Posts

என்னை நானே வருத்தத்தொடங்குவதன் மூலமாய் என் எழுத்தும் தொடங்குகிறது - அகரமுதல்வன் -நேர்கண்டவர் எழுத்தாளர் தமயந்தி

Image
      தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இந்தச்சூழலில் பிரிந்திருக்கும் தாய்நாடு பற்றிய நினைவுகள் உங்களை வருத்துவதில்லையா? என்னைச் சூழவும் எழுந்து வீசும் ஒவ்வொரு நொடியும் தாய்நாட்டின் நினைவுக்கிளைகளில் தான் தொங்கிநிற்கிறது. பகல் நலிந்து இரவு வருகையில் கைவிட்டுவந்த வீட்டின் முற்றத்து மணல் என்னை மூடுகிறது.புலம்பெயர்வை மாதிரி ஒரு சித்ரவதையைத் தான் தாங்கமுடியாதுள்ளது. புலம்பெயர்ந்த அகதியின் விழிநீர் துயரங்களை புரிந்துகொள்ளும் உலகத்தாரை இன்னும் சந்திக்கவே இல்லை. நான் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்வதையும் கொடுந்துயராகவே பார்க்கிறேன். வீட்டின் கிணற்று நீரைக் குடிக்கவேண்டுமென்று எழும்   தாகத்தை எந்தக் கங்கையின் நீர் கொடுத்தும் தணிக்கமுடியாது. நாளும் பொழுதும் தாய்நாட்டின் திசைநோக்கி எழுந்து பறக்கவே எத்தனிக்கிறேன்.சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டும். ஊரின் தொடக்கத்திலேயே எங்கள் வீடு இருக்கிறது. மணல் முற்றம். எப்போதும் காற்றுத் தரும் மரங்கள். நான் அந்த மரத்தின் கீழே அமைதியாக நின்றுகொண்டு பின்நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் என்னை விட சிறுவயதான பெடியங்களை பார்த்துக்கொண்டிர...

தேர்

Image
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்  நாடு பெரிதென்று வாழுங்கள் –வே .பிரபாகரன் தமிழ்தேசியர்களே ஒன்றுகூடுங்கள்! யாழ்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் இருக்கும் ஊரான வரணி வடக்கு அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயில் தோரோட்டத்தில் நடந்திருக்கும் தீண்டாமை என்கிற சமூக குற்றத்தை நினைத்தால் அருவருக்கிறது.ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களும் சேர்ந்து கோவிலின் தேரை இழுத்துவிடுவார்கள் என்பதற்காக பக்கோவை வைத்து நகர்த்தியிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஒடுக்கும் உயர்குடி சமூகம்.எத்தனையோ அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்தது மட்டுமில்லமால் பெரியளவிலான இனப்படுகொலையை எதிர்கொண்டும் ஈழத்தமிழர்களிடம் இவ்வாறான சாதியவேறுபாடுகளும்,தீண்டாமைக் குற்றங்களும் இருக்கிறதென்றால் நாம் சிங்கள இனவாதிகளிடம் இருந்து விடுதலையை அடையமுடியாது. தேசியத்தின்  பிரக்ஞையால் ஒன்றுதிரண்டு போராடிய ஒரு செம்மார்ந்த இனத்தின் சாதியப்பிளவுகளும்,அதன் தீண்டாமைக் கொடூரங்களும் இவ்வாறு மீண்டும் துளிர்விடுமாயின் நாம் தேசவிடுதலையை மட்டுமல்ல சமூக விடுதலையையும் அடையமுடியாது.இந்தத் தீண்டாமைக்கு எதிராக நாம் அனைவரும்...