ஜெயமோகனுடைய அங்கீகாரத்தையோ பாராட்டையோ எதிர்பார்த்து நான் எழுதவரவில்லை – தமிழ்நதி

நேர்கண்டவர் - அகரமுதல்வன் 













உங்களின் பார்த்தீனியம் நாவல் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கப்படமுடியாதது. அந்தநாவலின் காலம் மிகமுக்கியமானது. அந்தக் காலத்தைநினைத்துஎழுதுவதுரணமாக இருந்திருக்குமல்லவா?

ஆம். என்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தது போல,
ஒரு நாவலை எழுதுவதென்பது நிகழுக்குச் சமாந்தரமாக இன்னொரு வாழ்வினை வாழ்வதாகும். பார்த்தீனியத்தைப் பொறுத்தவரை,  என்னுடைய சொந்த அனுபவங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் கூடுதல்வலியைஉணர்ந்தேன்.சிலசமயங்களில்,ஞாபகங்களின் உக்கிரம் தாங்காமல் எழுதுவதைநிறுத்திவிட்டுஎழுந்திருக்கவேண்டியிருந்தது. பொதுவாக, இரத்தம் தோய்ந்தவரலாற்றைஅடிப்படையாகக் கொண்டுஎழுதுவதேஒருவகைவாதைதான்.

புலம்பெயர்ந்துஉழலும் வாழ்வுபற்றிநீங்கள் ஏன் இன்னும் எழுதவில்லை?

எழுதவில்லைஎன்றுசொல்வதற்கில்லை. எனதுசிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்களில் புலம்பெயர் வாழ்வுபற்றிஎழுதியிருக்கிறேன். இனிவருங் காலத்தில்,அந்தஅனுபவங்களைநாவலாகஎழுதஉத்தேசித்துள்ளேன்.

புலிகளின் இராணுவவீழ்ச்சிக்குபிறகு  இன்றுநிலவும் அரசியல் சூழலை,ஈழ அரசியல் எவ்வாறுஎதிர்கொள்கிறதுஎன்றுஉணர்கிறீர்கள்?

செல்லும் திசையறியாதுதிகைத்துத் தடுமாறிநின்றுகொண்டிருப்பதானஒருசித்திரமேமனதில் இருக்கிறது. சரியானதலைமையோவழிகாட்டலோ இல்லாததனால் எழும் சிக்கலிது. புலிகளின் வீழ்ச்சியின் பிற்பாடு,எமதுஅரசியலைஅமெரிக்கா இன்னபிறநாடுகள் கையிலெடுத்துக்கொண்டுவிட்டன. அரசுகள் கூட்டுக் களவாணிகள் என்பதன் அடிப்படையில்,எங்களுக்குநியாயம் கிடைக்கவாய்ப்பில்லை.இத்தகையசூழலில் எமதுபாத்திரம்,பரிதாபத்திற்குரியபார்வையாளர்மாத்திரமே!


பரிதாபத்திற்குரிய பார்வையாளர்கள் பாத்திரத்தில் ஒரு இனத்தின் படைப்பாளிகள் உறைந்து போய் இருந்துவிடமுடியுமா?
இருக்கக்கூடாது. ஆனால், புலத்தில் இருக்கும் வெளிநிலத்தில் இல்லை. மகிந்த ராஜபக்ச காலத்தைவிட பரவாயில்லை எனினும்,வெளிப்படையாகக் கதைக்கவும் எழுதவும் அஞ்சும்  சூழலில் பெரிய மாற்றம் இல்லை. எந்நேரமும் காட்சிகள் மாறலாம். ஆகவே, படைப்பாளிகள் தமது உணர்வுகளை சுயதணிக்கை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் இருந்துஈழ இலக்கியம் தவிர்க்கப்படமுடியாதது. ஈழ இலக்கியத்தில் தவிர்க்கப்படவேமுடியாதபுத்தகங்களென்றால்,உங்கள் வாசிப்பின் அடிப்படையில் எவற்றைச் சொல்வீர்கள்?

