Posts

இந்த மண் எங்களின் சொந்த மண்

Image
இந்தமண் எங்களின் சொந்தமண்  இந்தமண் எங்களின் சொந்தமண்   நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை. - புதுவை இரத்தினதுரை  புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மிகவுறுதியான பங்களிப்புக்கள் மரியாதைக்குரியவை. அயராத உழைப்பும் ஓய்வற்ற வாழ்க்கைக்குள்ளும் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவை வழங்கி வந்தவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.  களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வீழ்ச்சியைக் கண்டதோடு களத்தில் வாழ்ந்த மக்கள்  மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிய 2009 க்கு பிறகு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல், அல்லது அவர்களின் விடுதலைக்கான உழைப்பு என்பது என்னவாகி உருமாற்றம் அடைந்துவிட்டது என்பது தான் கவலைக்குரியது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை களத்தில் இருந்து உயிர் தப்பிய மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட அதே நேரம் இறுதி வரை போர்க்களத்தில் எதிரியோடு சமராடிய போராளிகள் தடுப்புமுகாம் என அழைக்கப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு முற்றாக வாழ்வு சிதைக்கப்பட்...

அரசியல் சவங்களின் பிதாமகன்கள்

Image
ஹிட்லரே எதிர்பார்த்திராத அசல் மகிந்த ஸ்கோவிச் முட்கம்பிகளை துருவிலிருந்து காப்பாற்றியதற்காய்   ஹிட்லரின் ஆவி சிறிலங்காவை முத்தமிடும் மகிந்தவின் நிஜத்திற்கும் ஹிட்லரின் ஆவிக்கும் விசும்பும் உயிர்களின் மிரட்சி விருப்பம் ஆம் இவர்கள் பூமியை சவமாக்கும் பிதாமகன்கள் நாஜிக்கள் இன்னும் இன்னும் புத்தனின் கீழே பெருகி ஹிட்லரின் மீசைக்கு தாமரைப் பூ வைக்கிறார்கள் மீசையில்லாத மகிந்தவின் முகத்தில் ஹிட்லரின் மீசை அவ்வளவு பொருந்துகிறது நாம் கொன்று புதைக்கப்படும் இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறோம் மரணம் வனப்பு மிக்கதாய் மகிந்தவின் வெள்ளையாடையில் எழுதியிருக்கிறது யூதர்களின் பிண நாற்றம் எங்களது பிண நாற்றத்தில் காணமல் போன போது பூமி இரத்தத்துக்கு பழகிக்கொண்டது ஹிட்லர் மகிந்தவை தன் சாயலில் இருக்க வேண்டாமென சொல்லுவதற்கு முன் மகிந்தவின் சாயலில் ஹிட்லர் இருந்ததற்கு கடவுள் புத்தன் சாட்சி.

தொப்புள்கொடிகளே! உம்மில் அடைக்கலமான எம்மைக் கொல்வீரோ ?

Image
பதாகைகளில் சாகும் புரட்சி துயரங்களை மொழிபெயர்த்து முழங்கிக் கொண்டிருந்தது வானம் அந்த முழக்கத்திலிருந்து முனை மழுங்காமல் மலையொன்றில் வீழ்கிற சபிக்கப்பட்ட வாழ்வின் ஏக்கம் என்னுடையது மட்டுமன்றி எல்லோருடையதும் ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க அகதியெனும் பெயரோடு தொப்ப்புள் கொடி மண்ணில் போலீஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை முகவரிகள் தேடிச் செல்லும் நாடற்றவர்களின் நாட்கள் வீடற்று அலைவதில் அபூர்வமில்லை கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன் இப்படியாக வேறு மொழி பேசுகின்ற அனைவரும் மொழியின் பெயரால் அழைக்கப்பட நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவோம் அவர்கள் எமது தொப்புள் கொடிகளென சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும் புரட்சி இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள் வீழ்கிறது அதிகாரப் பிரிவுகள் எங்களை நோகடித்து பயங்கரவாதிகளென வன்மம் தீர்க்கிறார்கள் பதாகைகளில் தொங்கும் எமக்கான தேசபிதாவை கொள்வனவு அரசியலி...

