக்கும்.

அந்த அதிர்வுகள், விடுதலைப் போரின் எத்தகைய பின்தள்ளல்களையும் வெறுப்புடன் பார்த்து கவிதா அனல் உமிழ்ந்து கொண்டேயிருக்கும்நமது விடுதலைக்கு மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை அவை ஒருநாள் ஏற்றும்.”

இந்த வரிகள் அகர முதல்வனின் அறம் வெல்லும் அஞ்சற்ககவிதை நூலுக்கும் இப்போதும் பொருந்தும் என்றே நம்புகிறேன்.



















Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்