Posts

Showing posts from December, 2014

துவக்குகளும் விடுதலையும் தயாராகவிருக்கிறது

இடம்பெயர்ந்து கொண்டிருப்பதை விட படுகாயங்களில் அமைதியிருப்பதை அம்மாக்கள் கற்றுக்கொண்டார்கள் கிபிர் அடிக்கு மத்தியில் பிறந்த குழந்தையை ரத்தத்தில் துடைக்க கற்றுக்கொண்டோம் வெடித்துச் சிதறிய குண்டுகளின் சுவாலையில் தேத்தண்ணி சூடாக்கினோம் பரா வெளிச்சத்தில் பதுங்குகுழி தோண்டினோம் எங்கள் இரவுகள் யுத்தத்தின் தீபாவளி கைகளில் நடுக்கத்தின் கருப்பை மிக மோசமாகவிருக்கும் நாளத்தின் அதிர்வு அசையும் குருதியிழப்பு வாழ்வின் எளிமை அவலத்தின் முகம் நான் போர் துரத்திய  எனது மரணம் வியப்பானது தசைகள் சிதைத்து வீசியெறியும் சிரிப்பற்ற நிலத்திலிருந்து அது முளைவிடுகிறது பதுங்குகுழிக்குள்ளிருந்து வாளி மூத்திரத்தை வெளியே ஊற்றிய அம்மாவிடம் இப்போது கைகளில்லை மாதவிடாயின் குருதிப் போக்கினை கிடந்தபடி கழித்த அக்காவின் காயம் பல கடல்கள் டாங்கிகளின் வாய்கள் பட்டினியான எம்முடலை பசி கொண்டது ஊரின் தெருக்கள் முழுதும் ரத்த வாடையை முகர்ந்து பார்த்த குழந்தைகளின் முகத்தில் மாமிசத்தின் நதி ஓடிக்கொண்டிருந்தது யுத்தத்தில் பவனி வரும் மரணம் சவக்குழிகளுள் தாயகம் புதைத்து

மகிந்தவின் தேர்தல் வெற்றியும் தமிழீழர்களின் சர்வேதச நகர்வும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு மைத்திரிபாலா சிறிசேனாவிற்கான ஆதரவாக உருப்பெற்றுள்ளது. இந்த நிலைப்பாட்டினை வைத்துக் கொண்டு அவர்கள் தமிழீழ மக்களாகிய எங்களை தொடர் கொலைக்களத்தின் விளிம்பில்  நிறுத்தியிருக்கிறார்கள் என சொல்வதற்கு நான் தயாரில்லை. மைத்திரிக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு என்பது மறுபுறத்தில் இனவாத சிங்களர்களின் வாக்குகளை மகிந்தவிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. கடந்த சனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக நின்ற சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததினாலேயே   சிங்கள வாக்குகள் அவரை நிராகரித்தன. அதே போல மீண்டும் மைத்திரியை தமிழர்களுக்கு ஆதரவானவர் என்கிற ஒரே பிரச்சாரத்தின் மூலம் தோற்கடிக்கும் அனைத்து வழிகளும் மகிந்தவிற்கு திறக்கப்பட்டுவிட்டது.கிட்டத்தட்ட மகிந்தவின் தேர்தல் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. தமிழீழ மக்களைப் பொறுத்தமட்டில் சிங்களத் தலைமைகளிடம் இருந்து  தீர்வு ஏற்பட்டு விடுமென நம்பியது கிடையாதென்றாலும் இந்தத் தேர்தலில் மகிந்த - மைத்திரி எனும் வேட்பாளர்களில் மகிந்த வெற்றியடைவது தமிழர்களின் சர்வதேச போராட்ட சூழலில் அவசியமான மூச்சாக

நீங்கள் நேர்கண்டவரே எம்மைக் கொன்றவர்

தமிழீழத் தமிழர்கள் எனும் தனித்துவமிக்க தமிழ் தேசிய இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையை இந்த நூற்றாண்டு அல்ல இனிவரும் நூற்றாண்டு கூட மறந்துவிடாது. அப்படிப்பட்ட இனப்படுகொலையை பெருவிருப்போடு நிகழத்திய சிங்கள இனவாதத்தினதும் சிறிலங்காவினதும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை தமிழருக்கு எதிரானவர் என்று வட்டம் போட்டு சுருக்கிவிட முடியாது. ஏனெனில் மகிந்த எனும் பெயர்ச்சொல் இந்த நூற்றாண்டில் மானுடத்திற்கு எதிரானது. அந்தப் பெயர் நீதிக்கு அப்பாற்பட்டது.கொடூழியத்தனமான யுத்தக்கொலைகளை நிகழ்த்திய வரலாற்றில் இப் பெயர் புதிது. இவ்வாறு எத்தனை அநீதிகளின் வகைகள் இருக்கிறதோ அனைத்திலும் அவருக்கு முடி சூட்டலாம்.ஆக மகிந்த எனும் பெயர்ச் சொல் இருபத்தோராம் நூற்றாண்டில் விதவிதமான மானுடக் கொலைகளின் வடிவமைப்பாளர் என்று கூட சந்தேகமின்றி நிறுவலாம்.                                                                                                                       நேற்றைக்கு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட மகிந்தவின் நேர்காணல் வெறும் சந்திப்பை காட்சிப்படுத்தியது போன்றது. கேட்கப்பட்ட கேள்விகள், பதிலள