இரத்த ஊற்றில் மிதக்கும் நான்






முடிகளில் முள்ளுறக்கிய அரங்கில்

வெந்து சாயும் தீராத் தாகம்

கூர் தீட்டி விழுதுகளாய் குத்துகின்றன

மண்ணுக்குள் இறங்கும் மழையின் செழுமையாய்

ராட்சத காட்சி என்னில் நிகழ்கிறது

சமீபத்தில் கருகிய ஒருவனுடலில்

ஆழ வேர் பரப்பி தாளமிடும்

ஒற்றைச் சொல்லின்றி சுடுகாட்டுப் பாடல்

ஆதி நிலமுழுதும்

தொங்கும் தசைகள் வலியுடன் காய்கிறது

அமரும் வெடிகுண்டின் கைரேகை

ஓயாமல் குளறும் புதைகுழியில் படிந்திருக்க

இருளின் சிறகுதிர்த்தி காலத்தின் தகிப்பை

மயிலின் தோகையென

விடுதலை விரிக்கிறது.

-அகரமுதல்வன் 
23.06.2014


Comments

Popular posts from this blog

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி