உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி

அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க”கவிதைத் தொகுப்பினுள் 40 கவிதைகள் உள்ளன. மித்ர பதிப்பகம் வெளியிட்ட அவரது இரண்டாம் கவிதை நூலைப் படித்த பொழுது, ஈழத்தில் படுகொலைகள் கொடூரங்கள் பற்றி ஏராளமான விபரங்களோடு கவிதை எழுதியிருக்கிறீர்கள் இவ்வகை விபரங்கள் மட்டுமே கவிதையாகவில்லை என்று அகரமுதல்வனுக்குச் சொன்னேன் அவரும் பதில் சொன்னார். அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைகளைப் படித்த போது என் வியப்புக்கு அளவில்லை. வழக்கமான ஈழத்து கவிஞர்களின் கவிதைகளிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன என்பது மட்டுமல்ல இவற்றில் பெரும்பாலானவை அசலான கவிதைகள் அற்புதமான கவிதைகள் கவிதை இவருக்கு ஒரு அழகியல் சாதனமல்ல என்றாலும் கொள்ளையழகோடு கவிதை எழுதுகிறார். கவிதை எனக்கு ஒரு துவக்கு என்கிறார்.உண்மை தான் இவர் கவிதைகள் நம் நெஞ்சில் வெடிக்கின்றன.ஈழத்துக் கவிஞனது கவிதைகள் இந்தியத் தமிழனின் நெஞ்சில் வெடிக்கத் தான் செய்யும். ஈழத் தமிழர் மீது, ஈழத்து தமிழ்ப் போராளிகள் மீது மட்டுமல்லாமல் படைப்பாளிகள்,திறனாய்வாளர்கள்,ஆய்வாளர்கள் முதலிய அனைவர் மீதும் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு.ஆயிரம் ஆண்டுகளுக்கு...