தீயெனப் பெய்யும் இரத்தக் குறிப்புகளில் கருகும் வாசக இமைகள் - கணேசகுமாரன்
இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் படுகொலைகள் குறித்துக் கவலைப்படுவோம். வலி உணர்த்தியாய் செயல்படும் அகரமுதல்வனின் கவிதைகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளப்போகிறோம். வெறும் பார்வையாளராய் இருந்து நாம் உணர்ந்த வலி பங்கு கொண்டவனின் வலியில் அணுவளவு கூட இருக்காது என்னும்போது நாம் கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு படுகொலைகள் குறித்து கவலைப்படுவோம். நம்மால் முடிந்தது அது மட்டுமே. இன்னொன்றும் செய்யலாம் . பரவலாக விதைக்கப்பட்ட அகரமுதல்வனின் துக்கத்தின் அடியாழத்திலிருந்து அவன் கையைப் பற்றிக்கொள்ளுதல் மட்டுமே. கண்களற்றவனுக்கு நல்ல பிரம்பும் நாடற்றவனுக்கு நல்ல துவக்கும் முக்கியம். இல்லையென்றானபின் இவன் கொலை செய்யப்பட்டான். முதலில் நிர்வாணப்படுத்துதலில்...பின் ஆசன வாயிலில் கம்பிகள் நுழைத்து...பின் வாயில் சிறுநீர் கழித்து...இறுதியில் அவன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் பிழைக்கவில்லை. சமூகத்தில் பலரும் பலவிதத்தில் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலும் கவிஞர்கள் கொலை செய்யப்பட காரணமே தேவையில்லை. தொகுப்பு முழுவதும் அகரமுதல்வன் கொலை செய்யப்படும் விதங்கள் எவ்விதத்திலும் கற்ப