மகிந்த -மைத்திரி – அமெரிக்கா
இனவாத உளவியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களிடம் நிலவி வருகின்ற ஒற்றுமை,உடன்பாடுகள் போன்றவை அவர்களிடம் ஆழவேரூன்றிப் போய் கிடக்கும் படுகொலைச்சிந்தனையிலிருந்து உருப்பெற்றவை. அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் மீது வரலாறு நெடுக அடக்குமுறைகளை நிகழ்த்தி இலங்கைத்தீவு ஒரு பவுத்த நாடு – அது சிங்களர்களுக்கே சொந்தமானது என நிறுவ முயலும் சிங்களத் தலைவர்களின் குரல்கள் ஓரினத்தன்மை கொண்ட ஆட்சியை வலியுறுத்துவதாக மட்டுமே அமைந்திருக்கிறது. இந்த இனவாதக் கோட்பாட்டின் நவீன ஆட்சியாளராகவிருந்து இனப்படுகொலையினை நிகழ்த்திய மகிந்த இனப்படுகொலைக்கு பின்னராக நிகழ்ந்த இரண்டாவது தேர்தலில் தோல்வியுற்றமை பல்வேறு நெருக்கடிகளை தமிழர்களின் அரசியல் நகர்வுகளில் ஏற்படுத்திவிட்டது என்று உறுதியாக நம்பமுடியும். வெறுமென மகிந்தவிற்கு எதிரான நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு அளித்த ஆதரவே இன்று மகிந்தவை தோல்வியடைய செய்திருக்கிறது. தமிழர்களின் வாக்குகளே மைத்திரியை வெற்றியடைய செய்திருக்கிறது என்றாலும் தன்னை வெற்றி அடையச் செய்த தமிழர்களுக்கு மைத்திரி எதையும் செய்துவிடப்போவதில்லை. தமிழர்களின் அரசியல்...