மே
என்றுமே துயரங்களை அள்ளிவரும்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
எந் நிலத்தில் பாய்ச்சுவதற்கு விரும்புவதில்லை
கடந்து செல்லும் வேட்கையின் காற்றில்
இறக்கைகளுடன்
பதியும் காற்சுவடுகளில்
அப்பட்டமாய் ஊற்று விடும்
தழும்புகளில் பிறிதொரு களம்
வெடித்து எழுகிறது
காலத்தில் தோன்றும் வானத்தில்
கதறுகிற மவுனம்
கனவை முடிப்பது போல
உஷ்ணமாகிய குருதியில்
பிரளயம் சூழ்கிறது.
ஒப்பாரி இசைக்கும் பறவையின் வடிவம்
புள்ளிகளிடும் சூழலில்
பேரழிவின் மிச்சமாய்
எல்லா மே மாதமும்
என்னுடல் அகல விரிகிறது.
- அகரமுதல்வன்
10.06.2014

Comments
Post a Comment