எப்போது தோற்றார் மஹிந்த ?

ஒட்டுமொத்த இலங்கைத்தீவிற்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தென்னிலங்கையின் அரசியல் காட்சிகள் களேபர கைகுலுக்கல்களோடு தோன்றத்தொடக்கிவிட்டன. “நல்லிணக்க அரசு” என்றழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினரின் ஆட்சி கவிழ்க்கப்படலாம் எனவும் எதிர்வுகூறல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.போததற்கு அரசியல் அவதானிகள் சிலர் மஹிந்தவின் மீள் எழுச்சி அரசியல் காலமாக இதனைக் கருதினர்.ஆனால் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து அரங்கேறும் காட்சிகள் யாவும் ஓராயிரம...