Posts

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

Image
“முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்” தமது கூர்மையான ராஜதந்திரத்தை புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும்                   சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தியிருக்கிறார்கள். சர்வதேச             பெளத்த வெசாக் தினநிகழ்விற்கான இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின் மூலம் சிங்கள                       ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும்  அரசியலர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவழியைச்     சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைப்பதனூடாக இலங்கை- இந்திய உறவென்னும்             அரூபத்திற்கு தங்க முலாம் பூசியிருக்கிறது மைத்திரிபால                   சிறிசேன அரசு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்கு  சென்ற இந்தியாவின் பிரதமர் அந்த வரலாற்று துயரம் குறித்த சிறுசொல்லைக்கூட எங்கும் உதிர்க்க்கவில்லை. காலம் காலமாக   ...

குற்றங்கள் பற்றிய வரைபடம் - 2

Image
தாயகத்தில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் வீதிகளுக்கு வந்ததையடுத்து தமிழ் அரசியல்வாதிகள் குலைநடுங்கிக் கிடக்கிறார்கள். இந்த குலை நடுக்கம் அப்பாவி மக்களின் கண்ணீருக்கு பயப்பிடும் அநீதியாளர்களுக்கு வரவேண்டியதுவே. நடுங்கும் தமிழ் அரசியலாளர்கள் யாவருமே அநீதியாளர்கள் தான். மாபெரும் யுத்த அழிவிலிருந்து  பெயரளவில் உயிர் தப்பிய மக்களின் அவலங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத   தமிழ் மிதவாதத்தின் கபடச் சாயம் தன்னெழுச்சியான மக்கள் போராட்டக் களத்தில் கரைந்து கொண்டேயிருக்கிறது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்தொடங்கியதை சிங்கள அரசியலாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ   அதைவிட பன்மடங்கு அதிகமாக மக்களையும் மக்கள் போராட்டத்தையும் வெறுப்போடும் ,அச்சத்தோடும் அணுகும் தமிழ்அரசியலாளர்கள் இப்போது நேரடியான அர்த்தத்தில் மக்களுக்கு எதிரியாக   உருப்பெற்றிருக்கிறார்கள். ஆயுதப்போராட்ட எழுச்சிக்கு முன்னர் தனிநாடு கோரி மேடைகள் தோறும் புரட்சியாளராய் முழங்கிய மாவை சேனாதிராஜா இன்று சமஸ்டி கோரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் சிரித்தபடி காட்சியளிக்கிறார். புதியதாக தமிழ் அரசியலுக்குள் புகுந்த ...

மோன் (சிறுகதை )

Image
கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்கிறது ஒருத்தர் தான். சுட்டுக்கொல்லப்பட்ட ஜெயத்தானை விட இன்னொரு தம்பி இயக்கத்துக்கும் இந்திய ஆர்மிக்ககாரருக்கும் இடையில் நடந்த சண்டையில் மாட்டுப்பட்டு சுன்னாக சந்தையில ஷெல் விழுந்து செத்துப்போயிட்டாராம். அம்மம்மாவுக்கு ஜெயத்தான் மாமாவோட சாவில இயக்கம் மேல கடுமையான கோபம் இருந்தது தான் என்றாலும் மனிசி இயக்கத்தை யாரிட்டையும் விட்டுக்குடுக்காது. பிரபாகரனை...

பள்ளத்தாக்கு - சிறுகதை

Image
தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது . சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது . தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள் . முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது . தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க . இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை . முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது . வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன . அமைதி ! யாவும் முழுமையடையும் அமைதி . அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள் . சூடு என்றேன் . உதட்டால் ஊதினாள் . அவள்   உதட்டால் ஊதி சூடு குறையுமா ? அவள் ஊதுவதை மூன்றாவது தடவையோடு நிறுத்திவிட்டாள் . நல்லவேளை நான் சாம்பலாகியிருப்பேன் . புறாக்கள் கூட்டுக்குள் இருந்து கொண்டு சத்தமிட்டன . சித்தம் எழுச்சியாகி யுகத்தின் ஓசையில் அடைகிறது . ஒன்றன் மேல் ஒன்றாய் அவள் சுடர் என்னில் துடித்து வெடித்தது . நான் நிரம்பியிருந்தேன் ...