தேவகாந்தனின் மொழியாளுமைஎன்னைஎப்போதும் வியக்கவைப்பது.அண்மையில் வாசித்தவற்றுள்,மகாபாரதத்தைமீள்வாசிப்பிற்குட்படுத்தியஅவருடையகதாகாலம்குறிப்பிடத்தக்கது. ஆரவாரங்களுக்குஅப்பாலிருந்து இலக்கியம் படைப்பவர் என்றவகையிலும் தேவகாந்தன் அவர்கள்மீதுபெருமதிப்புண்டு. எஸ்.பொ.வின் நனவிடைதோய்தல்’,செங்கைஆழியானின் காட்டாறு’,ரஞ்சகுமாரின் கோசலை’, இரவிஅருணாசலத்தின் காலம் ஆகிவந்தகதை’,குணாகவியழகனின் நஞ்சுண்டகாடு’,‘விடமேறியகனவு’,சயந்தனின் ஆதிரைஆகியவைஎனக்குப் பிடித்தவை. 

கவிதைகளுள்அழகியலுக்காகஅனாரையும்,அரசியலுக்காகதீபச்செல்வனையும்,உக்கிரமானமொழிதலுக்காகஅகரமுதல்வனையும்,சொற்செறிவுக்காகஆழியாளையும் பிடிக்கும். இக்கணம் எனதுஞாபகத்திலிருப்பவர்களின் பெயர்களையேகுறிப்பிடுகிறேன். பட்டியலிடுவதென்பதுஅபாயகரமானது. விரோதிகளைச் சம்பாதித்துத் தருவது. மேலும்,அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கமையவேபெயர் குறிப்பிடல்களும் இடம்பெறுவதுதுரதிர்ஷ்டவசமானது. அந்ததுரதிர்ஷ்டத்திலிருந்துவெளியேறவேநானும்விரும்புகிறேன். இனிவருங்காலத்தில் அதுசாத்தியப்படக்கூடும்.

ஈழ இலக்கியத்தின் தவிர்க்கப்படமுடியாத உங்கள் நினைவுக் குறிப்பில் அனாரைக் குறிப்பிடுகிறீர்கள், உண்மையில் அனார் வியத்தகு கவிஞர். ஆனால் அவர் ஈழம் எனும் அடையாளத்தை ஏற்றுக்கொள்வாரா என்ன ?

எனக்குத் தெரியவில்லை. ஆனால்,ஏற்பதும் மறுப்பதும் அவருடைய உரிமை. அதில் எவரும் தலையிடுவதற்கில்லை.

சூரியன் தனித்தலையும் பகல்தொகுப்பில் வருகிறஉங்களின் மிகமுக்கியமானபீங்கான் கவிதைஎனக்குநினைவிலிருக்கிறது. அந்தக் கவிதையைஎழுதியதருணம் எது?

குடும்பஅமைப்பிற்குள்ளும் பொதுவெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம்செய்யமுடியாதவர்களாகவேபெரும்பாலானபெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். குடித்துவிட்டு,சாப்பாட்டுக் கோப்பையைஉடைக்கிறசுதந்திரம்கூட ஆண்களுக்குத்தான் இருக்கிறது. அந்தஎழுதாவிதியைஒருநாளாவதுபெண்ணாகியநான் மீறக்கூடாதா? என்ற,கசப்பானஆதங்கத்தின் வெளிப்பாடேஅக்கவிதை.


சிலஈழ இலக்கியவாதிகளிடம் தூய்மைவாதமும் குறுந்தேசியப் பார்வையும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எனக்குத் தெரியநீங்கள் அப்படியானவர் கிடையாது. உங்களின் பார்த்தீனியம் நாவலுக்குசிலரால் எழுதப்பட்டவிமர்சனங்களில்,நீங்கள் புலிகள் இயக்கத்தின் பிரச்சாரமாகநாவலைஎழுதியுள்ளீர்கள் என்றுகுறை கூறப்பட்டதே?