கானகி - சிறுகதை

Image
கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாளாய் பெய்த மழைத் தண்ணி தேங்கி நிற்குது. பொய்க்காலை வைச்சிட்டு தூக்கமுடியாமல் சேறு. கால் புதையுது. வாழ்வும் தான். கானகி நடந்து வந்து கொண்டிருக்கிறன். மழை துமிக்கத் தொடங்குது நீர் வெளியால நிண்டால் உள்ள போய் நில்லும் நனையவேண்டாம். நான் இரண்டு நிமிடத்தில் வந்திடுவன். ரோட்டில ஆர்மிக்காரர் மாதிரி நீதிமன்றத்தில எக்கச்சக்கமான சனம். மகிந்த தேர்தலில சர...

நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது

எனது  பூட்டி  நேற்றைக்கு தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டாள். ஒரு உயிரின் வாழ்வின் பேறு அவன் தாயகத்தில் உயிர் பிரிவது. நினைவிருக்கும் காலம் தொட்டு பூட்டப்பிள்ளைகளான நாங்கள்  அவளை   பூ அம்மம்மா என்று தான் கூப்பிடுவோம். தினமும் நெற்றி நிறைந்த வீபூதியோடு பூக்கன்றுகளுக்கே நோகாதபடி பூக்களை ஆயும் அவளின் முகம் தான் எனக்கெல்லாம் விடிகாலையாக இருக்கிறது. பூ அம்மம்மாவின் நிறைந்த சிரிப்பு எங்கள் குடும்பமே வணங்குகிற அம்மனைத் தான் பிரதிபலிக்கும். அவள் பாசமானவள். தேசத்தின் மாவீரனாகவும், போராளியாகவும் தனது   இரு பிள்ளைகளை விடுதலைப் போரில் பங்களிக்கச் செய்தவள். நான் முதன்முறையாக ஒரு மாவீரர் துயிலுமில்லத்திற்குள் இவளோடு இவளுக்குத் துணையாகத் தான் சென்றிருக்கிறேன். தனது மகனானவனின் நடுகல்லின் முன் நின்று நெஞ்சில் கைவைத்து கண்களில் நீர் சொரிய அழுத பூ அம்மம்மாவின் நனைந்து கிடந்த கண்கள் இன்று மூடிக்கிடக்கிறது.  நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது.  எத்தனையோ தொன்மம் நிறைந்த கதைகளை இரவு நெடுக சொல்லிக்கொண்டிருக்கும் அவளின் அந்த வெற்றிலை வாய் எனக்குள...

அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப வெளியாகும்

Image
எதிரியால் ஆக்கிரமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.- வே பிரபாகரன்  இந்து சமுத்திர பிராந்தியத்தின் கதாநாயக புவிப்பரப்பாக இருக்கிற இலங்கைத் தீவில் நிகழும் இனப்பிரச்சினையை வெறுமென குருடன் யானையைப் பார்த்தது போன்று பார்க்கிற போக்குகள் அபத்தமானது. நூறாண்டுகால இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை அதன் குரூரமான மனிதப் பேரிழப்புக்களை உலகம் உணரமறுத்தது போலவே அந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களாகிய நாமும் உணரவில்லை. தமிழீழர்கள் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்கான தொடர்ச்சியான செயற்பாடுகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவ மாற்றங்களோடு பயணிக்கிறது. அகிம்சை வழியிலான தமிழர்களின் போராட்டத்தை சிங்கள அதிகாரபீடங்கள் ஒரு நீண்ட நகைச்சுவைக் காட்சியைப் போலவே எடுத்துக்கொண்டனர். தந்தை செல்வா ஒரு உன்னதமான உறுதிப்பாடு கொண்ட தலைவர் என்ற போதிலும் அவரின் குரல் கொழும்பின் பவுத்த சக்கரங்களால் நசிக்கப்பட்டது. அவரை தவிர்த்தால் அதன் பின்னான தமிழ் மிதவாத அரசியல்வாதிகள் பலர் சளைக்காத ஒரு நகைச்சுவையாளர்களைப் போலவே கொழும...