குற்றங்கள் பற்றிய வரைபடம் - 2

தாயகத்தில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் வீதிகளுக்கு வந்ததையடுத்து தமிழ் அரசியல்வாதிகள் குலைநடுங்கிக் கிடக்கிறார்கள். இந்த குலை நடுக்கம் அப்பாவி மக்களின் கண்ணீருக்கு பயப்பிடும் அநீதியாளர்களுக்கு வரவேண்டியதுவே. நடுங்கும் தமிழ் அரசியலாளர்கள் யாவருமே அநீதியாளர்கள் தான். மாபெரும் யுத்த அழிவிலிருந்து பெயரளவில் உயிர் தப்பிய மக்களின் அவலங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத தமிழ் மிதவாதத்தின் கபடச் சாயம் தன்னெழுச்சியான மக்கள் போராட்டக் களத்தில் கரைந்து கொண்டேயிருக்கிறது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்தொடங்கியதை சிங்கள அரசியலாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ அதைவிட பன்மடங்கு அதிகமாக மக்களையும் மக்கள் போராட்டத்தையும் வெறுப்போடும் ,அச்சத்தோடும் அணுகும் தமிழ்அரசியலாளர்கள் இப்போது நேரடியான அர்த்தத்தில் மக்களுக்கு எதிரியாக உருப்பெற்றிருக்கிறார்கள். ஆயுதப்போராட்ட எழுச்சிக்கு முன்னர் தனிநாடு கோரி மேடைகள் தோறும் புரட்சியாளராய் முழங்கிய மாவை சேனாதிராஜா இன்று சமஸ்டி கோரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் சிரித்தபடி காட்சியளிக்கிறார். புதியதாக தமிழ் அரசியலுக்குள் புகுந்த ...