பிரச்சாரம்என்றசொல்லே இங்குபொருத்தமற்றது. இயங்கிக்கொண்டிருக்கிறஒருஅமைப்பைமுன்னகர்த்தமேற்கொள்ளப்படும் பரப்புரைஅது. தூலமாகவிடுதலைப்புலிகள் இல்லாமற் போனபிற்பாடு,பிரச்சாரம் செய்யவேண்டியஅவசியமில்லை. மேலும்,பார்த்தீனியத்தைஎழுதும்போது,எனதுஅரசியல் நிலைப்பாட்டின் சாய்வுஅன்றேல் சார்புஅதில் வெளிப்பட்டுவிடலாகாதுஎன்பதைக் குறித்துபிரக்ஞையோடிருந்தேன். அதையும் மீறி,புலிகள் மீதானஎனதுநேசம் வெளிப்பட்டிருக்குமானால்,ஒன்றும் செய்வதற்கில்லை. இனிவரும் தலைமுறையினர் ஈழ வரலாற்றைக் குறித்தபிறழ்புரிதலுக்குச் சென்றுவிடக்கூடாதுஎன்பதில் நான் கவனமாக இருந்திருக்கிறேன். இயக்கங்களுக்கிடையேநடந்தசகோதரப் படுகொலைகளைப் பற்றிபதிவுசெய்ததற்கானகாரணமும் அதுதான். வுரலாற்றைத் திரித்து,தந்திரமாகபுனைவில் புகுத்தி,புலியெதிர்ப்புஎன்றவெறுப்பரசியலைப் பரப்ப இலக்கியத்தைஒருகருவியாகக் கொள்ளும் தார்மீகஅறமற்றவர்களேமேற்கண்டவிமர்சனத்தைவைக்கிறார்கள். அத்தகையோரின் சன்னதங்களைசாந்திசெய்வதற்காகவலிந்தெல்லாம்எழுதமுடியாது.

தாயகம் - புலம்பெயர்வு - அகதி இந்தநிலைகள் உளவியலைத் தகர்ப்பவை. நீங்கள் நீண்டகாலமாய் தாயகத்தைப்பிரிந்து இருந்தவர். அப்படியேதும் அனுபவங்கள் உண்டா?

நிறையஉண்டு. இன்றுவரையிலும் புலம்பெயர் வாழ்வோடுஎன்னால் ஒட்டமுடியவில்லை. ஆரம்பநாட்களில்,தற்கொலையைப் பற்றிஅடிக்கடிசிந்திக்குமளவிற்குஅதீதமானமனவுளைச்சலைக் கொண்டிருந்தேன். அந்தமனவுளைச்சலைபயணங்களின் வழி கடந்தேன். நிலத்திற்குத் திரும்புதல்என்பதுஉள்ளுர்வாசிகளதுகனவாகமட்டுமல்லாதுபுலம்பெயர்ந்துவாழும் வெகுசிலரதுகனவாகவும் இருக்கிறது. வெகுசிலர் என்பதைஅடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் எழுத்தின் மீது ஜெயமோகன் முன்வைத்தவிமர்சனங்கள் கருத்தில் கொள்ளக்கூட முடியாதவை.விமர்சனம் மட்டுமல்ல,அவருந்தான் என்பதுஎன் கணக்கு. உங்கள் மீதுஅவர் கொண்டிருக்கும் ஒவ்வாமைஅல்லதுவெறுப்புக்குக் காரணம் என்ன?

