Posts

வசந்த வேரின் பாடல்

Image
கிளுவம் வேலிகளில் தாவும் அணில்கள் தூக்கிச் சுமந்து சிலிர்த்த மாலையில்  அரூபமாய்க் கரைகிறது கணுக்காலின் மச்சம் எனக்குப் பிடித்த  உன் பச்சை நிறப் பாவடையில்  தண்ணீர் தெறிக்க பூக்கிறது  உனக்குப் பிடித்த எல்லாப் பூவும்  குசினிக் கூரை வழியே புகை எழும்ப  ஊத்தி வரும்  மாலை நேரத் தேத்தண்ணீர்  கடலென சூழ்ந்து ருசியை சிருஸ்டிக்கிறது  வண்ணங்கள் துளிர்த்து அறை நிறைக்க முத்தங்கள் பச்சோந்தியென அசையும்  மாயக்கணங்கள் தளும்பி நனைகிறது  உன் கண் சிமிட்டும்  அதிசயித்தின் போரை  பித்து முற்றி தீண்டிப் பார்க்கும்  முற்றத்து தூசியின் வேட்கை மர்மமானது  நிலவைச் சரித்த வானத்தின் கரங்களில் இறுகிய இந் நிமிடம்  நீ நடந்து செல்வதைப் போல  நடனமாடுவதைப் போல  முறைச்சுப் பார்ப்பதைப் போல  சிரிப்பதைப் போல  எனைத்தவிர  எவருக்கு வாய்க்கும் இவ்வுலகு  - அகரமுதல்வன்  06.08.2014

சபையேறும் சத்தியம்

Image
வலிமையிழந்து வரும் வலியின் களத்தில்  நெருப்பாற்றின் துளியாய் மாறுகிறது  உயரமான என்னுடல் சாம்பல்  இன்றிரவு பிறந்த புத்துயிர்ப்பின் அச்சில்  காலம் வியக்கும் சாட்சியாக  கவிதை இறங்கி மூச்சிழுக்கிறது  கம்பீரமாய் குரல் வீசி  துயரம் தாவி நிற்கும்  காற்றின் பெருவிரலில்  காயப்படுகிறது நெய்தல் பண் இருளதிர்ந்து  நிழல் கனன்று  விழுங்கிச் செரிக்கும் அவலத்தின் துரு  என்னை மூடிய புதைகுழியின் மண்மேடு முனை மழுங்கா ஊசிகளை  என் ஆணுறுப்பில் புதைக்க முனைந்த  பெரேராவின் கைகளில்      தாமரைப் பூக்கள் மலரத்தான் செய்கிறது  இப்போதெனது அவலமெல்லாம்  புத்தனுக்கு ஞானம் பிறந்ததை  கண்டவன் எவன் ? -அகரமுதல்வன்  29.07.2014

நீ எரித்த வனம்

Image
உனக்கொரு  கடிதம் எழுதவேண்டுமெனக் கனக்கும்  இதயத்தின் கிழக்கு  தாமரைகளை மலரச் செய்வதில்  பிடிப்பற்று இருக்கிறது  காற்றெங்கும் வாள் வீசும்  உன் பிரியத்தின் மிஞ்சியிருக்கும் விழிகளை   உன்னிடமே திருப்பியனுப்பும்  வல்லமையின்னும் வாய்க்கவில்லை  கசியப்போகும் இருளின் நடுவில்  யாசகம் கேட்கும் மூச்சின் நாசிகளுக்கு  ஆற்றுக்கிடைக்கையில் காத்துக்கிடக்கும்  நீர்ப்பாம்பென கணங்கள் நெளிய  ஆயிரம் தலைகள் கொண்ட ஞாபக விடம் என்னை கொத்துகிறது  உனக்குத் தெரியுமா லோஜி  இதற்கு முன்னர்  எழுதிய கடிதங்களையெல்லாம்  எவரும் புகுந்து வரமுடியாத பெருவனத்தில்  என்னை நீ எரித்தது போல நானும் எரித்து விளையாடியது இனியேனும் வனங்களில்  புகை எழும்பாதபடிக்கு உனக்கொரு கடிதம் எழுதவேண்டும்  -அகரமுதல்வன்  28.07.2014

வழமை போல கண்களை மூடுங்கள்

Image
குழந்தைகளைத் தேடித் திரியும்  பயங்கர ஆயுதத்தின் காலமிது  வான் பிளக்கும் சத்தத்தோடு  பெரும் வெடிகுண்டை சந்திக்கும்  காசாவின் பள்ளத்தாக்கில்  இரத்தங் கசிகிறது  வெட்ட வெளியில் இரையும்  போர் விமானத்தின் கீழ்  பதற்றத்தோடு ஓடும்  சிறுமியின் காலடிச் சத்தத்தில்  ஒரு கனவு சாம்பலாகிறது  மாபெரும் கவிதைகள் காலமாகின்றன  பிணச் சகதியாய் பாலைமாறுகிறது குரூரமான விதி கலவரத்தோடு வழிகிறது  துயரத்தின் மூக்கு ருசித்த களைப்பில்  சுவரில் நிலைத்து நிற்கிறது  இனி சாவின்றி ஏதுமில்லை  ஷெல் துண்டுகளை குளம்புகளாக்கி  ஒப்பாரிகளில் நடக்கத் தொடங்குவோம்  அதற்கு மேல் ஒன்றும் இல்லை -அகரமுதல்வன்  01.08.2014

