அரசியல் சவங்களின் பிதாமகன்கள்




ஹிட்லரே எதிர்பார்த்திராத அசல் மகிந்த
ஸ்கோவிச் முட்கம்பிகளை துருவிலிருந்து
காப்பாற்றியதற்காய்  
ஹிட்லரின் ஆவி சிறிலங்காவை முத்தமிடும்

மகிந்தவின் நிஜத்திற்கும் ஹிட்லரின் ஆவிக்கும்
விசும்பும் உயிர்களின் மிரட்சி விருப்பம்
ஆம் இவர்கள்
பூமியை சவமாக்கும் பிதாமகன்கள்

நாஜிக்கள் இன்னும் இன்னும் புத்தனின்
கீழே பெருகி
ஹிட்லரின் மீசைக்கு தாமரைப் பூ
வைக்கிறார்கள்

மீசையில்லாத மகிந்தவின் முகத்தில்
ஹிட்லரின் மீசை அவ்வளவு பொருந்துகிறது

நாம் கொன்று புதைக்கப்படும்
இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறோம்
மரணம் வனப்பு மிக்கதாய்
மகிந்தவின் வெள்ளையாடையில் எழுதியிருக்கிறது

யூதர்களின் பிண நாற்றம்
எங்களது பிண நாற்றத்தில்
காணமல் போன போது
பூமி இரத்தத்துக்கு பழகிக்கொண்டது

ஹிட்லர் மகிந்தவை தன் சாயலில்
இருக்க வேண்டாமென
சொல்லுவதற்கு முன்
மகிந்தவின் சாயலில் ஹிட்லர் இருந்ததற்கு

கடவுள் புத்தன் சாட்சி.

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி