வழமை போல கண்களை மூடுங்கள்

குழந்தைகளைத் தேடித் திரியும் பயங்கர ஆயுதத்தின் காலமிது வான் பிளக்கும் சத்தத்தோடு பெரும் வெடிகுண்டை சந்திக்கும் காசாவின் பள்ளத்தாக்கில் இரத்தங் கசிகிறது வெட்ட வெளியில் இரையும் போர் விமானத்தின் கீழ் பதற்றத்தோடு ஓடும் சிறுமியின் காலடிச் சத்தத்தில் ஒரு கனவு சாம்பலாகிறது மாபெரும் கவிதைகள் காலமாகின்றன பிணச் சகதியாய் பாலைமாறுகிறது குரூரமான விதி கலவரத்தோடு வழிகிறது துயரத்தின் மூக்கு ருசித்த களைப்பில் சுவரில் நிலைத்து நிற்கிறது இனி சாவின்றி ஏதுமில்லை ஷெல் துண்டுகளை குளம்புகளாக்கி ஒப்பாரிகளில் நடக்கத் தொடங்குவோம் அதற்கு மேல் ஒன்றும் இல்லை -அகரமுதல்வன் 01.08.2014