திணிப்பு பற்றிய கேள்வியும் விளக்கமும்

நன்றேது ? தீதேது ? ஆளுமைகளுடனான உரையாடல்" என்கின்ற நூலில் ஆளுமைகளுடன் உரையாடல் மேற்கொள்ளும் அகரமுதல்வன் வலிந்து மூன்று விடயங்களை திணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. 1 ஈழ விவகாரத்தை பிராந்திய பிரச்சினை என்று சொல்வது. 2 இந்தியா ஈழ மக்களுக்கு தீர்வு வழங்க ஒரு வாய்ப்பு வராதா என்று தவம் இருப்பது போன்று பேசுவது. 3 ஜெயமோகன் தான் இலக்கிய கொம்பு என்பது போல மூன்று ஆளுமைகளுடனும் அவரின் உளறல் பற்றியே கேள்வி எழுப்புதல். இவைகளுக்கு அப்பால்அ கரமுதல்வனுக்கும் , மோக்லி பதிப்பகத்துக்கும் தமி ழ்ச் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. உரையாடல் என்கிற சற்று மறந்தே போன ஒன்றை சரியான , அவசியமான காலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது தொடர வேண்டிய ஒரு முக்கியமான அணுகுமுறையாகும். வேறு வேறு கோணத்தில் பயணிக்கும் குணா கவியழகன் , பத்திநாதன் போன்றோரின் உரையாடல்கள் புதிய வெளிகளை உருவாக்கும் தன்மையுடையவை.உணர்ச்சி பூர்வமான அரசியலையே பழகிக்கொண்ட தமிழ் சமூகத்தில் இவ்வுரையாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதுவே எனது விமர்சனமும் கூட நன்றி வாசு முருகவேல் அன்பின் வாசு ம...