Posts

Showing posts from June, 2015

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல் - கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

Image
கவிதை ஒருபோதும் தனது பிரதேசத் தன்மையைக் காவு கொடுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை" போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு ஏற்புரையில், "இழப்புகளுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையிலிருப்பதும் இழக்கப்படாமலிருப்பதும் மொழி ஒன்றுதான்" என்றார். நம்பிக்கை, துயரமான பெருமூச்சு, உயிர்தழுவும் காதல், துடிதுடிக்கத் தொப்புள் கொடி அறுபட்ட வலி, கையறுநிலை, பதிலற்ற கேள்விகள், உயிர்ப்பின் சிறுவிதை - இப்படி அனைத்தையும் உள்ளடக்கியதாய் - 'பேரழிவு இலக்கியத்தின்' (Holocaust Literature) அங்கமானதொரு கவிதை வெளிப்பாடாய் தம்பி அகரமுதல்வனது 'அறம் வெல்லும் அஞ்சற்க' வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் - என்கின்ற அருமையான வார்தைகள் வெறும் சொற்களாக மட்டுமே ஆகிவிடும் - அவற்றை இங்கு நான் பயன்படுத்தினால் – ஏனென்றால் - முகத்தில் அறைந்து, மனசாட்சியை உலுக்குகின்ற அகரமுதல்வனது : தொப்புள்கொடிகள் " இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும்

காலத்தின் தேவை எதுவோ அது அகரமுதல்வனின் காட்டமான இலக்கியம் ஆகிறது - உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்

Image
தமிழீழத்துக்கு இன்று தேவைப்படும் இலக்கியம் எது என்னும் கேள்விக்கு “அறம் வெல்லும் அஞ்சற்க” என்னும் தனது நூலில் முன்னுரையில் அகரமுதல்வன் விடை தருகிறார். இலக்கிய வடிவத்திற்குள் பெரும் வெடிகுண்டு இருக்க வேண்டும் ,அது தான் சார்ந்த கனவுகளை, தாகங்களை அர்த்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொடரும் நிராகரிப்புகளால் பின் தள்ளப்படும் தனது விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். உணர்ச்சி மிக்க இப் பொழிச்சல் உரை இலக்கியம் முள்ளிவாய்க்கால் நெருப்பில் எரிந்தும் வெளியே தப்பிப்பாய்ந்து நெஞ்சின் கொப்பளங்களோடு துடி துடித்தும் இன்னும் இன்னும் விடுதலை தேடும் ஒரு போராளியின் வெறி பிடித்த கத்தல் ஆகி மாந்த நெஞ்சங்களின் ஆணி வேரை உலுக்குகிறது. புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியத்தை நான் பா (கவிதை) இலக்கியம் என ஒப்புவதில்லை. அதை ஒரு வீச்சான உரை இலக்கிய வடிவமாகவே பார்க்கிறேன். “உரை வீச்சு” என்று சாலை இளந்திரையன் அழைத்தார். “வரிப் பீச்சல்” என்று மாவிட்டபுரம் சச்சிதானந்தன் சொன்னார். நான் பொழிச்சல் என்கிறேன். அந்த வகையில் அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க” பொழிச்சல் இலக்கியம். ஒரு போராளியின் கைய