தமிழ் மக்களை இனித் தமிழ்தேசியம் தான் காப்பாற்ற வேண்டும் - அகரமுதல்வன்

உலக அரசியற்போக்கில் பரவலாக கவனம் பெற்றிருக்கும்”தேசியம்” என்கிற பதத்தை தவிர அதன் உள்ளீடான அரசியல் அர்த்தத்தை தெரிந்திருப்பவர்கள் நம்மில் மிகக் குறைவானவர்களே. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் தோன்றிய தேசியமெனும் பதத்தின் இரத்தவோட்டங்களையும், அதன் இதயத்துடிப்பையும், அவசியத்தையும் பல ஆயிரம் ஆண்டுகால தொன்மைமிகுந்த தமிழினம் அறிந்திருக்கவேண்டும். அனைவரின் சுய உரிமையில் தொடங்கி இனம்,நாடு என்ற கூட்டுச்சுயம் வரை விரிந்துநிற்கிறது தேசியம். ஒரு தனிமனிதனுக்கு சுயம் இருப்பதைப் போலவே ஒரு இனத்திற்கும் சுயமிருக்கிறது. அதனைப் பாதுகாப்பதைத் தான் சுயநிர்ணயம் என்கிறோம். இந்த நூற்றாண்டில் மானுடம் காவுவாங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் இருந்து எழுதப்பட்டு வெளியான இந்த நூல் வரலாறு. அத்தோடு தமிழீழத் தேசியத்திற்காக எழுந்த ஆயுத ரீதியிலான விடுதலைப்போராட்டத்தின், அஸ்தமனக்காலத்தில் எழுதப்பட்ட உதயத்தின் வெளிச்சமாகவுமிருக்கிறது. அநீதியால் அலைக்கழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் தேசியத்தையும் ஜனநாயகத்தையும் குறித்து எழுதவல்ல, மனோ...