அவரதுபிற்போக்குவாதகருத்துதிர்ப்புகளைஅறிந்தவர்களுக்குஅவருடையவெறுப்புபொருட்படுத்தத்தக்கவிசயமாக இராது. அண்மையில்,‘தடம்இதழில் கேட்கப்பட்டகேள்விக்குஅவர் அளித்தபதிலில் என் மீதானவெறுப்புபட்டவர்த்தனமாகவெளிப்பட்டிருக்கும்.  அவருக்குஎன்னைப் பிடிக்காமற் போவதற்குஒன்றுக்குமேற்பட்டகாரணங்கள் இருக்கலாம். பொதுவாக,எழுதுகிறபெண்களைஅவரால் சகித்துக்கொள்ள இயலாது. அவரதுவார்த்தைகளில் சொன்னால்,நாங்களெல்லோரும் அசட்டுப் பெண்ணியர்கள்மற்றும் ஊடகஉத்திகளால் அறியப்படுகிறவர்கள்’.
தவிர,தமிழ்த்தேசியஅரசியலுக்குஆதரவானஎன்னை,விடுதலைப் போராட்டங்களைவிரோதமானகண்ணோட்டத்தில் பார்ப்பவரும்,இந்தியவல்லாதிக்கத்தைஏற்றிப் போற்றுகிறவருமானஜெயமோகனுக்குபிடிக்காமற் போனதில் வியப்பில்லை. கட்டுரைகள் என்றபெயரில் அவரால் எழுதப்படும் அபத்தங்களை,கொட்டப்படும் கசடுகளைமுகநூல் போன்றசமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்துபவர்களில் நானும் ஒருத்தியாக இருப்பதனாலும் இந்தஒவ்வாமைஏற்பட்டிருக்கலாம். 

ஜெயமோகனுடையஅங்கீகாரத்தையோபாராட்டையோஎதிர்பார்த்துநான் எழுதவரவில்லை! ஆகவே,அவரதுஅலட்சியமோஏற்போஎனக்குப் பொருட்டில்லை!

இனப்படுகொலைக்குபின்னர்,புலம்பெயர்ந்தநாடுகளில் நிலவும் எழுச்சிநிகழ்வுகள் கவர்ச்சிநிகழ்வுகளாகிவிட்டனவோஎன்கிறசந்தேகம் எனக்கு இருக்கிறது. மாவீரர் நாளுக்கேதமிழகத்தில் இருந்துதிரைப்பட இயக்குநர்களைஅழைக்கிறார்களே? அதுஎந்தவகையானஅரசியல்?

திரைக்கலைஞர்கள் அரசியலிலிருந்துவிலக்கிவைக்கப்படவேண்டியவர்களன்று. தமது இனத்தைக் குறித்தஉணர்வுகொண்டஎவரும்நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அவ்வாறல்லாது,புனிதமானமாவீரர் நாளைகளியாட்டவிழாவாகக் கருதும் பிரமுகர்களை, கூட்டம் சேர்ப்பதற்காகவிழாஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பார்களெனில் அந்த இழிவரசியல் கண்டிக்கத்தக்கது.

உங்களின் எழுத்துச்செயற்பாட்டின்  கனகச்சிதமானவெளிப்பாடுபார்த்தீனியம் தான் என்றுநம்புகிறேன். என்றாலும் நீங்கள் புலம்பெயர் நாடுகளில் எம் சனங்களின் இன்றையசீர்குலைவுகளைக் குறித்துகட்டுரைகளைஎழுதலாமே ?

ஏற்கெனவேசொன்னதுதான். அதுபற்றிஎழுதியிருக்கிறேன்.உங்கள் கேள்வியிலிருந்துஅதன் போதாமையைஉணர்கிறேன். ஆதலால், இனிஅவ்விடயத்தில் கவனஞ் செலுத்துகிறேன்.

மதுரையில் நிகழ்ந்தவிழாவொன்றில்,உங்களுக்கும் தமிழகத்தின் இடதுசாரிஎழுத்தாளர் ஒருவருக்குமிடையில் வாக்குவாதமொன்றுநிகழ்ந்ததாகநாஞ்சில் நாடன் அவர்கள் ஒருதடவைபேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அங்குஎன்னநடந்தது?

