மகிந்தவின் அதிகாரத் தோல்வி தமிழர்களின் அரசியல் பின்னடைவு – அகரமுதல்வன்
தமிழீழர்கள் மீதான இனப்படுகொலைக்கு பிறகான காலத்தில் கொழும்பில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு அரசியல்,அதிகார மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அனுகூலங்களும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஜனவரி 8 ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த அடைந்த தோல்வியானது நேரடியான பகைவுணர்வில் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தாலும் அது அரசியல் ரீதியான பாதகமான முடிவாக மாறிவிட்டது. அரசியல் என்பது பல்வேறு சுழியோடித்தனங்கள் கொண்ட கூர்மையான நடவடிக்கை என்பதை தமிழர் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நடந்த அதிபர் தேர்தலில் தமது ஆதரவை மைத்திரி அணிக்கு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளால் மைத்திரியை வெற்றியடையச் செய்தது. எந்தவொரு சிங்களரை கொழும்பு அரசியலில் வெற்றியடையச் செய்வதன் மூலமாயும் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை என்பதை தமிழ் தலைவர்கள் கடந்த கால வரலாறுகளின் வழி பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மகிந்த அதிபராக நீடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியில் தமிழர்கள் பக்கம் இருந்த ஆதரவையும் நீதி கோரும் தீர்மானங்களையும் மிக லாவகமாக நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம் எ...