இந்த மண் எங்களின் சொந்த மண்

இந்தமண் எங்களின் சொந்தமண் இந்தமண் எங்களின் சொந்தமண் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை. - புதுவை இரத்தினதுரை புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மிகவுறுதியான பங்களிப்புக்கள் மரியாதைக்குரியவை. அயராத உழைப்பும் ஓய்வற்ற வாழ்க்கைக்குள்ளும் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவை வழங்கி வந்தவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வீழ்ச்சியைக் கண்டதோடு களத்தில் வாழ்ந்த மக்கள் மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிய 2009 க்கு பிறகு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல், அல்லது அவர்களின் விடுதலைக்கான உழைப்பு என்பது என்னவாகி உருமாற்றம் அடைந்துவிட்டது என்பது தான் கவலைக்குரியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை களத்தில் இருந்து உயிர் தப்பிய மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட அதே நேரம் இறுதி வரை போர்க்களத்தில் எதிரியோடு சமராடிய போராளிகள் தடுப்புமுகாம் என அழைக்கப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு முற்றாக வாழ்வு சிதைக்கப்பட்...