Posts

Showing posts from May, 2015

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி

Image
அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க”கவிதைத் தொகுப்பினுள் 40 கவிதைகள் உள்ளன. மித்ர பதிப்பகம் வெளியிட்ட அவரது இரண்டாம் கவிதை நூலைப் படித்த பொழுது, ஈழத்தில் படுகொலைகள் கொடூரங்கள் பற்றி ஏராளமான விபரங்களோடு கவிதை எழுதியிருக்கிறீர்கள் இவ்வகை  விபரங்கள் மட்டுமே கவிதையாகவில்லை என்று அகரமுதல்வனுக்குச் சொன்னேன் அவரும் பதில் சொன்னார். அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைகளைப் படித்த போது என் வியப்புக்கு அளவில்லை. வழக்கமான ஈழத்து கவிஞர்களின் கவிதைகளிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன என்பது மட்டுமல்ல இவற்றில் பெரும்பாலானவை அசலான கவிதைகள் அற்புதமான கவிதைகள் கவிதை இவருக்கு ஒரு அழகியல் சாதனமல்ல என்றாலும் கொள்ளையழகோடு கவிதை எழுதுகிறார். கவிதை எனக்கு ஒரு துவக்கு என்கிறார்.உண்மை தான் இவர் கவிதைகள் நம் நெஞ்சில் வெடிக்கின்றன.ஈழத்துக் கவிஞனது கவிதைகள் இந்தியத் தமிழனின் நெஞ்சில் வெடிக்கத் தான் செய்யும். ஈழத் தமிழர் மீது, ஈழத்து தமிழ்ப் போராளிகள் மீது மட்டுமல்லாமல் படைப்பாளிகள்,திறனாய்வாளர்கள்,ஆய்வாளர்கள் முதலிய அனைவர் மீதும் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல

அகரமுதல்வன் எழுதியுள்ள கவிதை களத்தினது அரசியல் பின்னணி - தத்தர்

Image
-      வந்து எங்களுடன் ஒன்றுகலவுங்கள் என எம்மை அழைக்கிறீர்கள். ஆனால் நான் எப்படி வரமுடியும்? நான் நிர்வாணமாக்கப்பட்டுள்ளேன் மற்றும் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு தலைகுனிந்துள்ளேன். இதனால் நான் எப்படி உங்களிடம் கௌரவமாக வரமுடியும்? வெறுங்கையாக்கப்பட்டுள்ள என்னிடம் உனக்குத் தருவதற்கு அன்பளிப்புகளோ பரிசுப்பொருட்களோ இல்லை. நீ என்னை மதிப்பதற்கு எனது கலாச்சாரத்தில் என்னதான் எஞ்சியிருக்கிறது? என்னைப்பார்த்து வறிய கேவலமான மனிதன் என்றுதான் உன்னால் எண்ணமுடியும். அப்போதுää எல்லாம் வல்ல உன்னிடம் நான் கையேந்தும் ஒரு பிச்சைக்காரனாக அல்லவா வரவேண்டும்? கனடா வாழ் செவ்விந்திய இனக்குழுத் தலைவரான டேன் ஜார்ஜ் வெள்ளையர்களை நோக்கி ‘ ‘ I was born 1,000 years ago'   ' என்ற தலைப்பில் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் உள்ள வரிகள் இவை. இக்கடிதத்தில் உள்ள இச்சிறிய பத்தி மட்டுமே அமெரிக்க கண்டங்களிலுள்ள எக்ஸிமோஸ் மற்றும் செவ்விந்திய இனத்தவர்களை வெள்ளையர்கள் எப்படி ஒடுக்கினார்கள் என்பதையும் அது சார்ந்த மேற்படி மக்களின் மனஉணர்வுகள் இன்றுவரை எப்படி உள்ளன என்பதையும் மிகத்துள்ளியமாக வெளிப்படுத்துகின்றது.

தமிழீழ இனப்படுகொலையும் நீதி நிலை நாட்டலும்

என்னைத் துன்புறுத்துகிறவன் எனக்குப் பலத்தைப் போதிக்கிறவன் -நைஜீரியப் பழமொழி  21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழீழத் தேசிய இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையின் வரலாறு இரத்தமும் சதையுமான கண்ணீரும் கதறலுமான சாவின் மணத்தோடு நிறைந்திருக்கிறது. பாரியதொரு இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் எமது அரசியலில்  வெறுமை நிரம்பிக்கிடப்பதோடு பழைய வெற்றிகளையும் சாகாசங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக நாம் ஆகியிருக்கிறோம். நாம் சந்தித்திருப்பது இனப்படுகொலையை  மட்டுமல்ல எதிர்பார்த்திராத தோல்வியையும் தான்.எந்தப் புள்ளியில் நிற்கிறோம் என்று தெரிந்தால் தான் நாம் சென்றடைய வேண்டிய புள்ளியை கண்டுகொள்ள முடியும் இல்லாது போனால் நாம் ஓடிக்கடந்த புள்ளிகளையும் மீண்டும் ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எங்களது எண்ணத்தில்,பார்வையில் இன்னும் முழுமைப்படுத்தப்பட்ட அவதானிப்பு நிகழவில்லை எனத் தோன்றுகிறது. இன்று இனப்படுகொலையையும் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்து ஆறாண்டுகளாகியிருக்கிற சூழலில் சர்வதேச அளவில் தமிழீழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான பார்வை சிறிதளவு மாற்றமடைந்து இருக்கிறதென வைத்துக் கொண்டாலும் அந்த

வரலாறு சார்ந்து காலத்தில் பதிகிற படைப்பு - தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை

Image
திட்டங்கள் தீட்டிக் கொண்டேயிருப்பதை விட்டு ஒழியுங்கள்,முதலில் செயலில் இறங்கிவிடுங்கள் - பிளாரன்ஸ் தானேந்திய  தூரிகையை மானுட அறத்தின் பக்கம் மட்டுமே சாய்த்துப் பிடித்த இந்த நூற்றாண்டின் ஓவியர்களில் ஓவியர் புகழேந்தி மறுக்கப்படமுடியாதவர்.வெறுமென வண்ணங்களை விசிறிவிட்டு ஓவியத்தின் ஆன்மாவை பறித்துவிடுகிற தூரிகைகள் நிரம்பிக் கிடக்குமிந்தக் காலத்தில் சிதைக்கப்பட்ட தேசத்தின் தசைகளையும் கண்களையும் குருதிகளையும்  இருளின் பிரதிநிதியாக இருந்து ஓவியங்களாக்கிய இவரின் கலைப்பணி என்பது ஒரு அரசியல் இயக்கத்தின் ஊடகச் செயற்பாடு. தமிழீழ விடுதலைப் போராட்டமும் அது சார்ந்த ஆதரவு  எழுச்சி அலைகளும் தமிழீழம் - தமிழ்நாடு எனும் தமிழர்களின் தேசத்தில் இரட்டைக்குழந்தைகள் போல என்றால் அது மிகையாகாது. தமிழீழர்களின் களம் தாயகத்தில் இருந்தாலும் தளமாக தமிழ்நாடு தான் என்றும் உறவு ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அமைந்திருக்கிறது.  புகழேந்தியின் ஓவியமும் அவரின் செயற்பாடுகளும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதை தமிழீழர்களாகிய நாம் உணர்ந்திருக்கிறோம். தமிழீழ அரசு நிகழ்ந்துகொண்டிருந்த சமாதான கால கட்டத்தில் புலிகளின் தலைவர்