புலிப்பார்வையும் புலிப்போர்வையும்

Image
புலிப்பார்வை  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்விற்கு பின்னர் அதனை மூலமாக்கி தமிழ்நாட்டில் எழுந்த பல்வேறு தமிழியக்கங்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள்  எவ்வாறு பலவீனமானதாக இருக்கிறதோ அதைவிடப் பலவீனமானதாக இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகம். தமிழ்நாட்டில் தமிழீழ மக்களின் கண்ணீரும் அவர்களின் பெருந்துயரும் மிகப் பெரும் சந்தையாக விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கும் அவலச் சூழலில் உணர்வு கொந்தளித்து மனிதாபிமானம் பெருக்கெடுத்து கலைப் படைப்பின் ஊடாக பணத்தைப் பார்த்து விடத் துடிக்கும் மனித அழுகுரல் தின்னும் இவர்களை எதிர்த்து தான் ஆகவேண்டும். தமிழ்த் திரையுலகத்தில் தமிழீழ மக்களை முன்வைத்து வெளியான திரைப்படங்கள் ஒன்று திரைமொழிக்கு அப்பாற்பட்டு உணர்வு சார்ந்து ஒரு நாடகத்தன்மையில் எடுக்கப்பட்டிருக்கும் இல்லாது போனால் தமிழீழ விடுதலையை,அதற்காக போராடிய விடுதலை அமைப்பை கொச்சைப்படுத்தி,தவறாக சித்தரித்து எடுக்கப்படும். எனக்குத் தெரிந்து புன்னகை மன்னன் திரைப்படத்தில் சிங்களப் பெண்ணாக வரும் ரேவதியை கொலை செய்வதற்காக தமிழீழத் தமிழ் பேசுகின்ற இளைஞர்களை கூலிப்படையாக சித்...

காயங்கள் ஏந்திய துவக்குகள்

Image
எப்போதும் போல் தீவொன்றின் விடியல்  மரண நுரை தள்ளும் கரைகளில்  காயத்தின் குரலோடு மோதிக்கொள்கிறது  வீதி நெடுக நிர்வாணங்களாய் ஆக்கி  எமை எரித்த துயரம்  இரத்த ஓட்டத்தில் இன்னும் வெளிறாமல்  என்னிடம் நெருங்கி வருகிறது  துன்பத்தின் மேலிருக்கும் எனக்கான சொல்  தோட்டாக்கள் வெடித்த சத்தங்களிலிருந்து கட்டப்பட்டது வீதியோரங்கள் வெட்டப்பட்ட முத்தப்பனின் இறுதி மூச்சில் எழுதப்பட்டது றபான் இசைத்து வைலா ஆட்டத்தோடு குறிகள் துண்டித்த காமினிகளின் எக்காளச் சிரிப்பில் ஜூலை கறுப்பானது ஜூலை வெறுப்பானது ஜூலை கருவானது ஜூலை களமானது பிரகாசமான ஒரு காலத்தை கையேந்திய கைகள் நிலம் பிடுங்கும் சாத்தானை குறி பார்க்கத் தொடங்கியது. - அகரமுதல்வன் 23.07.2014

போரிலக்கியமும் பேரிலக்கியமும் நமதே

Image
அகநாழிகை நூல் நிலையத்தில் நேற்று நடந்த என்னுடைய அறம் வெல்லும் அஞ்சற்க கவிதை நூலிற்கான அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் தி.பரமேசுவரி ,விமர்சகர் கடங்கநேரியான் ,கவிஞர் மனுசி பாரதி, கவிஞர் வேல்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியமை குறிப்பிடத்தக்கது. முதலாவதாக கவிஞர் வேல்கண்ணன் பேசியமர்ந்ததற்கு பின்னர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய யாவரும்.காம் சகோதரர் ஜீவகரிகாலன் நிகழ்ச்சியில் நடந்த காரசார விவாதத்தின் முத ல் புள்ளியை தொட்டு தொடக்கி வைத்த விதம் மிகச் சிறந்தவிதமாக இருந்தது. தமிழீழ மண்ணைச் சேர்ந்த எனது கவிதைகளின் கீழேயே வந்து இலங்கைக் கவிதைகள் ரொம்ப பின்னோக்கி இருக்கிறது என கூறும் தமிழ் இலக்கியக் கவிதைப் பரப்பின் சமகால மன்னர்களுக்கும்,பவுத்தம் என்பது ஒரு மார்க்கம் என கூறுகிற ஆவணப்பட இயக்குனர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்தே தங்கள் காலத்தை ஒட்டி விடலாம் என நினைக்கும் அறமற்ற மாந்தர்களுக்கும் நேற்றைய நிகழ்வு நெற்றிப் பொட்டில் குறிபார்த்து சுட்டிருக்கிறது. கவிஞர் மனுசிபாரதி அவர்கள் என்னுடைய கவிதைகள் குறித்து ஆற்றிய உரையில் இருந்து கவிதைகள் பிறரிடம் ஆற்றிய எதிர்வினையை தெரிந்துக...