Posts

Showing posts from August, 2016

கிழவி ( சிறுகதை )

குயிலினிக்கு இன்றைக்குத் தான் 24 வயது தொடங்கியிருக்கிறது.          முள்ளிவாய்க்காலில் தாயும் தகப்பனும் ஒரே இடத்தில் குண்டு வீழ்ந்து செத்துப் போகும் போது எஞ்சிய கண்ணீரைப் போலவே குயிலினியும் அம்மம்மாக் கிழவியும் காயங்களற்று தப்பினார்கள். அந்த நாளும் அவளுக்கு பிறந்த நாளாகத் தான் இருந்தது.  ஏப்ரல் மாதம் 27 ம் திகதி பதுங்குகுழியில் தாயையும் தகப்பனையும் புதைக்கிற பொழுது பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது. தகப்பனின் சிதைந்து போன தலையை மண் போட்டு மூடிய குயிலினியின் கைகளுக்குள் இருந்து வீழ்ந்த மண் துகள்களில் துன்பத்தின் மலை எழுந்தது. இனிமேல் குண்டு வீழ்ந்தால் எம்மில் இருவரும் மிச்சமில்லாமல் இறந்து போகவேண்டுமென்று கிழவி அழுது சொன்ன வார்த்தைகள் போர்க்க்களத்தின் காற்றில் இழைந்தது. ஆனால் இருவரும் சாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாய் எல்லாவற்றையும் கடக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்காலில் இராணுவம் மக்களை பேருந்துகளில் ஏற்றிய பொழுது கிழவி குயிலினியைப் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் இப்பொழுதும் அவளின் கைகளில் தெரியும். முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காலங்களில் குயிலினிக்கு அம

மிஞ்சியிருப்பவர்களையும் பலியிடும் சம்பந்தனின் சமஸ்டி.

“பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதை”யாக எம் மக்களின் அவலத்துக்கு நீதி கிடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் ஒத்த மனம் கொண்ட ஒத்த தமிழின    எதிர்ப்புக் கொண்டவர்களாக வரலாறு எங்கும் இருந்ததைப் போல           இன்றைய அரசும் இருந்து வருகிறது. கடந்த காலத்தில்  “சமாதானத்துக்கான வெள்ளைப் புறா“ என்று சந்திரிக்கா ஏற்படுத்திய பிம்பத்தைப் போல “நல்லிணக்க அரசு” என மைத்திரி –ரணில் அரசும் பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கள அரசு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதியைத் தந்துவிடுமென நம்புகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லிணக்க அரசென அழைக்கப்படும் மைத்திரி –ரணில் அரசை சர்வதேச சமூகத்திடம் இருந்து காப்பாற்றி வருகிறது. இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒப்ப அவர்களுக்கான நீதிக்காய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலத்திலும் இயங்கியது கிடையாது. அப்பாவி மக்களாய் கொல்லப்பட்டும் சித்ரவதைக்கு உள்ளாகியும் வாழ்வின் படு துன்பமான கணங்களோடு வாழ்ந்துவரும் மக்களிடம் கலந்தாலோசித்து எந்தவொரு அரசியல் முடிவுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எட்டப்படுவத