அவலம்

ஒரு நல்ல மனிதன் வசதியிருக்கும் பாதையைத் தேடமாட்டான். மாறாக கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான் – பிடல் காஸ்ரோ “தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று கம்பீரமாய் அமர்ந்திருப்பதை காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும் சிவந்த தீவு அறியும்” (டாங்கிகளில் சரியும் முல்லை நிலா கவிதைத்தொகுதியிலிருந்து ) இரத்தம் சொரியும் தமிழ் மக்களின் பக்கமிருந்து உருவாகியிருப்பவன் நான். எல்லாவிதமான தத்துவங்களை விடவும் நடைமுறை மேலானது. எப்போதும் தத்துவங்கள் நடைமுறையால் சரிபார்க்கப்படவேண்டும். தத்துவம் நடைமுறையால் தான் உயிர்பெற முடியும். ரத்தம் சொரியும் பரிசோதனை எலிகளாக்கப்பட்டிருக்கும் அனுபவத்தைக் கொண்ட தமிழீழ மகன் நான். இந்தத் துயரிலிருந்து விடுபடுவதற்கு துயரத்தின் அடிச்சுவடுகளை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. ஒவ்வொரு தமிழீழ குடிமகனுக்குமுண்டு. அதுமட்டுல்லாமல் தமிழீழத்துயரத்தை வெறும் உணர்ச்சிபூர்வமான தளங்களில் இருந்து பார்க்காமல் அதற்கான அறிவியல் காரணங்களையும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் யதார்த்தத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தி...