பூமியின் புன்னகையை பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டேன் - அடுத்து என்ன?

“நான் சமாதானத்தை நாடுகிறேன்,அவர்களோ நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.” என்றொரு வாக்கியம் பைபிளில் இருக்கிறது.தமிழீழர்கள் விரும்பிய சமாதானத்தையும் அமைதியையும் இவ்வையகம் இனப்படுகொலை நடத்தி கொன்றொழித்துக் கொண்டிருந்த காலங்களில் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே என்னுடைய இலக்கியத்தின் விளைநிலம். போர்க்களத்தில் உயிர்பிழைத்த நிகழ்வுகளை கலையாக்குகையில் ஏற்படுகிற உளச்சிதைவை ஏற்றுக்கொண்டேன். என் எழுத்துவத்தின் நீண்ட நடமாட்டத்தில் என்றைக்கோ எனதுள்ளம்...