அகரமுதல்வனின் பான் கி மூனின் றுவாண்டா - கார்த்திக் புகழேந்தி

“எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். உரையாடல்கள் அரசியலுக்கு அவசியமானது. அதன் அடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். நான் உரையாடலை அரசியலின் அவசியமாய் அணுகுகிறேன். அதன் பரந்த வெளியும், ஜனநாயகமும் நாகரீகமான பரிணமிப்பின் சாட்சிகள். மூச்சு முட்டவைக்கும் பதில்களும், மறுத்து நிற்கும் பதில் கேள்விகளும் காலத்தின் உட்பொருள் கொண்டவை. அவைகள் நன்றென்றாலும், தீயவை என்றாலும் ஆழமாக நம்பவைக்கப் பட்டிருக்கும் அல்லது பழக்கப்படுத்தப் பட்டிருக்கும் எதிர்மறையான கருத்துக்களும், உருவாக்கங்களும் கேள்விக்கு உட்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்” குறிப்பிட்டுச் சொன்ன இவ்வார்த்தைகள்; ‘பான் கி மூனின் றுவாண்டா’ எனும் தன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அகரமுதல்வனுடையது. தனது இந்த சிறுகதை நூலின் வெளியீட்டுக்காக எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனை தலைமையேற்கச் செய்தமைக்காக அகரமுதல்வன் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதுபற்றி அகரமுதல்வன் அளித்த விளக்கமானது, இன்றைக்கு ஒரு தமிழீழத்தவனாக நான் நிர்க்கதிய...