“பான் கீ மூனின் றுவாண்டா” ஈழத்துப் போரியல் வாழ்வின் வலியை நேரே அனுபவிக்க முடிகிறது.-கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழு த்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை. இம்முறை “பான் கீ மூனின் றுவாண்டா” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தின் கிழக்குப் பதிப்பகம் வழியாக வெளிவந்த பின்னர் அதை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ முக்கிய காரணமே அந்தத் தலைப்புத் தான். பின்னர் இந்தச் சிறுகதைகளை வாசிக்க முன்னர் ஆர். அபிலாஷ் வழங்கிய கச்சிதமான முன்னுரை தான் அகரமுதல்வனின் எழுத்தின் நிறத்தைக் காட்டியது. சொல்லப் போனால் இந்தச் சிறுகதைத் தொகுதியை முழு மூச்சில் வாசித்து முடிப்பதற்கும் ஆர்.அபிலாஷின் சிறப்பானதொரு பகிர்வே காரணியாயிற்று. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை முற்போக்கு எழுத்தாளர் காலத்தில் இருந்து வாசித்து வருபவன். 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட "விண்ணும் மண்ணும்" என்னும் சிறுகதைத்தொகுதி யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), ச...