Posts

Showing posts from March, 2017

பள்ளத்தாக்கு - சிறுகதை

Image
தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது . சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது . தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள் . முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது . தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க . இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை . முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது . வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன . அமைதி ! யாவும் முழுமையடையும் அமைதி . அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள் . சூடு என்றேன் . உதட்டால் ஊதினாள் . அவள்   உதட்டால் ஊதி சூடு குறையுமா ? அவள் ஊதுவதை மூன்றாவது தடவையோடு நிறுத்திவிட்டாள் . நல்லவேளை நான் சாம்பலாகியிருப்பேன் . புறாக்கள் கூட்டுக்குள் இருந்து கொண்டு சத்தமிட்டன . சித்தம் எழுச்சியாகி யுகத்தின் ஓசையில் அடைகிறது . ஒன்றன் மேல் ஒன்றாய் அவள் சுடர் என்னில் துடித்து வெடித்தது . நான் நிரம்பியிருந்தேன் . அ