Posts

செங்காந்தள் யாவும் சாந்தனைப் பாடும்!

Image
அ வரது குரல், தெய்விகத்தன்மையிலானது; எழுச்சிமிக்கது; கண்ணீரின் அணையுடைக்கும்  வல்லமைகொண்டது; போராளிகளின் தியாகத்துக்கு  விளக்கேற்றும் உன்னதம் வாய்ந்தது; தேசவிடுதலைக்காகத் தேயாத வரம்பெற்றது. அப்படியான சகாப்தக் குரலொன்றை சந்தனப்பேழையில் மூடிவிட்டது காலம். சாந்தன் என்றொரு எழுச்சிப்பாடகனை தமிழீழத் தேசம் இழந்துநிற்கிறது. இன விடுதலைக்காக, தமிழீழ வீதிதோறும் நின்று பரணிபாடிய குரலாயுதமும் ஈழத்தில் மவுனித்து விட்டது. சனச்  சமுத்திரத்தில் ஒலிவாங்கியைப் பிடித்தபடி மேடையில் தோன்றிப் பாடல் இசைத்த சாந்தனின் மரணத்தினால், நம் நிலத்தில் இசைக்கமுடியாத எத்தனையோ பாடல்கள் துயரத்தின் கம்பத்தில் அரைக்கொடியில் பறக்கின்றன. இனப்படுகொலை ஊழியில் முறிந்த முள்ளிவாய்க்கால் விருட்சத்தின் கிளைதனில் ஓய்வெடுத்த ஒரு பறவை, சிறகுதிர்ந்து சரிந்தது. சாந்தன் எனும் அந்தப்பறவை குரலெழுப்பி பாடிய இந்தப் பாடல், என் காதில் கேட்டபடியே இருக்கிறது.  ‘‘இந்தமண் எங்களின் சொந்தமண் - இதன்  எல்லைகள் மீறியார் வந்தவன் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு   நிம்மதி ஒன்றுதான் இல்லை – எனினும்  இந்தமண் எங்களின் சொந...

குற்றங்கள் பற்றிய வரைபடம் -1

Image
நான் கூப்பிட்டும் நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள் , நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை – பைபிள் இப்போது ஈழத்தில் பிரச்சனையில்லை தானே ?. புலிகளின் மாவீரர்  நாளைக்கூட அனுட்டிப்பதற்கு இலங்கையின் நல்லிணக்க அரசு அனுமதி கொடுத்திருக்கிறது . முன்னைய அரசிலும் பார்க்க இப்போதைய அரசு சிலோனில் உள்ள தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறது தானே ? இல்லையா ? இந்தக் கேள்விகளை நான் தமிழ்நாட்டில் எதிர்கொண்டபடியே யிருக்கிறேன் . என்னோடு கைலாகு செய்துகொண்டதன் பின்னர் கத்தியைச் செருகுவதைப் போல சில தமிழக சகோதரர்கள் இவ்வாறு கேட்பார்கள் . அவர்களின் அரசியல் புரிதல் சார்ந்தபிரச்சனையில் எழும்புகிற கேள்விகள் என்றாலும் , அது என்னைப் பொறுத்தளவில் ஆபத்தானது . இந்த மனநிலையை , அல்லது இந்தத் தோற்றம் யாரால் காண்பிக்கப்பட்டு கட்டமைக்கப்படுகிறது என்று ஆராய்ந்து செயற்படவேண்டிய தேவை ஈழத்தமிழர்களிடம் மட்டுமல்ல விடுதலை விரும்பிகள் அனைவரிடமும் இருக்கின்றது . கடந்த மாவீரர் தினம் கண்ணீரின் ஆர்ப்பரிப்பில் , கல்லறைகளை இனம் கண்ட தாய்மாரின் கருவறைகள் சரிந்தழுது முத்தமிட்ட சிலிர்ப்பான தருணங்களை ...

திணிப்பு பற்றிய கேள்வியும் விளக்கமும்

Image
நன்றேது ? தீதேது ? ஆளுமைகளுடனான உரையாடல்" என்கின்ற நூலில் ஆளுமைகளுடன் உரையாடல் மேற்கொள்ளும் அகரமுதல்வன் வலிந்து மூன்று விடயங்களை திணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. 1   ஈழ விவகாரத்தை பிராந்திய பிரச்சினை என்று சொல்வது.   2 இந்தியா ஈழ மக்களுக்கு தீர்வு வழங்க ஒரு வாய்ப்பு வராதா என்று தவம் இருப்பது போன்று பேசுவது. 3 ஜெயமோகன் தான் இலக்கிய கொம்பு என்பது போல மூன்று ஆளுமைகளுடனும் அவரின் உளறல் பற்றியே கேள்வி எழுப்புதல். இவைகளுக்கு அப்பால்அ கரமுதல்வனுக்கும் , மோக்லி பதிப்பகத்துக்கும் தமி ழ்ச் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. உரையாடல் என்கிற சற்று மறந்தே போன ஒன்றை சரியான , அவசியமான காலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது தொடர வேண்டிய ஒரு முக்கியமான அணுகுமுறையாகும். வேறு வேறு கோணத்தில் பயணிக்கும் குணா கவியழகன் , பத்திநாதன் போன்றோரின் உரையாடல்கள் புதிய வெளிகளை உருவாக்கும் தன்மையுடையவை.உணர்ச்சி பூர்வமான அரசியலையே பழகிக்கொண்ட தமிழ் சமூகத்தில் இவ்வுரையாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதுவே எனது விமர்சனமும் கூட நன்றி வாசு முருகவேல்  அன்பின் வாசு ம...

தலைகீழ்

Image
வணக்கம்! அகரமுதல்வன். உங்கள் மீது எனக்கு எள்ளளவு இருந்தமரியாதையும் நேற்றோடு காலியாகிவிட்டது. நீங்கள் லக்ஷ்மி சரவணக்குமார் என்பவரோடு எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் பிரதியை தலைகீழாக பிடித்தபடி வெளியிட்ட போட்டோவை லக்ஷ்மி சரவணக்குமாரின் fb யில் பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் மீது உங்களிருவருக்கும் இருந்த அரசியல் ரீதியான காழ்ப்புணர்வை இவ்வாறு வெளிப்படுத்தி உங்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இருவரும் ஜெயமோகனின் ஒரு எழுத்தையும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆன்றோ ராஜ் கன்னியாகுமரி.  மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை –மாவோ ஆன்றோ நீங்கள் என் மீதுகொண்டிருந்த எள்ளளவு மரியாதை காலியாகியது குறித்து எனக்கு எந்தக்கவலையும் இல்லை. எள்ளுக் காலியாகும் காலத்தில் எள்ளளவு மரியாதையும் காலியாகும் என்பது யதார்த்தம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் தலைகீழாய் வெளியிட நான் பெற்றுக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்ததும் இந்தப் பதிவை எனக்கு எழுதி மின்னஞ்சல் செய்திருக்கிறீர்கள். ஜெ...