அதுவும் ஒருதுன்பியல்நாடகந்தான்! 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் நடந்தகடவுகூட்டத்தில்,புதுவிசைசஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவுக்கும் எனக்குமிடையில் வாக்குவாதமொன்றுநடந்தது. அதாவது,“சில கடல் மைல்களுக்கப்பாலிருக்கிறஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைநடைபெற்றபோது,தமிழகத்துப் படைப்பாளிகள் போதுமானஎதிர்வினையைஆற்றாமல் பாராமுகத்தோடுநடந்துகொண்டார்கள். அதற்குக் காரணம்,அசிரத்தையா? அல்லது,அதிகாரங்கள் மீதானஅச்சமா?”எனநான் அந்தக் கூட்டத்தில் கேள்விஎழுப்பினேன்.அதற்கு,ஆதவன் தீட்சண்யாபதிலளிக்கையில்,“மலையகத் தமிழர்கள் சாதியத் தமிழர்களால் கீழ்த்தரமாகநடத்தப்பட்டபோது,அவர்களதுவாக்குரிமைபறிக்கப்பட்டபோதுநீங்கள் அவர்களுக்காகக் குரல்கொடுத்தீர்களா? திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மலம் திணிக்கப்பட்டபோது,வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்டபோதுஅவர்களுக்காகப் பேசினீர்களா? உங்களுக்காகநாங்கள் ஏன் பேசவேண்டும்?”என்றுஎதிர்க்கேள்விஎழுப்பினார். எனக்குஆதரவாகபேராசிரியர் வீ.அரசு,ரி.கண்ணன்,லேனாகுமார்போன்றோர் பேசினர். வாக்குவாதம்முற்றி,அவரவர் இணையத்தளங்களில்சாடல்,எதிர்ச்சாடல் எனதொடர்ந்தது. ஆதவன் தீட்சண்யாவுக்குச் சார்பாகச் சிலரும்,எனக்குச் சார்பாகசிலரும் இணையத்தளங்களில் எழுதினர். இந்தச் சர்ச்சைசிலமாதங்களுக்குநீடித்தது.

புலியெதிர்ப்புவாதிகளின் பொய்மைக் கோட்டை சரிந்துபோகிறது. நான் அதனை உணர்கிறேன். தமிழகத்தில் ஈழவிடுதலைக்கு எதிரான இடதுசாரிகள் சிலர் அவர்களை ஊக்குவித்துக் கொண்டேயிருக்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் புலியெதிர்ப்புவாதத்தின் நிலைமை எப்படியிருக்கிறது?

மனச்சாட்சியுள்ள சிலர் முள்ளிவாய்க்காலின் பிற்பாடு எதிர்-ஆதரவு என எந்தவொரு பக்கமும் சாராமல் பொது உரையாடலினின்றும் ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே தங்கள் மக்களை நேசித்தவர்கள். புலியெதிர்ப்பை தமதுபிழைப்பிற்கான மூலதனமாகக் கொண்ட வெகுசிலர் இன்னமும் தமது சரக்கை கடைவிரித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். என்ன செய்தும் புலி மனநிலையை அழிக்கமுடியாதிருப்பது வேறு அவர்களைத் தொந்தரவு செய்கிறது. ஆகவே,தமிழ்த்தேசியத்திற்கு எதிர் நிலைப்பாடு எடுக்கும் சில இடதுசாரிகளுடன் அவ்வப்போது கூடிப் பேசி தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.அதே நேரத்தில் ஈழத்தையும் இதர விடுதலைப்போராட்டங்களையும் ஆதரிக்கும் இடதுசாரிகளும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

பார்த்தீனியம் நாவலுக்கு மணிவண்ணன் விருது கிடைத்த பொழுது உங்களை மையப்படுத்தி முகநூலில் ஒரு குழுவினரால் நடாத்தபட்ட கடும்வசவுத் தாக்குதல்கள் எந்தச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது?

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு சம்பவமும் நிகழவில்லை. ஆனால்,எனக்கு விருது வழங்கப்பட்டதானது சிலரை கொதிநிலைக்குக் கொண்டுசென்றதென்பது உண்மை. ஒரு தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அத்தகு வரவேற்பினைப் பெறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களது காழ்ப்புணர்வும் வன்மமும் என்னை வியப்பிலாழ்த்தியது. ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. விட்டால், வாசித்துக்கொண்டிருப்பவரின் கையிலிருந்து எனது நாவலை பிடுங்கி எறிந்துவிடுவார்கள்போலும் அப்படியொரு வெறுப்பு! அவ்வாறு கடுமையாகத் தாக்கியவர்கள் யாரென்று பார்த்தால், தமிழ்த்தேசியத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிர்ப்பக்கம் நிற்பவர்கள்.அவர்கள் பார்த்தீனியத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பரப்புரை செய்தார்கள். எதுவும் எடுபடவில்லை. வாசகர்கள் எனது நாவலை இரு கரங்கொண்டு வரவேற்றார்கள். அதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன வேண்டியிருக்கிறது? ஆரம்பத்தில் அவர்களது குரோதத்திற்கு எதிர்வினையாற்றினேன். நாளடைவில் அவர்களது கூச்சலும் குதிப்பும் எனக்கு வேடிக்கைக் காட்சிகளாகிவிட்டன.

