சிங்கள நீதி எமக்கு வேண்டாம்,சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்.
ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்றும் அதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாலும் சிறிசேனாவாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத்தமிழர்களின் வாக்குக்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். இராஜபக்ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிய புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான புரட்சியாகும். பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்ச அரசாங்கம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில ; தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில் ராஜபக்ச பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குக்களால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில் அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் இராஜபக்ஷ விலகிச் செல்லவும் ஐ.தே.கவுடன் ச...