Posts

Showing posts from June, 2016

"இரண்டாம் லெப்ரினன்ட் " கேட்க மறுக்கிறவர்களுக்காக சொல்லப்பட்ட கதைகள் - லஷ்மி சரவணகுமார்.

Image
"துப்பாக்கி சுடப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு தோழனை இழக்க நேர்ந்தது , ஒருவர் தியாகியாக நேரிட்டது . மனித உடல்களால் உரமிடப்பட்ட நிலத்தில் , முன்பணமாகக் கொடுக்கப்பட்ட மற்றுமொரு தொகை புதைந்து போயிற்று .”                      ’ போர் தொடர்கிறது ’ – ‘ அகஸ்தா ரூவா பாஸ்டோஸ் . கதைகளுக்கு எப்போதுமொரு தனித்தன்மை உண்டு . கதை சொல்லிகளை காலம் மறந்து போனாலும் கதைகள் ஏதாவதொரு வடிவில் எப்போதும் நம்முடன் உலவியபடியேதான் இருக்கின்றன . மனிதர்கள் பேசிப் பகிரும் அனேகமான கதைகளின் ஆணி வேரை நம்மால் இனங்காண முடியாதபோதுதான் முகம் தெரியாத அக்கதை சொல்லிகளின் மீது அலாதியான மதிப்பு கொள்ள முடிகிறது . வாழ்வை எழுதுதல் என்பதுதான் கதை சொல்வதின் பிரதானம் , அல்லாது வாழ்விற்கு வெளியே நான் அமானுஷ்யங்களை எழுதவே விரும்புகிறேனென சிலர் பிதற்றினாலும் உண்மையில் எல்லா அமானுஷ்யங்களும்   வாழ்வில் நாம் கவனிக்க மறந்து போனவைதான் . ஒரு கதை யாருடைய வாழ்வைப் பின்னனியாகக் கொண்டிருக்கிறதென்கிற அழுத்தம் அதை வாசிக்கும் போது எல்லாவற்றையும்வ