புலம்பெயர்விலிருந்து நிலத்திற்கு திரும்புதல் எனும் கனவு மிகசிலரிடம் இருப்பதாக குறிப்பிட்டு சொல்கிறீர்கள். அங்குள்ள பல ஈழத் தமிழர்கள் மேலைத்தேய வாழ்வுக்கு மாறிவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நானறிந்தவரை,ஆம். அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்!

அடிக்கடி தாயகம் சென்று வருகிறீர்கள் என்ற வகையில் கொடுத்துவைத்தவர் நீங்கள். போரின் அழிவில் மக்களின் வாழ்வு எல்லாம் தகர்ந்து போய்விட்டனவல்லவா?

ஆம்வாழ்வாதாரங்கள் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. சேமிப்பும் இயற்கை வளங்களும் நிலங்களும் சூறையாடப்பட்டுவிட்டன. எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மீளக்கட்டியெழுப்பவேண்டும்.வெளிப்பார்வைக்கு யாவும் சுமுகநிலைக்குத் திரும்பிவிட்டதெனத் தோன்றும்வகையில், நாடு அபிவிருத்தியை நோக்கி வெற்றிநடை போடுகிறது என்று காட்டுவதற்காக அரசாங்கம்நவீன பாணியில் கட்டிடங்களைக் கட்டுகிறது. நேர்த்தியான சாலைகளைப் போடுகிறது. தொழினுட்ப வசதிகளைக் கொணர்கிறது. இறந்த கன்றுக்குட்டிக்குள் வைக்கோலை அடைத்துக் காட்டி, மாட்டிலிருந்து பாலைக் கறப்பதுபோல- போரழிவைக் காட்டி உலகநாடுகளிடம் சலுகைகளையும் உதவிகளையும் பெறுகிறது அரசாங்கம். எல்லாம் மேல் பூச்சு! உறவிழப்பு என்பது எத்தகைய துயரம்! போரினால் சிதைக்கப்பட்டுவிட்ட மனங்களை அவர்களால் எதைக்கொண்டு செப்பனிட இயலும்?

உங்கள் நாவலில் வருகிற வானதியின் தோற்றத்தை ஓரிடத்தில் விவரணை செய்கிறீர்கள். அதனைப் படிக்கும் போது நீங்களே நினைவுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

நம்மால் எழுதப்படுகிற புதினங்களிலெல்லாம் நாமும் இருப்போமல்லவா? பார்த்தீனியத்தில் நானும் உண்டு.

தேச விடுதலைக்காய் இரத்தம் சிந்தி அழிவுகளை கண்டு அதிலிருந்து மீள்வதற்கு கூட உதவி செய்யாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டிக்கு தயார் என சொல்கிறதேஅதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சமஷ்டியும் தரப்படமாட்டாது என்பதை கூட்டமைப்பு அறியாதா? பழுத்த அனுபவசாலியான சம்பந்தர் அறியமாட்டாரா? தமது அரசியல் இருப்புக்காக காலத்தை வீணே இழுத்தடிக்கிறார்கள். மக்கள் மாற்றுவழிகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்.

பிரபாகரன் என்றதும் தோன்றுவது?

நெகிழ்ச்சி! பெருமிதம்!2009, மே மாதத்திற்குப் பிறகு தாங்கவொண்ணாததுயரம்!

