Posts

Showing posts from February, 2016

கானகி - சிறுகதை

Image
கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாளாய் பெய்த மழைத் தண்ணி தேங்கி நிற்குது. பொய்க்காலை வைச்சிட்டு தூக்கமுடியாமல் சேறு. கால் புதையுது. வாழ்வும் தான். கானகி நடந்து வந்து கொண்டிருக்கிறன். மழை துமிக்கத் தொடங்குது நீர் வெளியால நிண்டால் உள்ள போய் நில்லும் நனையவேண்டாம். நான் இரண்டு நிமிடத்தில் வந்திடுவன். ரோட்டில ஆர்மிக்காரர் மாதிரி நீதிமன்றத்தில எக்கச்சக்கமான சனம். மகிந்த தேர்தலில சர

நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது

எனது  பூட்டி  நேற்றைக்கு தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டாள். ஒரு உயிரின் வாழ்வின் பேறு அவன் தாயகத்தில் உயிர் பிரிவது. நினைவிருக்கும் காலம் தொட்டு பூட்டப்பிள்ளைகளான நாங்கள்  அவளை   பூ அம்மம்மா என்று தான் கூப்பிடுவோம். தினமும் நெற்றி நிறைந்த வீபூதியோடு பூக்கன்றுகளுக்கே நோகாதபடி பூக்களை ஆயும் அவளின் முகம் தான் எனக்கெல்லாம் விடிகாலையாக இருக்கிறது. பூ அம்மம்மாவின் நிறைந்த சிரிப்பு எங்கள் குடும்பமே வணங்குகிற அம்மனைத் தான் பிரதிபலிக்கும். அவள் பாசமானவள். தேசத்தின் மாவீரனாகவும், போராளியாகவும் தனது   இரு பிள்ளைகளை விடுதலைப் போரில் பங்களிக்கச் செய்தவள். நான் முதன்முறையாக ஒரு மாவீரர் துயிலுமில்லத்திற்குள் இவளோடு இவளுக்குத் துணையாகத் தான் சென்றிருக்கிறேன். தனது மகனானவனின் நடுகல்லின் முன் நின்று நெஞ்சில் கைவைத்து கண்களில் நீர் சொரிய அழுத பூ அம்மம்மாவின் நனைந்து கிடந்த கண்கள் இன்று மூடிக்கிடக்கிறது.  நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது.  எத்தனையோ தொன்மம் நிறைந்த கதைகளை இரவு நெடுக சொல்லிக்கொண்டிருக்கும் அவளின் அந்த வெற்றிலை வாய் எனக்குள் துயரத்தை இன்னும் இன்னும் சிவக்கச

அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப வெளியாகும்

Image
எதிரியால் ஆக்கிரமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.- வே பிரபாகரன்  இந்து சமுத்திர பிராந்தியத்தின் கதாநாயக புவிப்பரப்பாக இருக்கிற இலங்கைத் தீவில் நிகழும் இனப்பிரச்சினையை வெறுமென குருடன் யானையைப் பார்த்தது போன்று பார்க்கிற போக்குகள் அபத்தமானது. நூறாண்டுகால இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை அதன் குரூரமான மனிதப் பேரிழப்புக்களை உலகம் உணரமறுத்தது போலவே அந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களாகிய நாமும் உணரவில்லை. தமிழீழர்கள் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்கான தொடர்ச்சியான செயற்பாடுகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவ மாற்றங்களோடு பயணிக்கிறது. அகிம்சை வழியிலான தமிழர்களின் போராட்டத்தை சிங்கள அதிகாரபீடங்கள் ஒரு நீண்ட நகைச்சுவைக் காட்சியைப் போலவே எடுத்துக்கொண்டனர். தந்தை செல்வா ஒரு உன்னதமான உறுதிப்பாடு கொண்ட தலைவர் என்ற போதிலும் அவரின் குரல் கொழும்பின் பவுத்த சக்கரங்களால் நசிக்கப்பட்டது. அவரை தவிர்த்தால் அதன் பின்னான தமிழ் மிதவாத அரசியல்வாதிகள் பலர் சளைக்காத ஒரு நகைச்சுவையாளர்களைப் போலவே கொழும்புக