Posts

Showing posts from July, 2016

இரத்தம் கலவாத துப்புரவான கடல் நிரந்தமாகிறது - யமுனா ராஜேந்திரன்

Image
நினைவுகள் இல்லாமல் ஒருவன் ஒரு இடத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது. எனது தாய் நாட்டை நானே கட்டமைத்துக் கொண்டேன். எனது மொழிக்குள் எனது அரசைக் கூட நான் அமைத்துக் கொண்டேன். எனது சொந்த நாட்டில் அல்லது எனது சொந்த வீட்டில் அல்லது எனது சொந்த ஒரு அறையிலேயே கூட நான் பெயர்ந்தலைபவனாக இருக்கலாம் ;; அந்நியனாக இருக்கலாம். பெயர்ந்தலைதல் என்பது புவியியல் சார்ந்த அர்த்தத்தை விடவும் பரந்துபட்டது. இது பாலஸ்தீனம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. நான் பெயர்ந்தலைதலுக்கு அடிமைப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். வரலாறு முழுக்க இந்தப் பெயர்ந்தலைதல் இலக்கிய சிருஷ்டிக்கான உந்துதலாக இருந்திருக்கிறது இல்லையா ? - மஹ்முத் தர்வீஷ் நாடற்றவனாய் வாழ்கிறேன்   நாடற்றவனாய் எழுதுகிறேன்   நாடற்றவனாய்த் திமிருகிறேன் - அகரமுதல்வன் ஈழ இலக்கியத்தையும் ஈழக் கவிதையையும் தமிழக இலக்கியவாதிகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் ? இவற்றை அணுகுவதற்கான இவர்களது மதிப்பீடுகளின் ஆதாரங்கள் என்ன ? ஈழக் கவிதைகள் அரை நூற்றாண்டு தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள்-முப்பத்தைந்து ஆண்டு கால ஆயுதவிடுதல