ஈழத்தின் பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவராக நான் கருதுவது மலைமகளை, மலைமகளின் கதைகள் கனமானவை. இப்படி நிறைய படைப்பாளிகள் எழுதிய எங்கள் படைப்புக்களை தமிழ் தவிர்ந்த ஏனைய மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் என்று உங்களுக்கு தோன்றுவதில்லையா?

தோன்றுவதுண்டு. ஆனால், அதைச் செய்வதற்குரிய மொழிப்புலமை என்னிடமில்லை. அத்தகு புலமை கொண்டவர்களை வைத்து மொழிபெயர்ப்பதற்கான பொருளாதார வசதியை நான் எட்டும்போது நிச்சயம் செய்வேன்.

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார ரீதியாக பலமாகவிருக்கும் ஈழத்தமிழர்கள் மீது எனக்கொரு வெறுப்பும் கோபமுமிருக்கிறது. இவ்வளவு அழிவுகளோடு தாயகத்தில் உழலும் மக்கள் பற்றி ஏன் அவர்கள் கவலைப்படுவதேயில்லை?

இல்லை. நீங்கள் எண்ணுவது தவறு. எமது மண்ணில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், பொருளாதார ரீதியாக பக்கபலமாக நின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களே. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்ற பேரிடியின் பின் நாங்கள்உளவலுவற்ற சமூகமாகிப்போனோம். இந்நிலையில்,புலம்பெயர் தமிழர்களிற் பலர் விரக்தியோடு ஒதுங்கி தனிப்பட்ட வாழ்வில் கவனஞ் செலுத்தத்தொடங்கினார்கள். அது சரியென்று வாதிட வரவில்லை. அது ஒருவகை மனநிலை. ஆனாலும், புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தனிப்பட்ட ரீதியில் ஈழத்திலுள்ள மக்களுக்கு உதவிசெய்துகொண்டுதானிருக்கிறார்கள். அவற்றை வெளிப்படுத்தும் சூழல் அங்கில்லை.

போராட்டத்திற்கென நிதியைத் திரட்டிய, முள்ளிவாய்க்காலின் பின் அந்த நிதியையும் அசையாச் சொத்துக்களையும் தமது சுயசேமிப்பாக மாற்றிக்கொண்ட பிரமுகர்கள் மீது வேண்டுமானால் நீங்கள் கோபப்படலாம். புலம்பெயர் தேசங்களில் தனிப்பட்டவர்களின் சொத்துக்களாக முடக்கப்பட்டிருக்கும் இயக்கத்தின் நிதி, எமது மண்ணில் அவலத்தில் வாழும் மக்களதும் முன்னாள் போராளிகளதும் வாழ்வை மேம்படுத்துவதற்குப் போதுமானது.

உங்கள் நாவலின் மொழி சற்று அதீதமான கலைத்தன்மை கொண்டிருக்கிறது. அது வாசிப்பவனை என்ன செய்யவேண்டுமோ செய்து விடுகிறது. சில வரிகள் என்னுள் எப்போதும் நிற்கும்படியாய் இருக்கிறது. எங்கே கண்டடைகிறீர்கள் அப்படியான மொழிதலை?

நன்றி. அப்படியொன்று உண்டெனில், அஃது எனது தொடர் வாசிப்பின் விளைவாகவே இருக்கமுடியும்.

இந்திய இராணுவக் காலத்தில் உங்களுக்கு நிறைய அவலமான அனுபவங்கள் இருக்கும். நீங்கள் நாவலில் சொல்லஇயலாத அல்லது சொல்லாத சேதிகள் ஏதேனும் உண்டா?

உண்டு. அந்த ஞாபகங்களுள் மீண்டும் நுழையத் தயங்குகிறேன்.

தமிழ்நதி! அடுத்ததாக உங்களிடமிருந்து வரவிருக்கும் படைப்பு?

புலம்பெயர் வாழ்வினைக் குறித்த நாவலொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆண்-பெண் உறவை கருப்பொருளாகக் கொண்டது.


நன்றேது? தீதேது? நேர்காணல் நூலில் வெளியானது.



Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்